Skip to main content
Warning : The following material contains adult matters . Only adults can enter into the story .

அஜய் குமார் , பேரெல்லாம் என்னவோ அம்பானி ரேஞ்சுக்கு தான் இருக்கிறது . அதில் பாருங்கள் , அஜய் தற்சமயம் ஒரு வேலை வெட்டியும் இல்லாதவன் . ஒரு டிகிரி மட்டும் படித்த அறிவில்லாதவன் , அழகில்லாதவன் , காதலி இல்லாதவன் , சூடு சொரணை இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாதவன் . அஜய்குமார் தற்சமயம் அணிந்திருந்த சொக்காயில் மூன்றாவது பொத்தான் இல்லை . இடுப்பில் ஒரு இத்துப்போன அரைஞாண் கயிறு அவனது சாயம் வெளுத்த பேன்ட்டை பாலன்ஸ் செய்து கொண்டிருந்தது. அஜய் போட்டிருந்த ரப்பர் செருப்பை போன வாரம் தான் செருப்பு தைக்கும் ஒரு தொழிலாளியிடம் இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசி தைத்து இருந்தான் . அதெல்லாம் கிடக்கட்டும் . அஜய்குமாரின் தற்போதைய புரோக்ராம் , மல்லிகா தியேட்டரில் " சாயாகடை சரசு " படம் பார்ப்பது தான் . இது அவனுடைய ஒரு வார ப்ராஜெக்ட் . மளிகை கடைக்குப்போய் மிச்சம் பிடித்த இரண்டு ரூபாய்கள் , ரேசன் கடைக்கு போய் சேர்த்த ஐந்து ரூபாய்கள் , கடுகு டப்பாவில் இருந்து திருடிய ஒரு ரூபாய்கள் , அப்பாவின் சொக்காய் ஜோப்பில் இருந்து லவட்டிய சில்லறைகள் என அஜய்குமாரின் ஒருவார திட்டமிட்ட அந்த செயலின் மூலம் , பொருளாதார ரீதியில் தனது புராஜெக்ட்டை இலக்கு நோக்கி கொண்டு சென்றிருந்தான் . மாலை ஆறு மணியாகி விட்டது . இப்போதே கிளம்பினால் க்யூவில் நிற்க வேண்டியிருக்கும் . இன்னும் அரை மணி கழித்து கிளம்புவதே உத்தமம் . அஜய்குமார் காத்திருந்தான் . அந்த சமயத்தில் கார்த்தி வந்தான் . கார்த்தி அஜய்குமாரின் ஒரே நண்பன் . உஷாராக டிப்ளமோ படித்த வேலை உள்ளவன் . " மச்சி , பொங்கலுக்கு துணி எடுக்கணும் வா போகலாம் " என்றான் . பொதுவாக அஜய் குமாருக்கு , ஒருத்தனுக்கு துணி எடுக்க , ஒருத்தனுக்கு வாட்ச் வாங்க , ஒருத்தனுக்கு செருப்பு வாங்க , ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட அந்த ஒருத்தனுடன் போவதில் உடன்பாடு இல்லை . இருந்தாலும் கார்த்தி வந்து கூப்பிடும் போது மட்டும் தனது அந்தக்கொள்கையை சிறிது தளர்த்திக்கொள்வான் அஜய் குமார் . ஆனாலும் தனது ஒருவார புராஜெக்டான " சாயாக்கடை சரசு " வை கைவிட அஜய்க்கு மனசு இல்லை . " மச்சான் , மல்லிகா தியேட்டருக்கு போறதுன்னு புரோக்ராம் பிக்ஸ் பண்ணிட்டேனே " என்றான் . " பெரிய ............................... ப்ரோக்ராம் . மூடிட்டு வாடா " என்று கார்த்தி சொன்னதும , சரி என்று ஒத்துக்கொண்டு கிளம்பினான் . அமுல் பேபி மாதிரி மூஞ்சியை வைத்துக்கொண்டு கார்த்தி பேசும் கெட்ட வார்த்தைகள் அஜய் குமாருக்கு மிகவும் பிடிக்கும் . அந்த கெட்ட வார்த்தைக்காகவே அவனுடன் செல்ல சம்மதித்தான் .
