Skip to main content

Posts

Showing posts from September, 2012
  சுஜி வந்திருக்கிறாள் ( சிறுகதை ) சுஜித்ரா , முன்னைக்கு இப்போது கொஞ்சம் பொலிவோடு இருந்தாள் . தோலில் மினுமினுப்பு ஏறியிருந்தது . ஆரம்பத்தில் அவள் மாநிறமாய் இருந்தவள் என்பதே மறந்து போய் , அவள் இயல்பான நிறமே சிவப்பு தான் என்பது போல இப்போது ஆகிவிட்டிருந்தாள் . எல்லாம் கர்ணாவைக் கைபிடித்த பிறகு வந்த தேஜஸ் . திக்குத் தெரியாத காட்டில் , கரடுமுரடு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தவளை , சட்டென்று யாரோ கைப்பிடித்து இழுத்து வந்து சொர்க்கத்தில் போட்டது போல இருந்தது . கர்ணாவைத் திருமணம் செய்து கொண்ட போது , சுஜித்ராவுக்கு வயது இருபத்தி ஐந்து . சுஜி , தன் மூக்குக்கண்ணாடியை நன்றாகப் பொருத்திக் கொண்டாள் . இப்போதெல்லாம் இது இல்லாமல் நன்றாகக் கண் தெரிவதில்லை . வயது நாற்பதை நெருங்குகிறதல்லவா ! ஆனாலும் , அவளைக் கடக்கும் ஆண்கள் ஒருகணம் அவளை உற்றுப் பார்த்துவிட்டே கடப்பதில் அவளுக்கு உள்ளூரப் பெருமிதம் தான் . பெருமிதமில்லை என்று உண்மையைப் பூசி மெழுகுவானேன் ? கர்ணாவுக்கு இதுபோன்ற அபத்தங்கள் பிடிப்பதில்லை . அவன் அவளை மிக மி