Skip to main content

Posts

Showing posts from November, 2013
  ஈழம் உங்கள் புத்தியில் இருந்தது ! ஈழம் எங்கள் இதயத்தில் இருந்தது ! ------------------------------------------------- காத்திருந்தீர்கள் நீங்கள் ! தவமிருந்தோம் நாங்கள் ! ------------------------------------------------- நீங்கள், எங்கள் தூதுவர்களையும் கொன்றீர்கள் ! நாங்கள், தொலைகிறது என்று உங்கள் ஒற்றர்களையும் மன்னித்தோம் ! ------------------------------------------------- உங்கள் கண்ணீர்ச்சுரப்பியும் வியர்வையைச் சுரந்தது ! எங்கள் வியர்வைச்சுரப்பியும் கண்ணீரைச் சுரந்தது ! ------------------------------------------------- உங்களுடையவர்கள் படைவீரர்கள் ! எங்களுடையவர்கள் உடன்பிறப்புக்கள் ! ------------------------------------------------- உங்கள் தலைவன் இருக்கிறான் ! எங்கள் தலைவன் வாழ்கிறான் ! ------------------------------------------------- ஓலமிட்டீர்கள் நீங்கள் ! முழக்கமிட்டோம் நாங்கள் ! ------------------------------------------------- தந்திரநரிகள் நீங்கள் ! விடுதலைப்புலிகள் நாங்கள் ! -------------------------------------
குறிப்பு : இந்தக்கவிதையிலிருந்து நீங்கள் எதையாவது புரிந்து கொண்டால் எனக்கு எழுதியனுப்புங்கள். கடைக்காரன்  அவன், கடைக்காரன் ! செம்மாந்த நடைக்காரன் ! வெண்மைநிற உடைக்காரன் ! அவன், ஐம்பது கடந்த முதியவன் ! நான் அந்த வீதிக்குப் புதியவன் ! நான் ??? அதொன்றுமில்லை ! வந்தது ஓலை ! அழைத்தது ஆலை ! கிடைத்தது வேலை ! வணங்கினேன் அன்னையை ! வந்தடைந்தேன் சென்னையை ! உடனடித்தேவையெல்லாம் ........................... காலடிக்குத் தடம் ! தங்குவதற்கோர் இடம் ! நீர் பிடிக்கக் குடம் ! பழனி முருகன் படம் ! யாவருக்கும் என் முகம் தெரியாது ! நான் அப்பாவியென்ற என் அகம் தெரியாது ! அவ்விடத்தே எனக்கு நண்பர்கள் இல்லை ! ஊரோடு முடிந்தது என் நட்பின் எல்லை ! இங்கே நான் கேட்க முடியாது ' மச்சி ' என்ற சொல்லை ! அவ்விடத்திற்கே ஆலையின் வண்டி வரும் ! பத்துக்கல் கடந்து போனால் பக்கத்திலே கிண்டி வரும் ! என்ன செய்வது ? யாரைக் கேட்பது ? தலையைச் சொறிந்தேன் ! பார்வையை எறிந்தேன் ! கடையொன்றைப் பார்த்துவிட்டேன் ! உடனடியாக மூக்கினில் வேர்த்துவிட்ட
திருடன் அவன் தொழில் திருட்டு ! அவன் பிடிப்பது சுருட்டு ! அவன் மனமெங்கும் ஒரே இருட்டு ! மாதக்கடைசியில் அவனுக்கும் வரும் பஞ்சம் ! முதல் தேதியென்றால் மல்லிகைப்பூவிலிருக்கும் மஞ்சம் ! காசில்லாத போது காவல் நிலையம்தான் அவனுக்குத் தஞ்சம் ! அடர்த்தியானது அவன் புருவம் ! அழுக்கானது அவன் உருவம் ! அவன், மாலையானதும் மதுவை உள்ளே ஊற்றி விடுவான் ! வெளியில் வந்தால் ஒரு நூறையாவது தேற்றிவிடுவான் ! தன் இருப்பிடத்தை அடிக்கடி அவன் மாற்றிவிடுவான் ! அனாதைதான் அவன் ஆதியிலிருந்து ! ஒட்டிக்கொண்டது இத்தொழில் பாதியிலிருந்து ! அவனது பரிதாபத்தோற்றம் பிறர் உள்ளத்தை வருடிவிடும் ! சுவடு தெரியாமல் அவன் கை திருடிவிடும் ! ஒருநாள் அவனுக்கு ........... மதுவருந்தாமல் நாக்கு கரித்தது ! காசில்லாமல் கை அரித்தது ! ஒரு பொதுவிடத்தில் மக்கள் சிலர் கூடியிருந்தனர் ! திறக்காத உதட்டால் தம் உள்ளத்தை மூடியிருந்தனர் ! அவ்விடத்தை இவன் அடைந்தான் ! பலரையும் பார்வையால் கடைந்தான் ! ஒரு வயதானவன் பையொன்றை வைத்திருந்தான் கக்கத்தில் ! போய் நின்றுகொண்டான் இவன் அவன் பக்கத்தில் ! கெட்டியாகப் பிடித்திருந்தான் கிழவன் பணத்தை ! உணர்ந்து கொண்டான
நீர் தெளிக்கப்போகிறதாம் ' வானிலை ' ! அறிவித்தது வானிலை ! ========================== . அந்தச் சாலையைக் கடக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது ஒருவனின் முதலடிக்காக ! ========================== யாரோ வரும்போது மின்சாரம் வந்தால் வெளிச்சமாக அவர்கள் வந்திருக்கிறார்கள் ! யாரோ வரும்போது மின்சாரம் போனால் வெளிச்சத்திற்கு பதிலாக அவர்கள் வந்திருக்கிறார்கள் ! ========================== பண்டிகை விடுமுறையில் ஊருக்குப் போய்விட்டு வந்த அந்த தேநீர் ஆற்றுபவனை ஆற்றிக்கொண்டிருக்கிறது தேநீர் ! ========================== ஏதோ ஒருவிதத்தில் அழகானவர்கள் மட்டுமே காதலிக்கிறார்கள் ! அப்படியானால் காதல் என்பது என்ன ? ========================== இங்கே காமம் என்ற வார்த்தையை விட கற்பு என்ற வார்த்தை இன்னும் கவர்ச்சியானது ! ========================== வீடுகளில் ......... அது அடுப்பைப் பற்ற வைக்கிறது ! இது அடிவயிற்றைப் பற்றவைக்கிறது ! அது தீப்பெட்டி ! இது காதல் ! அவ்வளவுதான் ! ========================== பறித்தவனுக்கு பறித்தது மட்டும் சொந்தம் ! பார்த்து ரசிப்பவனுக்கு பூந்தோட்டமே சொந்தம் ! ========================== பேசத் த