Skip to main content

Posts

Showing posts from June, 2014
   இலட்சிய பொம்மை என்னிடம் கொஞ்சம்  களிமண் இருந்தது ! ஒரு பொம்மை செய்ய  ஆசைப்பட்டேன் ! பொம்மை செய்பவர்களின்  உலகத்தில்  சில கருத்துக்கள்  நிலவிவந்தன ! பொம்மை  புன்னகைக்க வேண்டும்  என்றொரு கருத்து ! ஆகவே,  பொம்மைக்கு  புன்னகையை அளித்தேன் ! கண்களில்  உயிர்ப்பு கொண்டதுதான்  பொம்மை  என்றொரு கருத்து ! கொஞ்சம் முயன்றதில்  பொம்மையின்  கண்கள்  உயிர்ப்படைந்தன ! வண்ணமில்லாதது  பொம்மையில்லை  என்றது  ஒரு கருத்து ! சற்றே  மெனக்கெட்டதில் வண்ணத்தில்  ஜொலித்தது  பொம்மை ! கொஞ்சமாவது  உடைந்து  அழுக்கானால்தான்  அது பொம்மை  எனுமொரு கருத்து ! அவ்வாறே  ஆனது பொம்மையும் !  இப்போது  பொம்மை,   பொம்மை உலகத்தின் இலட்சிய பொம்மையாக  உருவெடுத்திருந்தது !  ஆனால், அது  என் பொம்மையாக  இருக்கவில்லை !
    மழை வீடு   வெளியே மழை பெய்துகொண்டிருந்தது ! அறையில் இரவுப்பணியின் உறக்கத்திலிருந்த நான் திடுக்கிட்டு விழித்து கதவைத் திறந்து மழை பார்த்தேன் ! முன்பெல்லாம் மழை பெய்தால் வீட்டில் பஜ்ஜி சுடுவாள் அம்மா ! தொண்டையைச் செருமிக்கொண்டு கதை சொல்லத்தொடங்குவார் அப்பா ! பஜ்ஜி வாசமும் கதை வாசமும் சேர்ந்து இனிதே வீட்டை நிறைக்கும் ! இந்த நினைவுகளை மனதில் சுமந்தபடி நான் பெய்த மழையை வெறித்துக் கொண்டிருந்தேன் ! பஜ்ஜியையும் கதைகளையும் நினைவுகளில் சுமந்தபடி ஊரில் அம்மாவும் அப்பாவும்கூட இதேபோல் மழையை வெறித்துக்கொண்டிருக்கலாம் !  
இயற்கையின் குட்டி நாக்குகள் வெளியே காய்ந்த  ஆடைகளில்  வெயிலின் வாசம் !  ======================================  யாரோவின்  சாயலிலிருக்கும் என்னை  யாரோவென நினைத்து  யாரோ  கடந்து போனார்கள்  நானும் ..........  ======================================  அவரவர்  அவரவர் உலகத்தில்  வாழ்ந்து கொண்டு  அனைவரும்  ஒரே உலகத்தில் தானிருக்கிறோம் !  ======================================  இரவை  இருட்டு என்கிறார்கள்  சிலபேர் !  நிலவு என்கிறார்கள்  சிலபேர் !  நீங்கள்,  இருட்டா ?  நிலவா ?  ======================================  தன்னந்தனியாய்  இனிப்பை  உருட்டிக்கொண்டிருந்த  ஒரு எறும்பை  யாரோ தெரியாமல்  மிதித்தார்கள் !  ======================================  எந்த விளக்குகளாலும்  அணைக்க முடியவில்லை  தனிமை என்ற  இருட்டை !  ======================================  சந்தர்ப்பத்தோடு  புணர்ந்ததில்  நிஜத்தைப் பிரசவித்தது  ஒரு கற்பனை !  ======================================  எறும்புகள் எனும்  இயற்கையின்  குட்டி நாக்குகள்  நக்கிக் கொண்டிருந்தன  நான்  உண்டுமுடித்து எறிந்த  இனிப்பு டப்பாவை !  ==================