கடை வீதி கோலாகலமாய் இருந்தது . தேவதைகளை போல் பெண்கள் உலா வந்தனர் . அதென்னமோ தெரியவில்லை , சொல்லிவைத்தாற்போல எல்லா பெண்களும் அஜய் குமாரை பார்க்கவே இல்லை . பக்கத்தில் வரும் கார்த்தியைத்தான் பார்த்தனர் . கார்த்தி , அஜய் குமாரை விட சிவப்பு , உயரம் , அழகு , தேஜஸ் , எல்லாம் . இந்நேரம் அஜய்க்கு , கார்த்தி மீது பொறாமை வந்திருக்க வேண்டும் . ஆனால் வரவில்லை . காரணம் , கார்த்தி கட்டிளம் பெண்களை மதிப்பதில்லை . " மச்சி , அவளுக எல்லாம் .........................டா மச்சி " என்று அமுல் பேபி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவான் . ஆனால் எல்லா பெண்களும் கார்த்தி மீது பைத்தியமாய் இருப்பது போலவே அவனை ஆசை ஆசையாகப்பார்க்கின்றனர் . ஆனால் அஜய்குமார் , இளம் பிகர்களை , தெய்வத்திற்கு மேல் மதிக்கிறான் . " மாப்ளே , அவளுக காலடி மண்ணை எடுத்து , நெத்தியில பூசணுமடா " என்பான் . கார்த்தி அதை கேட்டு , " ததூ " என்று காறித்துப்புவான் . அனால் எந்த பிகரும் அஜய்குமாரை ஒரு மனுசனாகவே மதிப்பதில்லை . " பாக்காட்டி போங்கடி .......... எனக்கு ரேஷ்மா , மரியா , சிந்து , ஷகிலா , பிரமிளா , எல்லாம் இருக்காங்க " என்று மனதைத்தேற்றிக்கொள்வான் . மேற்குறிப்பிட்ட பெயர்களுக்குரிய பிகர்கள் எல்லாம் பிட்டு பட நாயகிகள் என்பது குறிப்பிடதக்கது .
அந்த துணிக்கடை நான்கு மாடி கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்தது . உள்ளே முழுவதுமாக குளிரூட்டப்பட்டிருந்தது . உள்ளே இருந்த பணியாளர்கள் கம்பீரமாய் , அதே சமயம் பவ்யமாய் , நாசூக்காய் வாடிக்கையாளர்களை கவனித்துக்கொண்டிருன்தனர் . அவ்வப்போது நுனி நாக்கு ஆங்கிலமும் பேசினர்.எல்லா பணியாளர்களும் , " வாடிக்கையாளர்களை கவனிப்பது எப்படி ? " என்ற ஆங்கிலப்புத்தகத்தைப்படித்திருப்பார்கள் போல . உள்ளே நுழைந்ததும் ஐஸ்கிரீம் போல இருந்த பெண்ணொருத்தி, தேன் குரலில் இருவரையும் அமரச்சொன்னாள் .
