Skip to main content

Posts

Showing posts from March, 2014
 சிறைவாசி அவன் சிறையில் இருந்து வெளிப்பாட்டான் ! அவனுக்கு அன்று விடுதலை ! குற்றம் ? நிதி அவனை மோசடி செய்தது ! எனவே நிதியை அவன் மோசடி செய்தான் ! பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் ! இவன் , சிலநாள் திருடன் சீக்கிரம் அகப்பட்டான் ! வாதாட இவனிடம் நிதியில்ல்லை ! எனவே நீதி வென்றது ! சிறை, இவனுக்கு ஆனது அறை ! ஆறுவருடம் சிறையில் வனவாசம் ! இப்போது தண்டனை முடிந்து மீண்டும் இவனுக்கு ஜனவாசம் ! வெளியே வெயிலடித்தது ! அடுக்கிவிட்டது போல் கட்டிடங்கள் ! முடுக்கிவிட்டது போல்  வாகனங்கள் ! இவன் வீடுசென்ற போது சகோதரன் செருப்ப்பைக் காட்டினான் ! தகப்பன் தவறிவிட்டான் ! தாய் முதியோர் இல்லத்தில் ! உறவுகள் ஒன்றுகூடிக் காறித்துப்பின ! அக்கம்பக்கத்தார் அகதியைப் போலப் பார்த்தனர் ! வேலைதேடிச் சென்றவிடத்தில் விரட்டியடிக்கப்பட்டான் ! அடுத்தவேளைச் சோறு கேள்விக்குறியானது ! பிச்சையெடுப்பது குறித்து மனதுக்குள் பரிசீலித்தான் ! அதற்கு சிறை செல்வதே கௌரவம் என்று தோன்றியது ! செய்ய வேலை ! உண்ண உணவு ! உடுக்க உடை ! உறங்க உறைவிடம் ! என்ன தனிமை தான் வாட்டும் ! இப்போதுமட்டும் என்ன வாழுகிறதாம் ! இப்படியாக இரண்டு நிமிடங்கள் ய