Skip to main content

Posts

Showing posts from October, 2012
இரயில் பயணம் அந்தப் புகைவண்டியின் உள்ளே கூட்டமிருந்தது ! ஒவ்வொருவனிடத்தும் ஏதோவொரு வாட்டமிருந்தது ! ஓரமாய் ஓரிடத்தில் இளைஞர்களின் ஆட்டமிருந்தது ! பெண்களைத் தேடுவதிலேயே எனது நாட்டமிருந்தது ! எவளாவது சிக்குவாளா ? கண்வழியே காமத்தைக் கக்குவாளா ? முதலில் சீட்டு ! பிறகுதான் மன்மதனின் பாட்டு ! கழுவி வைத்த பாத்திரத்தில் பருக்கையைத் தேடுவது போல நான் எனக்கான இருக்கையைத் தேடினேன் ! அதிர்ந்தேன் ! அடுக்கி வைத்த ஆசைகளோடு அப்படியே உதிர்ந்தேன் ! உழைத்து உழைத்து ஓடாய்ப் போன உழவன் போல ஒரு கிழவன் ! நெறி பிறழாத சத்தியன் போல ஒரு மத்தியன் ! கணவனின் வசவுகளையெல்லாம் வெகுமதியாகக் கருதும் ஒரு திருமதி ! தலை நரைத்த சீமாட்டியாய் ஒரு மூதாட்டி ! சீருடையணிந்த ராணுவன் போல ஒரு மாணவன் ! சம்பாதிப்பிலேயே சிந்தை செலுத்தும் ஒரு தந்தை ! அப்புறம் ஒரு பாப்பா ! அடங்கொன்னியா ! இளசான ஒரு பெண்ணைப் பார்த்து அவளது எண்ணை வாங்கலாம் என்ற நினைப்பில் மண்ணைப் போட்டானே மகாதேவன் ! மூன்று மணிநேரமு
ரயில் சினேகிதி  சட்டென்று எனக்குள் சகலமும் வெளிச்சமாகி விடுகின்றன, எதற்கோ புன்னகைத்தபடி எதிரே வந்தமர்ந்த அவளைப் பார்த்ததும் ! கோழிக்குஞ்சை உள்ளங்கையில் பொத்திக் கொண்டால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது என் காதுகளுக்கு யாருடனோ பேசியபடி அவள் சிரிப்பது ! வேடிக்கை பார்த்தபடி பூ விரல்களால் அவள் கழுத்தை அவளே வருடிக் கொள்கிறாள் ! இங்கே எனக்கு சொக்குகிறது ! எப்படியும் நிமிர்ந்து என்னைப் பார்த்து விடுவாள் என்ற நம்பிக்கையில் தான் எழுந்து போய் காசு போடுகிறேன் அந்த குருட்டுப் பிச்சைக்காரனுக்கு ! இளஞ்சிவப்பு நெயில் பாசிஷ் தடவிய அவள் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருக்கறேன், சட்டென்று கதை பேச ஆரம்பிக்கின்றன அந்தப் பாதங்கள் என்னோடு ! நீர் குடிப்பதற்காக அந்த வாட்டர் பாட்டிலின் மூடியை மென்மையாக மிக மென்மையாக அவள் திருகுகிறாள், தேவராகம் கேட்டது போல இன்பமாக அதிர்கிறது என் பின்னங்கழுத்து ! பற்ற வைத்த அணுகுண்டு எப்போது வெடிக்குமென பதைப்போடு பார்ப்பது போலப் பார்க்கிறேன் உறக்கத்தில் இமை மூடிய அவள் விழிகளை ! அவளை விட அழகான ஒருத்தி
பிரிந்த காதலி   அவளை அந்தப் பேருந்தில் பார்ப்பேனென்று நான் நினைக்கவில்லை ! அவள் அப்படியே தானிருந்தாள் ! காதோரத்தில் அதே சுருண்ட முடி ! தலைகுளித்த அதே ஒற்றைப் பின்னல் ! சூடப்பட்ட அதே ஒற்றை ரோஜா ! அந்த பச்சை நிற சுடிதாரை எனக்குப் பரிச்சையமிருக்கிறது ! மெட்டியில்லா அவள் பாதங்களைக் கண்டு நான் ஏன் ஆறுதல் அடைகிறேன் ? மனதுக்குள் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது ! வருஷங்கள் கடந்தும் என்னைச் சுற்றி மீண்டும் ஒரு வசந்தம் குட்டியாய் ! அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை ! திறந்திருந்த ஜன்னலில் வெளியை வெறித்துக் கொண்டிருந்தாள் ! இப்போதெல்லாம் அவள் இசை கேட்பதில்லை போலும் ! இறுதியாக நிகழ்ந்த அந்த கடைசிச்சந்திப்பு ஆயுளுக்கும் மறக்காது ! என்னருகே ஒட்டிநின்ற அந்த பருவப்பெண்ணை உரசாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலகி நின்றேன் ! ஏதோ எங்கள் பழைய காதலுக்கு நான் செலுத்தும் என்னால் இயன்ற மரியாதை ! சுற்றிலுமிருந்த ஆண்களிடமிருந்து தன் காதலியை அடைகாத்துக் கொண்டிருந்தான் ஒரு காதலன் ! சட்டென்று அவனுக்காக என் கண்கள் ஈரமாயின
