உறங்கினது போதும் தம்பி
உறங்கினது போதும் தம்பி
வரபோகும் விடியல்
உன்னை நம்பி !
வந்து விட்டது
உன் காலம் ,
நீ தான் எங்களின்
எதிர்காலம் !
சோர்ந்து கிடக்கிறான்
இறைவன் ,
உடனடித் தேவை
ஒரு தலைவன் !
இதுவரை பொறுத்தது
உன் பணிவு ,
உனது தலைமையில்
பிறந்திடும் புதுத்துணிவு !
எட்டு வையடா
மேற்கொண்டு ,
தடைகள் எல்லாம்
கற்கண்டு !
தகுதி என்னடா தகுதி
நீ எங்கள்
இதயத்தின்
இன்னொரு பகுதி !
உன்னையன்றி
யாருமில்லை கதி ,
எங்களை வாழச்செயவதே
உந்தன் விதி !
Comments
Post a Comment