கொடிகள் இன்னும் இருக்கின்றன
இப்போதெல்லாம் "போர் "
"வாய்களால் " நடக்கிறது !
பரிணாம வளர்ச்சியில்
போர்களங்கள் இப்போது
" பேசு களங்கள் " !
இங்கு
வார்த்தைகளை
வீசி வீசித்தான்
வஞ்சங்களைத் தீர்க்கின்றனர் !
சுழற்சியின்
வீச்சில் உள்ளது
வெற்றிக்கான சூட்சமம் .
அப்போது வாள்
இப்போது நாக்கு !
இங்கு அதிகமாய்த்
திட்டுபவன் தலைவனாகிறான்
திட்டப்படுபவன் தோற்றுப்போகிறான் !
அன்று
அரசனைச் செலுத்தினர்
தேரோட்டிகள் !
அதற்கு மாற்றாய்
இன்று
சுவரொட்டிகள் !
அன்று
படை பலம் கூட்ட
வீட்டுக்கொரு பழியாடு !
இன்று
வீதிகளில் நடக்கிறது
கோலாகல மாநாடு !
"அறிக்கைகளின் "
தந்திரத்தில் இருக்கிறது
எதிரியை வெல்லும் வியூகம் !
அப்போதும்
இப்போதும்
தனி மனிதத் தலைமைக்கே
தனி மரியாதை !
இப்போதும்
தனி மனிதத் தலைமைக்கே
தனி மரியாதை !
"வரலாறு காணாத "
கூட்டத்தின் முன்பு நின்று
தலைவன் ஒருவன் முழங்குகிறான் ,
" எனது கட்சியை
முதன்மைக் கட்சியாக
மாற்றும் வரை ஓயமாட்டேன் " என்று !
" குடிமகன் "
குதூகலித்துக் கைதட்டுகிறான் !
ஏடுகள் அத்தலைவனை
" வருங்காலத்தின் விடிவெள்ளி "
என்கின்றன !
அன்று
புலி , சேவல் , மீன் !
இன்று
சூரியன் , இலை , முரசு !
சின்னங்கள்
மட்டும் மாறியிருக்க
கொடிகள்
இன்னும் இருக்கின்றன !!!
Comments
Post a Comment