Skip to main content

Posts

Showing posts from April, 2014
  நிறுத்தத்தில் என்னுடன் நின்று கொண்டிருந்தவன் தயங்கியபடி என் முகம்பார்த்தான் ! நல்லவேளை, பேருந்து வந்துவிட்டது !
                                                              இரங்கற்பா   நானெழுதிய இரங்கற்பாவையும் சேர்த்தே தீமூட்டுகள் ! ஏனெனில் அதை வாசித்துவிட்டு சில கைதட்டல்களை எதிர்பார்த்திருந்தேன் !  
  அசிங்கங்களை மிதித்து வந்த என் செருப்புகளை வீட்டுக்கு வெளியே வாசலில் விட்டாயிற்று ! இந்த செருப்புகளை அசிங்கங்களுக்கு இட்டுச்சென்ற என் கால்களை என்ன செய்ய ?
ஆம்லெட் போட்ட அதே கல்லில்தான் எனக்கான தோசையும் ஊற்றப்பட்டது  ! நான் சைவமென்பதால் சாம்பார்     கட்டச்சொன்னேன் !
அவன் சொல்லிக்கொண்டிருப்பது ஏற்கனவே எனக்குத்தெரிந்திருக்கிறது ! ஆனாலும் நான் தெரியாதது போல் கேட்டுக்கொண்டிருக்கிறேன் ! தான் சொல்லிக்கொண்டிருப்பது ஏற்கனவே எனக்குத்தெரிந்ததென்பது அவனுக்கும் தெரிகிறது ! ஆனாலும் அவன் சொல்லிக்கொண்டிருக்கிறான் ! இவ்வாறாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் !
  அந்த உயர்தர சைவ உணவகத்தின் சமையற்காரன் சைவமில்லை  !
பிழைப்பு  அலாரம் அடித்தது ! திடுக்கிட்டெழுந்தேன் ! சமையலறையில் அம்மா ! உறக்கத்தில் அப்பா ! ஏழுமணிக்கு எக்ஸ்பிரஸ் ! இரவல் வாங்கிய இரவுப்பணி,  இன்றைக்கு மட்டும் ! கொதித்த வெந்நீர் அளவாயச்சுட்டது ! எனக்குப்பிடித்த எழுமிச்சம்பழ சாதம் மணத்தது, மதியத்திற்கு ! இரண்டு இட்டிலிக்கு மேல் இறங்கவில்லை ! அம்மா கொடுத்த தேநீரில் கூடுதலாக சீனி ! அப்பாவை எழுப்ப வேண்டாம் என்றுவிட்டேன் !  என் அடுத்த வருகை அநேகமாக தீபாவளிக்கு ! காசு ஏதும் வேண்டுமா என்றாள் அம்மா ! இருக்கிறது என்றேன் ! பேருந்துநிறுத்தம் வரை பயணப்பையைப் பிடிவாதமாய் வாங்கிக்கொண்டு கூடவே வந்தாள் ! கோயமுத்தூரில் இருந்து ஜாதகம் வந்துள்ளதாம் ! பார்க்கவேண்டுமாம் ! கேட்டுக்கொண்டேன் ! அடுத்தமுறை வரும்போது கூடுதலாக  விடுப்பு எடுத்து வருபடி கூறினாள் ! சரியென்றேன் ! பேருந்து வந்தது ! விடைபெற்றுக்கொண்டேன் ! பேருந்துக்குள் எனக்கொரு இருக்கை உறுதியானதை உறுதிசெய்த அம்மாவின் முகத்தில் சின்னதாய்த் திருப்தி ! ரயிலேறியதும் போன் வரும் !
