ஒரு கொத்து உசுரு
அடியே செவத்த புள்ள ...........
ஒத்த பார்வையிலே
உசுர வாங்காதே
சித்த நேரம் என்னைய
சாவ வைக்காதே !
உன்
தெத்துப் பல்லுல
சுத்துதடி என் உலகம்
என்
வெத்து மனசுல
புதுசா ஒரு கலகம்
உன் சிரிப்புல
கெறங்குது என் ஆவி
எம் மனசக் கெடுத்த
நீ பாவி !
உனக்குன்னு தர
ஒண்ணுமில்ல
நா உசுரோட இருக்கறது
உண்மையில்ல !
சாதி என்னடி சாதி
அடுத்த சித்தரையில
நீ எம் பொஞ்சாதி !
உங்கப்பன் கிட்ட
மட்டுமில்லடி சொத்து ,
எங்கிட்டயும் இருக்குது
உசுரு ஒரு கொத்து
உசுரு ஒரு கொத்து !
Ji nalla irukku... ana itha pradeep avanoda face book la publish panni irukkan... ithu ungalin padaippa allathu avanudaiyatha?
ReplyDelete