அஜய்குமார், அந்தப்பெண்ணை கவனித்தான் . அவளின் சேலை எந்நேரமும் நழுவி கீழே விழலாம் என்ற நிலையில் இருந்தது . உற்றுப்பார்த்தால் தான் அவள் அணிந்திருந்த மெலிதான தங்கச்சங்கிலி தெரிந்தது . அவளின் தோலின் மினு மினுப்பில் தங்கம் கூட தகுதி இழந்து போய் இருந்தது. அவர்களை அமரச்சொல்லிய அந்தப்பெண் , சிறிது நேரத்தில் ஒரு தட்டில் இரு கோப்பை பழ ரசங்களை எடுத்து வந்து நீட்டினாள். நீட்டுவதில் தான் என்ன ஒரு நளினம் , நாணம் , மடம் , பயிர்ப்பு ........ அஜய் குமாருக்கு அந்த பெண்ணைப்பார்த்த சில கண நேரங்களிலேயே , ரேஷ்மாவின் செம ஹாட் பிட்டை செமத்தியாகப்பார்த்த எபக்ட் இருந்தது . ஒரு நிமிடம் .... இதென்ன கலாசாரம் ? கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பழரசம் கொடுத்து அவர்களை அடிமைப்படுத்துவது . அஜய் குமாருக்கு அந்த கலாச்சாரம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை . இருந்தாலும் அந்த தங்கத்தாரகையின் வோட்கா புன்னகையும் , சில்க் உபசரிப்பும் , புல்லட் பார்வையும் , அஜய்க்கு ஒரு மினி சொர்க்கத்தைத்தர , அவன் அவளின் பழரசவிருந்தோம்பலை விரும்பி ஏற்றுக்கொண்டான் . குடிக்கும் வரை இனிமையாய் காத்திருந்த அவள் , குடித்தபின் , குடித்த கோப்பைகளை மீண்டும் ஒரு புன்னகையைத்தந்து வாங்கி விட்டுப்போனாள் . கார்த்தி அவளை ஏறிட்டுக்கூடப்பார்க்கவில்லை . அந்த பழரசத்தையும் கால்வாசி தான் சுவைத்த்திருந்தான் . முட்டாள் . அழகை ஆராதிக்கத்தெரியாதவன்.அஜய் குமார் கடையை சுற்றிலும் நோட்டம் விட்டான் . மேல் தட்டு (very high middle class ) பெண்கள் அதிகம் இருந்தனர் . பெரும்பாலான முப்பது தொட்ட திருமதிகள் , லோஹிப் , ஸ்லீவ்லெஸ் ஆக இருந்தனர் . அவர்களைப்பார்த்த அஜய் மனதுக்குள் " யம்ம்மா " என்றான் . கார்த்தியோ அவர்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் , தனக்கு வேண்டிய ஆடை களை தேர்வு செய்வதிலேயே குறியாய் இருந்தான் . ஒரு நீல நிற , ஷர்ட் பிட்டை காட்டி " இது நல்லா இருந்க்குமாடா ? " என்றான் . " மாப்ளே , நீ கடக ராசி . அதனால ரெட் உனக்கு சூட் ஆகும் . ப்ளூ ஆகாது ." என்ற அஜய்குமாரை முறைத்த கார்த்தி , " போயும் போயும் உன்கிட்ட கேட்டேன் பாரு " என்று தலையில் அடித்துகொண்டான் . அப்போது தான் அஜய்குமாருக்கு அந்த உணர்வு ஏற்ப்பட்டது . சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு . குவாட்டருக்கும் அதிகமான அளவு ஜில் பழரசத்தை உள்ளே தள்ளி இருந்தது வேலையைகாட்டத்தொடங்கி இருந்தது . போதாக்குறைக்கு அந்த கடை முழுவதும் உள்ளே நிலவிய வெப்பத்தின் அளவு பதினெட்டு டிகிரி .