நாம் கணிணி   உலகையே இயக்குபவர் போல் நாம் அந்த கணிப்பொறியின் முன்பு அமர்ந்திருக்கிறோம் ! நம் புருவமத்தியில் சிந்தனை முடிச்சு ! கன்னக்கதுப்புகளில் சிந்தனை இறுக்கம் ! தாடைகளில் சிந்தனைகளின் மெல்லிய அசைவு ! இப்படியாக ..... நம் இன்னபிற க்களில் சிந்தனையின் இன்னபிற க்கள் ! உற்றுப்பார்த்தால் நம் தலையைச்சுற்றி ஒளிவட்டம் தெரியலாம் ! ஒளிச்சதுரமாகவும் அது இருக்கலாம் ! நாம் ஜீவசமாதி அடைந்திருக்கவில்லை என்பதை அவ்வப்போதான நம் கனைப்பு உறுதிப்படுத்திவிடுகிறது ! நாம் செய்வது ஒரு வகையான அறிதுயில் ! சிலபோது நம் முகத்தில் புன்னகை அரும்புகிறது ! அந்தப்புன்னகை கடவுளின் புன்னகையை ஏறத்தாழ ஒத்திருக்கிறது !  அநேகமாக நாம் மின்கட்டணம் செலுத்திக்கொண்டிருக்கலாம் ! ஒரு கிசுகிசுவைப் படித்துக்கொண்டிருக்கலாம் ! வீடியோ கேம் ஆடிக்கொண்டிருக்கலாம் ! ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருக்கலாம் ! திரையைப் பார்த்த மேனிக்குத் தூங்கிக்கொண்டிருக்கலாம் ! ஆனால் அங்கேயிருந்து பார்த்தால் நாம் சாட்சாத் புத்தர் தான் ! சிந்தனை வயப்பட்ட கணிணி புத்தர் ! நம
தள்ளுவண்டிக்கடைக்காரன்   அவனுக்கு என் பேர் தெரியாது ஊர் தெரியாது ஆனாலும் அவனுக்கு என்னை அடையாளம் தெரியும் ! =========================================== அந்த அழுக்கு நோட்டை அவனுக்குத் தர மனமில்லை ! =========================================== தரம் அதிகமில்லை ! சுவை அதிகமில்லை ! ஆனாலும் அந்த உணவு எங்களுக்குப் பிடித்திருக்கிறது ! =========================================== ஏழு மணிக்கெல்லாம் கடை திறக்கிறான் ! எப்போது கண் விழித்திருப்பான் ? =========================================== அவன் கடை எங்களின் ' அம்மா உணவகம் ' ! =========================================== சில நேரங்களில் சில்லறைகளுக்கு பதில் புன்னகைகள் ! =========================================== தொடர்ந்தாற்போல் ஒரு வாரம் விடுமுறை ! ஒரு வார்த்தை அவனிடமும் சொல்லிவிட்டு வந்திருக்கலாம் ! =========================================== கடன் சொல்பவர்கள் பிச்சைக்காரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் என அவனுக்கு மூன்று எதிரிகள் ! =========================================== அந்தக்கடையால் எங்கள் பிழைப்பும் ஓடுகிறது ! ===============
கடைசிமழை   அந்தக்கடைசி மழையை, யாராவது  திட்டியிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், சிலர்  நனைந்திருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், சிலர் நனையத் தவறியிருக்கலாம் ! அந்தக்கடைசில் மழையில், ஒரு புணர்வு நடந்திருக்கலாம்  ! அந்தக்கடைசி மழையில், ஒரு கப்பல் விடப்பட்டிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், யாராவது செத்துப் போயிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு பிரசவம் நிகழ்ந்திருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், ஒரு காதல் மலர்ந்திருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு குடை தொலைந்திருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு குரல் அடங்கிப் போயிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு திரைப்படம் ரசிக்கப்பட்டிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், ஒரு தேநீர் சுவைக்கப்பட்டிருக்கலாம்  ! அந்தக்கடைசி மழை இந்த உலகத்தின் கடைசி மழையாகவும் இருக்கலாம் ! சொல்ல முடியாது !
சுயேட்சை சின்னம் அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே ! உலகிலேயே எளிய சின்னம் எங்கள் சின்னம் ! யாருக்குமே தெரியாத சின்னம் எங்கள் சின்னம் ! போஸ்டரே அடிக்காத சின்னம் எங்கள் சின்னம் ! யாரையுமே  திட்டாத சின்னம் எங்கள் சின்னம் ! யாருமே திட்டாத சின்னம் எங்கள் சின்னம் ! தேர்தல் அறிக்கையே இல்லாத சின்னம் எங்கள் சின்னம் ! இளைஞர்களே ! எங்கள் சின்னத்திற்கு ஓட்டுப் போட்டால் உங்களுக்கு ஒரு பிகர் கிடைப்பாள் ! கேயாஸ் தியரிப்படி அது சாத்தியமாகும் ! குடும்பத்தலைவர்களே ! எங்கள் சின்னத்திற்கு ஓட்டுப் போட்டால் கடனில் இருந்து விடுபடுவீர்கள் ! உங்கள் சார்பாக நாங்கள் சத்ரு சம்ஹார யாகத்தில் கலந்து கொண்ட கையோடு அப்படியே வருகிறோம்  ! வாக்காளப் பெருமக்களே ! போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாத சின்னம் எங்கள் சின்னம் ! கையூட்டு வழங்காத சின்னம் எங்கள் சின்னம் ! பிரியாணி தராமல் உங்களுக்கு வயிற்று வலியிலிருந்து விடுதலையளித்த சின்னம் எங்கள் சின்னம் ! குவாட்டர் தராமல் உங்களுக்கு தலை வலியிலிருந்து விடுதலையளித்த சின்னம் எங்கள் சின்னம் ! நீங்கள் கழ