Skip to main content

Posts

Showing posts from July, 2014
சிறுவயதில்
நூல்கட்டி விளையாடியதற்காய்
மன்னிப்புக்கேட்க வேண்டும் !
ஊசித்தட்டானே
நீ
எங்கிருக்கிறாய் ?

=============================

ஊரில்
பல்லாங்குழிச் சிறுமிகளையும்
கில்லித்தட்டு சிறுவர்களையும்
காணவில்லை !
திரும்பிப்பார்க்கிறேன் .......
என்னுடனே
வந்துகொண்டிருந்த
என் பால்யத்தையும்
காணவில்லை !

=============================

எங்களூரின்
தாவணிக்கனவுகள் எல்லாம்
இப்போது
சுடிதார்க் கனவுகளாக !
அந்தக்கனவில்
வண்ணம் இருந்தது !
இந்தக் கனவில்
சாயம் மட்டுமே இருக்கிறது !

=============================

கட்டிப்பிடித்துக்
கதற வேண்டும் போலிருந்தது !
பாலித்தீன் பைகளை
மேய்ந்து கொண்டிருந்த
எங்களூர்
பசுமாட்டை !

=============================

ஒரு
நோயுற்ற
முதியவளைப் போல
குற்றுயிராக
சுருண்டு கிடந்தாள்
காவிரி !

முடிந்தமட்டும்
கண்ணீர் வார்த்துத்
திரும்பிவந்தேன் !

=============================

இரட்டை மாட்டுவண்டியில்
கோவணங்கட்டிய
ஒரேயொரு விவசாயி
தென்பட்டான் !
கடவுளையே
பார்த்தது போலிருந்தது !

=============================

வீட்டில்
இரவு உணவுக்கு
இட்டிலி !
ம்ம்ம்..........
அரிசீம்பருப்புச் சோறை
அம்மாவே
மறந்து விட்டாள் !

=============================

சல்லட…
கண்ணில் தட்டுப்பட்ட பட்டாம்பூச்சி

காற்றெனும்
சமுத்திரத்தில் வாழும்
மீன்களென
மீன்கள் நம்மை
நினைத்துக் கொண்டிருக்கலாம் !
ஆனால்
எந்த மீனும்
இங்கே வந்து
மீன் பிடிப்பதில்லை !

===============================

உங்கள் முன்பு
தென்படும்
நம்பிக்கை
என்ற கூட்டில்
எந்தப் பறவையாவது
வாழ்ந்து கொண்டிருக்கலாம் !
உண்மை என்ற
கல்லெறிந்து விடாதீர்கள் !

===============================

அழகாயிருந்தது 
என்றாலும்
வந்து தொலைக்காமலேயே
இருந்திருக்கலாம் ,
ஏற்கனவே
யாரோ எழுதிவிட்டது
போலத் தோன்றிய
நானெழுதிய
அந்தக் கவிதை !

===============================

சுவையாக இருப்பது
போன்ற
பிரமையைத் தருகின்றன
சூடாக இருக்கும்
உணவுகள் !

===============================

மருத்துவனாவேன்
என்றான் ஒருவன் !

பொறியாளனாவேன்
என்றான் ஒருவன் !

விஞ்ஞானியாவேன்
என்றான் ஒருவன் !

விவசாயியாவேன்
என்றான் ஒருவன் !

நான்
ஓடிச்சென்று
அந்த வருகால விவசாயியைக்
கட்டிப்பிடித்து
கண்ணீர் சிந்தினேன் !

நாளையவன்
வளர்க்கப் போகும்
நெற்கதிருக்கு
என் கண்ணீர்
உரமாகட்டும் !

================================

ஒற்றை பிராமணனும்
ஒரு விதவையும்
எதிரெதிரே
கடந்து போனார்கள் !
திகைத்து நின்றது
சகுனம் !

=========…
அது
எதோவொரு நாளில்
அது எனக்கு
அறிமுகமானது !

அன்றிலிருந்து
அது எனக்கு
உற்ற நண்பன் !

யாராவது
அதைச் சீண்டினால்
எனக்கு
பொல்லாத
கோபம் வரும் !

திடீரென்று ஒருநாள்
அது
என்னைத் தாண்டி
வளர்ந்து நின்றது !

அது சொல்வதையெல்லாம்
கேட்க ஆரம்பித்தேன் !

எனக்கே தெரியாமல்
நானதன்
அடிமையானேன் !

தனக்கான
பெருந்தீனியை
கொண்டா கொண்டா
என
நாலாப்புறமும்
அது என்னை
விரட்டியது !

அதைத்
திருப்திப்படுத்துவதே
என் வாழ்நாள்
இலக்கானது !

சில தனிமைகளில்
அது
பூதாகரமாக
என்னைப் பார்த்துச் சிரிக்கும் !
பயமாக இருக்கும் !

என் நண்பர்கள்
அதைக் கொன்றுவிடும்படி
சொன்னார்கள் !
ஆகவே,
நானதைப் பட்டினி போட
ஆரம்பித்தேன் !

பசியால்
அது துடித்தது !

சிறுகச்சிறுக
அதைக் கொன்று விட்டதாய்
நண்பர்களிடம் சொன்னேன் !

ஒருநாள்
என் மனதின்
பாதாள அறைதிறந்து
உள்ளே சென்றேன் !

அங்கே,
சாதுவாய்
அது
அமர்ந்திருந்தது !

அதற்கான உணவை
அளித்துவிட்டு
" பயப்படாதே
நானிருக்கிறேன் "
என்றேன். !

அது புன்னகைக்க .........

நானும்,
அதுவாகிய நானும்
கைகுலுக்கிக் கொண்டோம் !