" இங்கே எங்கு பாத் ரூம் இருக்கும் ? " என்று யாரிடம் போய் கேட்பது . அஜய் குமார் சுற்றி இருக்கும ஆண்களை கவனித்தான் . எவனுடைய முகத்திலும் ஒன்னுக்குப்போவதற்க்கான திட்டம் இருப்பதாக தெரிய வில்லை . " மச்சி , யூரின் போகனும்டா " என்று கார்த்தியிடம் கிசு கிசுத்தான் . " நீ அந்த பிகரையும் , கூல்ட்ரிங்க்சையும் வெறித்தனமா குடிக்கும் போதே நினைச்சேன் . " என்றான் கார்த்தி . அஜய் குமாருக்கு , கார்த்தி அந்த கூல்ட்ரிங்க்சை கால்வாசி அளவு மட்டும் குடித்ததன் சூட்சமம் புரிந்தது . " மாப்ளே , அந்த செக்யூரிட்டி கிட்ட கேளுடா " என்று கார்த்தி உடைகளை தேர்வு செய்வதில் கவனமானான் . அஜய்குமார் அந்த செக்யூரிட்டி யை நெருங்கினான் . அந்த செக்யூரிட்டி எதோ கார்பரேட் கம்பனியின் எம் .டி போல இருந்தான் . அஜய் குமார் அவனை நெருங்கியதும் , " எஸ் ... வாட் கேன் ஐ டூ பார யு சார் ? " என்றான் . " பாத் ரூம் எங்கே இருக்கு " என்ற அஜய்யின் குரலில் சுருதி குறைந்து இருந்தது. இந்த கேள்வியை கேட்டதும் அந்த செக்யூரிட்டி இடம் இருந்து spontaneous ஆக பதில் வரவில்லை . அவன் ஒரு ஐந்தாறு வினாடிகள் கழித்து , " தேர்ட் புளோர் " என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் . அந்த பதிலின் கடைசி செண்டி மீட்டரில் இளக்காரம் இருந்ததை அஜய் குமார் கவனிக்கத்தவறவில்லை. " மவனே , நீ எங்கியாவது பஸ்ல லாங் ட்ரிப் போகணும் . ஒரு செம பிகர் வந்து உன் பக்கத்துல உட்காரணும். அந்த சமயத்துல உனக்கு அடக்க மாட்டாம ஒன்னுக்கு வரணும் ." என்று மனதிற்குள்ளேயே அவனை சபித்தபடி மூன்றாவது தளத்தை நோக்கி விரைந்தான் அஜய் குமார் .
மூன்றாவது தளத்திலும் பாத்ரூம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிய வில்லை . அங்கே ஒரு பதின் பருவ மங்கை மிக மெலிதான டி ஷர்ட்டை அணிந்தபடி அஜய்குமாரை கடந்து சென்றாள். உள்ளே அவள் உள்ளாடை எதுவும் அணிந்திருக்கவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது . அஜய் அதை ரசிக்கும் உடல் நிலையில் , மன நிலையில் இல்லை . சற்று முன்பு சொர்க்கத்தை தந்த ஒரு காட்சி , இப்போது எரிச்சலூட்டுகிறது . இதனால் தான் சித்தர்கள் வாழ்வை , மாயை என்கிறார்கள் போலும் என்று அந்த நிலையிலும் அஜய்குமாருக்கு வாழ்வின் தத்துவம் புரிந்தது. எப்படியும் பாத் ரூமை கண்டுபிடித்தே தீருவது என்று உறுதி பூண்டான். பொதுவாக , தேடுவது தெரியாமல் தேடுவது , பார்ப்பது தெரியாமல் பார்ப்பது போன்ற வாலிபக்கலைகளில் அஜய்குமார் அவ்வளவு தேர்ச்சி பெற வில்லை . அவன் ஏதாவது ஒன்றைத்தேடினால் , தேடுகிறான் என்பது தெரியும் . அப்படித்தான் அவன் எதையோ தேடுகிறான் என்பதை அங்கே இருந்த ஒரு விற்பனை பிரதிநிதி ஒருத்தி கண்டுபிடித்து விட்டாள். ஒயிலாய் அவனை நெருங்கி , " என்ன வேணும் சார் " என்றாள். வேறு ஒரு சமயமாக இருந்தால் அஜய் , " உன் வெள்ளைப்புன்னகையை , சிவப்பு வெட்கத்தில் தோய்த்து ஒரு வாய் ஊட்டிவிடேன்." என்று சொல்லி இருப்பான். சந்தர்ப்பம் சரி இல்லாததால் , " மேடம் பாத் ரூம் எங்கே இருக்கு ? " என்றான் . " யு மீன் டாய்லட் ? " என்றாள் . " ஆமாண்டி , அது தான் " என்று மனதுக்குள் சொல்லி , " எஸ் " என்று அவளுக்கு சொன்னான் . அவள் " கோ லெப்ட் " என்று சொல்லி விட்டு அவனைப்பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள் .
