கூர்மையானது
அச்சாணியின் அடி நுனி ,
போர்வாளின் முத்த முனை ,
துளிநீரின் தொடக்கப் புள்ளி ,
கோபக்கவியின் காகிதக்காமம் ,
நோய்க்கிழவனின் படுக்கை முள் ,
பள்ளியறைக் கட்டில் பேச்சு ,
விதவையின் விரக மூச்சு ,
வேட்டுவ வீரனின் இறுதி இலக்கு ,
விடலைப்பெண்ணின் வெட்கச் சிலிர்ப்பு ,
எரிதழலின் கோபநாக்கு ,
நரைத்துறவியின் புருவ மத்தி ,
இளமனைவியின் பிரிவுத்துயரம் ,
பண்டிகை நாளின் பட்டினித் தருணம் ,
காதலியின் முதல் பார்வை !!!
Comments
Post a Comment