இப்படிக்கு இல்லத்தரசி எங்கள் வீட்டில் என் கணவரின் டாபர் மேன் வள் என்கிறது ! மகனின் அல்சேஷன் லொள் என்கிறது ! மகளின் பொமரேனியன் கீச் என்கிறது ! எனது வெறுமை மியாவ் என்கிறது ! ====================================== என் கணவர் தொலைகாட்சியில் மூழ்கிக்கொண்டு ! மகன் இணையத்தில் மூழ்கிக்கொண்டு ! மகள் அலைபேசியில் மூழ்கிக்கொண்டு ! நான் பாத்திரங்களில் மூழ்கிக்கொண்டு ! ====================================== என் கணவர் வீட்டிலிருந்து வங்கிக்குச் செல்கிறார் ! மகன் வீட்டிலிருந்து நிறுவனத்திற்குச் செல்கிறான் ! மகள் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்கிறாள் ! நான் வீட்டிலிருந்து வீட்டிற்குச் செல்கிறேன் ! ====================================== தன்னுடைய வேஷ்டியை என் கணவர் வாங்கி விடுகிறார் ! தன்னுடைய ஜீன்ஸை என் மகன் வாங்கி விடுகிறான் ! தன்னுடைய சுடிதாரை என் மகள் வாங்கி விடுகிறாள் ! என்னுடைய சேலையை மூவரும் வாங்கி விடுகின்றனர் ! ====================================== வீட்டில் என் கணவருக்கென்று தனியறை ! மகனுக்கென்று தனியறை ! மகளுக்கென்று தனியறை ! எ
  நாம் சந்தித்துக்கொள்ளும் போதெல்லாம் எனக்கு நீங்கள் கொடுத்த முகமூடியை நானும் உங்களுக்கு நான் கொடுத்த முகமூடியை நீங்களும் அணிந்து கொண்டபிறகே நம் உரையாடல் தொடங்குகிறது !
  என் அறையில் என்னுடன் ஒருவன் இருக்கிறான் ! சில சமயங்களில் அவன் மகத்தான நண்பன் ! சில சமயங்களில் அவன் மாபெரும் எதிரி ! அவன் பெயர் தனிமை ! 
அப்பா   ஒரு சூரியனைப் போன்றதுதான் அப்பாவின் கோபமும் ! பொழுதானால் மறைந்துவிடும் ! =============================================== பாசங்காட்டும் போது அவர் அப்பா ! அறிவுரை சொல்லும்போது அவர் தந்தை ! ============================================== காயத்திற்கு மயிலிறகு போன்றவள் அம்மா ! மருந்தைப் போன்றவர் அப்பா ! மயிலிறகு காயத்தின் வலியைக்குறைக்கும் ! மருந்துதான் காயத்தை ஆற்றும் ! =============================================== நாம் ஆயிரம் திட்டினாலும் பிறர் அப்பாவைத் திட்டும்போது இயல்பாக எழும் கோபத்தின் பெயர்தான் ரத்தம் ! =============================================== அப்பாவுக்காக மகன் தலை குனியலாம் ! மகனுக்காக  அப்பா தலைகுனியக் கூடாது ! ============================================== இந்த உலகத்திலேயே உன்னைக் கைநீட்டித்திட்டும் உரிமை உன் அப்பனுக்குத்தானிருக்கிறது ! எவனுக்குமில்லை ! =============================================== உன் பொருட்டு உன் அப்பாவின் கண்களில் நீர் வருவது நான்கு  பேர் உன்னைப் பாராட்டும் போதுமட்டும் இருக்கட்டும் ! =============================================== வேறெ
பேருந்தில் அந்த நால்வர்   எனக்கு முன்னே ஒருவன் அமர்ந்திருக்கிறான் ! பின்னே இன்னொருவன் அமர்ந்திருக்கிறான் ! வலப்புறமாக மற்றொருவன் ! இடப்புறமாக வேறொருவன் ! அதுவொரு பேருந்து ! வலப்புறம் அமர்ந்தவன் தன் வசதிப்படி அமர்ந்திருந்ததால் என் வலக்கையை வாகாக வைக்கச் சௌகரியமில்லை ! இடப்புறம் அமர்ந்தவன் இடித்துக்கொண்டு அமர்ந்ததனால் என் இடதுகைக்கும் இடவசதியில்லை ! முன்னேயாவது கால்நீட்டிச் சற்று  ஆறுதல் அடையலாமென்றால் முன்னேயிருந்தவன் கால் முரட்டுத்தனமாய் இடறியது ! பின்னேயாவது கால் நீட்டி ஆசுவாசப்படலாமென்றால் பின்னேயிருந்தவன் கால் பிடாரித்தனமாய்ப் பிறாண்டியது ! நிற்க ............ என் கோபமெல்லாம் எனக்கு நாலாபுறமும் அமர்ந்திருந்த அந்த நால்வர் மீதில்லை ! அந்த நால்வருக்கு மத்தியில் கொண்டுபோய் என்னைக் கிடத்திய என் பாழாய்ப்போன விதியின் மீதுதான் !