அவள் சொன்ன அந்த பாழாய் போன இடதுபுறத்தில் ஒரு ஸ்டோர் ரூம் தான் இருந்தது. பார்க்கும் வரை பார்த்து விட்டு அந்த ஸ்டோர் ரூமிலேயே ஒரு மூலையில் ஒன பாத்ரூம் போவது என்ற முடிவில் அஜய்குமார் அந்த ஸ்டோர் ரூமினுள் சென்றான். பழைய துணிகளை அங்கே போட்டு வைத்து இருந்தார்கள் . அங்கே உடைந்து போன மேசை , நாற்காலி போன்ற சங்கதிகளும் இருந்தன . அஜய் தோதான ஒரு மூலையைத்தேடினான். மூலையைக்கண்டுபிடித்து , தன்னை மறைத்துக்கொண்டு , பேன்ட் ஜிப்பை தளர்த்திய போது , அந்த அறையினுள் ஒருவன் நுழைந்தான் . சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன்னிடம் இருந்த ஒரு பாலித்தீன் கவரை ஒரு மேசையின் அடியில் வைத்தான் . பிறகு தனது செல்போனை எடுத்து டயல் செய்து பேசினான் . " பீட்டர் , ஐட்டத்தை கச்சிதமா கொண்டு வந்து தேர்ட் புளோர் ஸ்டோர் ரூம்ல ஒரு டேபிளுக்கு அடியில வைச்சு இருக்கேன் . எவனும் பார்க்கல . ஐட்டம் செம காஸ்ட்லி . ரெண்டே நிமிசத்துல எல்லாரையும் சொர்க்கத்துக்கு கொண்டு போய்டும் . வைக்கறேன் . " என்று முடித்தான் அந்தப்புதிய மனிதன் . அந்த சம்பாஷணையைக்கேட்ட அஜய்குமாரின் மனதில் மைக்ரோ செகண்டில் சில கணிப்புகள் உருவாகின . போன வாரம் வெள்ளிக்கிழமை மல்லிகா தியேட்டரில் பார்த்த " தி பாடி " என்ற ஆங்கில பிட்டு படத்தில் கூட இது மாதிரித்தான் ஒரு காட்சி வரும் . ஒரு லாட்ஜின் , ஸ்டோர் ரூமில் முகம் தெரியாத எவனோ ஒருவன் இப்படித்தான் ஒரு கவரில் எதையோ கொண்டு வந்து வைப்பான் . சில நிமிடங்களில் அந்த லாட்ஜே , "பூஊம்" என்ற சப்தத்துடன் வெடித்துச்சிதறும் . நம் வாழ்வில் நடக்கப்போகும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஏதாவது ஒரு தருணத்தில் , ஏதாவது ஒரு விதத்தில் கடவுள் நமக்கு முன்கூட்டியே உணர்த்துகிறார் . கேயாஸ் தியரி போல இதுவும் ஒரு தியரி தான் . முகம் தெரியாத அந்த புதுமனிதன் கொண்டு வந்த "பாமை" எப்படியாவது செயல் இழக்கச்செய்து , இந்தப்புதிய தியரியை பலர் முன்னிலையில் ஆதாரத்துடன் விளக்கி , பாராட்டு பெற்று , சன்மானம் பெற்று , வேலை பெற்று , ஜூஸ் கொடுத்தாளே அது போன்ற குல்பி ஒருத்தியை மனைவியாக்கி , உலக இன்பங்களை துய்த்து , etc., etc., விரைந்து செயல்படு அஜய் . அந்த புது மனிதன் இன்னும் இரண்டு நிமிடத்தில் எல்லாரையும் சொர்க்கத்திற்கு அனுப்புவதாக சொல்லி இருக்கிறான் . உனக்கு