வேதாளம் அது ஒரு விரும்பத்தகாத விபத்து ! விளையாடிவிட்டது விதி வாழ்வில் உரத்து ! வற்றி விட்டது உடம்பில் சுரத்து ! குறைந்து விட்டது குருதியின் வரத்து ! உடைந்து விட்டது எலும்பு ! அடங்கி விட்டது அலும்பு ! ஒரு எட்டு கூட நடக்க முடியவில்லை ! துணையின்றி இம்மியளவும் கடக்க முடியவில்லை ! பாழும் உடம்பை மூலையில் போய் முடக்க முடியவில்லை ! அழுகை வந்தால் அணு அளவும் அடக்க முடியவில்லை ! உணவு பிடிக்கவில்லை ! காதலி கசந்து விட்டாள் ! தொலைகாட்சி திகட்டிப் போனது ! அலைபேசி அநாதையானது ! அன்று ......... நடந்து என்ன ? பலநாட்களாக பின் தொடரப்பட்டவள் புன்னகைத்து விட்டாளென்று பார்ட்டி வைத்திருந்தான் பாழாய்ப் போன நண்பன் ! விருந்தை மருந்து போல அருந்தலாமென்றுதான் போயிருந்தேன் ! போதையில் கண்ணும் தெரியவில்லை ! மயக்கத்தில்  ஒரு மண்ணும் தெரியவில்லை ! அளவுக்கு மீறி விட்டது ! ஒட்டு மொத்தமாய் ஏறி விட்டது ! வாகனத்தை அணுகிய போது குறைவாய்க் குடித்தவன் உதவ வந்தான் ! அவனிடம், " போடா பேமானி யாரையும் நான் அண்டியில்லை ! நான் ஒட்டாவிட்டால் இது என் வண்டியில்லை ! " என்று, நானே எடுத்தேன் ! எடுத்தவுடன் வேகத்தைத் தொடுத்தேன்
தோற்றுப் போனவன் அவன் அறியப்பட்டான் உரிமை இழந்த குடிமை என்று ! உற்றுப் பார்த்தால் தெரியும் உண்மையில் அவன் அடிமை என்று ! அரசைப் பொறுத்தவரை அவன் ஒரு அகதி ! அண்டை நாட்டு நட்புக் கொடியில் தெறித்து விட்ட சகதி ! ஆம், அவன் வேற்று நாட்டு மண்ணில் நேற்று நடந்த போரில் தோற்றுப் போனவன் ! அவன் தாய்மொழி கூட தமிழ் தான் ! அவன் வாழ்வு நிலையில்லா நீர்க்குமிழ் தான் ! அவன் தாய் தந்தையர் இறந்து விட்டனர் போரில் ! உறவென்று யாருமில்லை அவனுக்குப் பாரில் ! அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது சென்னை ! அந்த வகையில் அதுதான் அவனது அன்னை ! அது, நண்பனொருவனின் தூரத்து உறவு ! அதுவும் மறுக்கப் பட்டிருந்தால் அடுத்து அவன் இலக்கு துறவு ! அவனுக்கென மாடியில் ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு அறை ! தனிமையை உணர்த்துவதில் அது கூட ஒரு சிறை ! அவனுக்கு மூன்று வேளையும் தவறாது உணவு வரும் ! உண்டுவிட்டுப் படுத்தால் உறக்கத்தை முந்திக்கொண்டு கனவு வரும் ! அந்தக் கனவுகளில் முழுக்க முழுக்க சத்தம் தான் ! ரத்தம் தான் ! யுத்தம் தான் ! ஆனால் அனைத்தும் நாளடைவில் குற
பிரம்மச்சாரி - 3 மனமெல்லாம் ஒரே குஷ்டமாயிருக்கிறது ! எவளைப் பார்த்தலும் மனதுக்கு இஷ்டமாயிருக்கிறது ! வாழ்வென்பதே பெரும் கஷ்டமாயிருக்கிறது ! நாங்கள், நொந்து நொந்தே எழுகிறோம் காலையில் ! கூலிக்கு மாரடிக்கிறோம் ஆலையில் ! தனியாகத்தான் நடக்கிறோம் வெறிச்சோடிய சாலையில் ! அரிதாக சில பெண்கள் எங்கள் பாதையில் நடக்கிறார்கள் ! ஒரு தெருவிளக்கைப் போலெண்ணி வெறுமனே எங்களைக் கடக்கிறார்கள் ! அவ்வளவுதான் ! இப்படியே எவ்வளவு நாள்தான் ஏங்குவது ? எத்தனை முறைதான் கனவிலேயே காதலை வாங்குவது ? அநாதையாய்க் கிடக்கிறது அலைபேசி ! விற்றுவிடத்தான் வேண்டும் அதனை விலை பேசி ! பொறியாளன் மருத்துவன் மென்பொருள் வல்லுனன் இவர்களுக்குத்தான் இப்போது வீசுகிறது அலை ! ஒவ்வொருவனும் சந்தையில் நல்ல விலை ! நட்டாற்றில் தவிக்கிறது எங்களைப் போன்ற நடுத்தரனின் நிலை ! பட்டம் படித்தவனுக்கு திருமணம் கூடாதென்று சட்டம் வந்தாலும் கட்டம் சரியில்லையென்று விட்டம் பார்த்தே வாழ்க்கையைத் தொலைக்க வேண்டியது தான் ! வேறு என்ன செய்ய ?