இருக்கும் காலம் இரண்டு நிமிடங்கள் . நூற்றி இருபது வினாடிகள் . ஓடு அஜய் ஓடு . உன்னால் முடியும் . அஜய் குமார் சிறுநீர் கழிக்கும் திட்டத்தை தற்காலிகமாய் துறந்தான் . அந்த மனிதன் போனதும் , மேசைக்கு அடியில் அவன் வைத்த பாலிதீன் கவரை எடுத்தான் . அதனுள்ளே ஒரு டிப்பன் பாக்ஸ் இருந்தது . அதனுள் தான் அந்த " ஐட்டம் " இருக்க வேண்டும் . அஜய் தனது மனதிற்குள்ளேயே நூற்றி இருபதிலிருந்து பின்னோக்கி எண்ணத்தொடங்கினான் . வெகு வேகமாய் திட்டங்கள் வகுத்தான் . அவன் தற்போது இருப்பது மூன்றாவது மாடியில் . அந்த கட்டிடம் நான்கு மாடி கட்டிடம் . இங்கிருந்து கிரவுண்ட் புளோரை அடைவதை காட்டிலும் , மொட்டை மாடியை சீக்கிரம் அடையலாம் . அஜய்குமார் அந்த கவரை எடுத்துக்கொண்டு மொட்டை மாடியை நோக்கி விரைந்தான் .
மொட்டை மாடியில் யாரும் இல்லை . வானில் நிலா இருந்தது . அஜய்குமாரின் கவுன்ட் டவுனில் இன்னும் இருபத்திஐந்து வினாடிகளே இருந்தன . அஜய் தனது டி ஷர்ட்டை கழட்டினான் . அதில் அந்த டிபன் பாக்சை வைத்து மூட்டை கட்டுவது போல கட்டி முடிச்சுப்போட்டான் . இதற்குள் கவுன்ட் டவுன் பத்தைத் தொட்டிருந்தது . அவனது திட்டம் , அந்த பாமின் வெடிக்கும் வினாடிகளில் அதை ஆகாயத்தில் இருத்தி வைப்பது தான் . வெடிப்பதற்கு ஐந்து வினாடிகளே இருக்கும் நிலையில் அதை வானில் மிகுந்த விசை கொண்டு எறிய வேண்டும் . அவ்வாறு எறியப்பட்ட அந்த பாம் தனது பெருமஉயரத்தை அடைந்து , வானத்திலே வெடித்து சிதறி விடும் . எப்பேர்ப்பட்ட சமயோசித ஐடியா . இந்த ஐடியாவை மட்டும் கேப்டன் விஜயகாந்த் தனது அடுத்த படத்தில் பயன்படுத்தினால் , இதற்காகவே படம் நூறு நாட்கள் ஓடும் . தன்னைத்தானெ மெச்சிக்கொண்ட அஜய்குமார் , தனது கையால் அந்த "பாமை" வேகவேகமாய்ச்சுற்றினான் . தனது கவுன்ட்டவுன் ஐந்து வினாடியைத்தொட்ட போது அதை வானில் விட்டெறிந்தான் . அது ஒரு ராக்கெட் போல வானில் பயணித்தது . தனது பெருமஉயரத்தை அடைந்தது . கீழே கீழே வரத்தொடங்கியது . என்னது வெடிக்கவில்லை . ஒருவேளை கவுன்ட் டவுனில் ஏதாவது பிழையா ? இதற்குள் அந்த டிபன் பாக்ஸ் மொட்டை மாடியின் தரை தளத்தில் விழுந்தது . டொமம்ம்ம்ம் ...........க்க்ளாங்க்க்......................................................................................................................................................
அஜய் குமார் , அந்த டிபன் பாக்ஸ் கீழே விழுந்த வேகத்தில் , தனது டி ஷர்ட் அதனின்று கழண்டு காற்றில் பறந்ததையும் , அந்த டிபன் பாக்ஸ் இரண்டாகப்பிளந்து , அதனுள்ளே இருந்து ஒரு பாட்டில் வெளியே வந்து சுக்கு நூறாக உடைந்ததையும் , அந்த பாட்டிலில் இருந்து காப்பிக்கொட்டைக்கலரில் ஒரு திரவம் கொட்டித்தெறித்ததையும் பார்த்தான் . மௌனமாக சிறிது நேரம் அங்கேயே நின்றான் . கார்த்தி அடிக்கடி உபயோகிக்கும் ஒரு கெட்ட வார்த்தையால் அந்த டிபன்பாக்சை வைத்தவனையும் , தன்னையும் திட்டிக்கொண்டான் . தனது டி ஷர்ட்டை எடுத்து அணிந்து கொண்டான் . அந்த டிபன்பாக்சை எடுத்து மூடி , அந்த பாலிதீன் கவரைத்தேடி எடுத்து , மூன்றாவது புளோருக்கு வந்து , அதை அந்த மேசைக்கு அடியிலேயே வைத்து விட்டு , கீழே வந்தான் .

" எங்கடா போய்த்தொலைஞ்சே ? " என்ற கார்த்தியை சலனமின்றி பார்த்தான் அஜய் குமார் . இருவரும் அந்த கடையை விட்டு வெளியே வந்து தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது , மீண்டும் அந்த டிபன்பாக்ஸ் மனிதனைப்பார்த்தான் அஜய்குமார் . இப்போதும் அவன் செல் போனில் பேசிக்கொண்டிருந்தான் . " இத பாரு பீட்டர், பொங்கல் டயம் நைட் ஷிப்ட் பாக்கணும் னு நீ கேட்டதால ஐட்டத்தை டிபன் பாக்ஸ் உள்ள போட்டு ஸ்டோர் ரூம்ல வச்சுட்டேன் . சரக்கு செம காஸ்ட்லி . பாரின் ஐட்டம் . குடிச்சா வாசம் வராது . நல்ல இனிப்பா இருக்கும் . குடிச்ச ரெண்டு நிமிஷத்துலயே சும்மா ஜிகு ஜிகுன்னு இருக்கும் . அதோட இதுல ஸ்பெசலா எதோ மிக்ஸ் பண்ணி இருக்கனுங்க . வயாகரா எபக்ட் இருக்கும் . செகண்ட் புளோர் தான , உன்கூட ஷிப்ட்ல வனஜா இருப்பாளே . சும்மா நின்னு விளையாடலாம். ஐநூறு மில்லி அறுநூறு ரூபா. எப்படி இருந்ததுன்னு நாளைக்கு விலாவாரியா சொல்லு . அப்புறம் பாக்கலாம் . "
அஜய் குமார் வீட்டுக்கு வந்ததும் முதல் காரியமாக ஒன் பாத் ரூம் போனான் .
குறிப்பு : இக்கதையால் அறியப்படும் நீதி யாதெனில் எங்கேனும் வெளியில் செல்வதாக இருந்தால் , சிறு நீர் கழித்து விட்டுச்செல்லவும் .

Comments

Popular posts from this blog

திருமணம் 2013 


' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…
குறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .

தடயம்

எனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா ? சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் ? எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் ? வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .
என் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை " மதன சுந்தரி " டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ? எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் " ஆயாக்கள் " தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே " கடுப்பு முடியாக " இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …