Skip to main content

Posts

Showing posts from March, 2011
தடயம்தொடர்ச்சி ....................

ஞாயிற்றுக் கிழமை , காலையில் எழும்போதே அடிவயிற்றில்சுகமான அவஸ்த்தையை உணர்ந்தேன் . சுமலதா மேடத்தால் ஏற்பட்ட அவஸ்த்தை அது .அடிப்படையில் நான் அந்த மாதிரி ஆள் இல்லை . நல்ல பாரம்பரியத்தில்விளைந்தவன் . என் தாத்தாவுக்குத் தாத்தா பெரிய ஜாமீன்தாரராம் . ஒரு ஊரையேகட்டி ஆண்டவராம் . அவரின் , ஜீன் என் உதிரத்திலும் இருப்பதாய் என் ஆயாஅடிக்கடி சொல்லும் . அவரைப் போலவே எனக்கும் வலது கண்ணுக்க்குக் கீழ் ஒருமச்சம் . அவரைப் போலவே வலது தோள்பட்டையில் ஒரு மச்சம் . அவரைப்போலவேமுகசாடை , நடை , பேச்சு , எல்லாம் . நான் வியாழக்கிழமைகளில் அசைவம்சாப்பிட மாட்டேன் . பிற்பாடு என் ஆயா அதை உணர்ந்து கொண்டு , அந்த ஜமீன்தாத்தாவும் வியாழக்கிழமைகளில் அசைவம் சாப்பிட மாட்டாரென்று சொல்லி அழுதது. வாழ்ந்து கெட்ட பரம்பரை எங்களுடையது . மாளிகை போன்ற அரண்மனையில்வாழ்ந்த எங்களின் முன்னோர்கள் , என்ன பாவம் செய்து தொலைத்தார்களோ , இன்றுஅவர்களின் வழி வந்தவர்கள் சாதாரண ஒட்டு வீடுகளில் வாழ்ந்து கொண்டு ,வாரக் கூலி வேலை செய்து கொண்டு , ரேசன் கடைகளிலும் , குழாயடிகளிலும்சண்டை போட்டுக்கொண்டு மிகவும் பாவமான ஒரு வாழ…
கவிதையைப்பற்றியகவிதை


என்னபார்வைஇது ?
தோட்டாகூடத்தோற்றுப்போகும் !

உண்மையைச்சொல்கிறேன்
வெள்ளையானஉன்சிரிப்பில் - உள்ளம்
கொள்ளைபோய் விட்டது !

உள்ளபடிசொல்கிறேன்
உன்னைப்பார்க்கும்வரை
நான்கவிஞனில்லை !

கண்ணுக்குள்ளேஎன்ன
கருவட்டக்கருப்பு ?
காந்தமா ?

அங்கத்தில்தங்கமா ?
தங்கத்தில்அங்கமா ?
குழப்பத்தைநிவர்த்திசெய் !

உன்னைப்பார்த்தபிறகு
என்னைநானேகிள்ளிப்பார்க்கிறேன் !
ஏனெனில்எனக்குஎப்போதும்
கனவில்தான்தேவதைகள்தெரிவார்கள் !

என்னைக்கொல்ல வேண்டுமென்று
நீநினைத்தால்
இன்னும்கொஞ்சம்சிரி !

உன்னைப்பார்த்தபிறகு
நான்முதலில்
காதலைத்தான்காதலித்தேன் !

உனதுபுகைப்படத்தைத்தான்
வெறுமனேபார்த்துக்கொண்டிருந்தேன்
ஒருமணிநேரம்போனதுதெரியவில்லை !

உன்னைஉள்ளபடியேபுகழ
தமிழில்தற்போதுவார்த்தைகள்இல்லை
தமிழிலிலேயேஇல்லையென்றால்இனி
தேவபாஷையைத்தான்தேடிக்கற்கவேண்டும் !

இந்தகிரகத்தின்
இன்னொருநிலவாநீ ?
இப்படிஜொலிக்கிறாய் !

சரிசரி.....
குறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .

தடயம்

எனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா ? சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் ? எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் ? வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .
என் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை " மதன சுந்தரி " டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ? எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் " ஆயாக்கள் " தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே " கடுப்பு முடியாக " இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …
தமிழ்

அன்னையால்
அறிமுகப்படுத்தப்பட்ட
ஆதிஅன்னைநீ !

விவரம்தெரிந்தபிறகு
தாய்பாலினும்மூத்தபால் ,
முப்பால்எனஅறிந்தோம் !

அறப்பசியையும் ,
அறிவுப்பசியையும் ,
அதனைஅருந்தித்தான்
ஆற்றிக்கொண்டோம் !

வீரம் ,
உன்னிலிருந்துவிளைந்ததுதான் !
காதல்கூட - நீ
கற்றுத்தந்ததுதான !

உன்னைக்
காதாறக் கேட்டவர்கள் ,
செவியாலும்சுவைஉணரமுடியும் !
செவியாலும்மணம் நுகரமுடியும் !
எனபேதையைப்போல
போதையில்புலம்பிச்செல்கிறார்கள் !

உன்னைப்படித்துக்கொண்டே
உண்ணும்உணவுதான்
நிலாஇல்லாதசமயங்களில்
எங்களுக்கானநிலாச்சோறு !
அது ,
அன்னையால்ஊட்டப்படும்
அன்புச்சோறு ! அறிவுச்சோறு !

கற்பனைக்கருவாகி
மொழிவழியேஉருவாகி
உன்னைநீயே
படைத்துக்கொள்வதில்
இங்கேஎண்ணற்ற படைப்பாளிகள்
உருவாகிவிடுகிறார்கள் !

எங்களின்பிழைப்பே
உன்னால்தானநடக்கிறது !
உன்னை
விண்டெடுத்துவிற்பவர்கள்
வாழ்வாங்குவாழ்கிறார்கள் !

எங்களின்
தாகத்தைத்தணிக்கிற
ஊற்றும்நீயே !
எல்லாம் முடிந்து விட்டது

எல்லாம் முடிந்து விட்டது .

அப்படித்தான்
தோன்றுகிறது !

அல்லது

அப்படி
நினைத்துக் கொள்கிறோம் !

அகதிகளாக வாழ்வதென்பது
அனாதைத்தனத்தின் உச்சம் !
அதுதான் எங்களின்
ஆண்டாண்டுகால
அவலத்திற்குக் கிடைத்த மிச்சம் !

தலைவன் இல்லாவிடினும்
தலைமை உயிர்ப்போடு தான் இருக்கிறது!

மறுபடியும் ஒரு தலைவன் வரலாம் !
பழையபடியே புரட்சி நடக்கலாம் !

ஆனால் எதற்கு ?

எங்களைப் பொறுத்தவரை ,

தன்மானம் என்பது ,
தோண்டிப் புதைக்கப்படவேண்டிய ஒன்று !

ஆணவம் ,
அழிவுக்கு அடிகோலுவது !

சுயமரியாதை ,
வன்முறையின் தந்தை !
அது ,
களையப்படவேண்டிய
மூட நம்பிக்கையும் கூட !

இப்போது
எங்களை
எல்லோரும் மறந்து விட்டார்கள் !

எங்களில் சிலர்
எங்கேயாவது எப்போதாவது
மீண்டும் கொல்லப்ப்டும் வரை
நாங்கள் அவர்களுக்கு
புளித்துப்போன பழைய செய்திதான் !

இந்த வாழ்க்கை கூட
நன்றாகத்தான் இருக்கிறது !

காலையில்
சூடான இட்லி , சட்னி , இத்யாதிகள் ............

அதன் பிறகு ,
வெள்ளை அரிசியில்
மணக்கும் மதிய உணவு !

சூரியன் சாய்ந்த இரவில்
சப்பாத்தியும் குருமாவும் !

முன்பு ,
எங்களின் கதைகளை
ஊர் படித்தது !
இப்போது ,
ஊர்கதைகளை
நாங்கள் படிக்கிறோம் !

அதைவிட ,
தொலைக்காட்சியில் தவமிருந்தால்
தொல்லையின்றிப் பொழுது ப…
பெண்கள்

தெருவில்
நடந்து போகையில் - கன்னிகள்
கடந்து போக வேண்டும் !

திரையரங்கில்
திரும்பிய பக்கமெல்லாம்
தேவதைகள் தெரிய வேண்டும் !

பழரசக் கடைகளில்
பருகுவதற்கு ,
பைங்கிளிகள்
பக்கத்தில் வேண்டும் !

கோவில்களில்
கையெடுத்துக் கும்பிட
கடவுள் இருந்தாலும்
கண்ணெடுத்துப் பார்க்க
குமரிகளும் கூட வேண்டும் !

"வலைக்குள் " நுழைந்தால்
வகையான வஞ்சிக்கொடிகள்
வசமாகச் சிக்க வேண்டும் !

பக்கத்து வீட்டில்
பருவச்சிட்டுக்கள் வலம்வந்தால்
போகாத பொழுதும்
போகாமல் போகும் !

அவனி முழுக்க
அம்சமான திம்சுக்கட்டைகள்
பவனி வந்தால்
அறுபதிலும் ஆசை நரைக்காது !

முப்பது கடக்காத
"மேடம் " ஒருத்தி
மேலதிகாரியாக
வந்து வாய்த்தால்
கடினப் பணியையும்
கடிதே முடிக்கலாம் !

பேருந்தில் போகும்போது
பக்கத்து இருக்கையில்
பதுமை ஒருத்தி
பாங்காய் வந்தமர்ந்தால்
பழகிய பயணமும்
புதுமையாகத் தோன்றும் !

மருத்துவமனைகளில்
மலர்கொடிகள்உலாவந்தால்
நோய்க்கட்டிலில்
சேயைப்போல
துள்ளிக்குதிக்கலாம் !

உற்றதோழிகள்
உடனிருந்தால்
வாலிபத்தின்பாலையில்
சோலைகள்தென்படும் !

கண்ணீர்த்துளிகளை
ஏந்திக்கொள்ள
காதலியின்மடிஇருந்தால்
கவலைகளைப்பற்றிக்
கவலையேஇல்லை !
சொல்லிவிடுஅன்பே


ஒரே ஒரு முறை
சொல்லி விடு !

என் மீதான
உனது காதலை
ஒரே ஒரு முறை
சொல்லிவிடு !

நானாகஎனதுகாதலை
உன்னிடம்சொன்னபோதுகூட - நீ
மௌனமாகத்தான்கேட்டுக்கொண்டாய்
அதைநான்
சம்மதமாகஎடுத்துக்கொண்டேன் !

உனக்கான
காலைவணக்கத்தை
குறுஞ்செய்தியில்வருவிக்கிறேன் !

மதியவணக்கத்தை
மின்னஞ்சலில்தெரிவிக்கிறேன் !

இரவுவணக்கத்தை
அலைபேசியில்அறிவிக்கிறேன் !

ஆனால் ,

சிலநேரங்களில்நீ
சிரிப்பதேஇல்லை !

அலைபேசியில்கூட
அளந்துதான்பேசுகிறாய் !

பெரும்பாலும்
நானேபேசுகிறேன்
நீகேட்டுக்கொண்டுஇருக்கிறாய் !

எனது
பிறந்தநாளன்றுதான்
உனது
புன்னகையேபார்க்கக்கிடைத்தது !

நாணம்மறந்திருப்பாயென
நானாகத்தொட்டாலும்
தீயாகசுட்டதென
நீயாகவிலகிக்கொள்கிறாய் - காதல்
நோயாகக்கசக்கிறது !

கோவிலில்கூட
கடவுளோடுதான் பேசுகிறேன் !

கடற்கரைகளில்
காற்றுதான்வாங்கமுடிகிறது !

திரையரங்குகளில்
திரையைத்தான்பார்க்கிறோம் !

வண்டியில்அமர்ந்தாலும்
விலகியேஅமர்கிறாய் !

நாசுக்காய்ப்பழகுவதென்றால்
நண்பர்களாகவேஇருந்துவிடலாம் !

கனவில்தான்காதலென்றால்
கண்ணியமாகப்பிரிந்துவிடலாம் !

அம்மா
வந்தாலும்வரலாம்வெளியே

வெயிலின்தலைவன்

உச்சியில்இருந்தான் !வெக்கையில்

வெந்ததேகம்

சடுதியில்சக்கையானது !எவனைப்பார்த்தாலும்

எரிச்சலாய்இருந்தது !


சென்றவிடமெல்லாம்
சாக்கடைமணத்தது !

யாவருக்கும்
முன்மண்டையில்
உற்பத்தியாகிப்பொழிந்தது
வியர்வையின்அருவி !

ஆசைகள்
ஆயுளைநீட்டின !

மருந்துகள்
மரணத்தைஒத்திப்போட்டன !

விளைவாய் ,
கும்பல்கும்பலாய்
கூட்டம்கூடிக்கும்மியடித்தது !

விலகாமலேயே
விலக்கப்பட்டார்கள் !

நெருங்காமலேயே
நெருக்கப்பட்டார்கள் !

நடக்காமலேயே
நகர்த்தப்பட்டார்கள் !

சிந்தையில்லா
மனிதர்கள்
மந்தையைப்போல
மிரண்டுஓடினர் !

பேருந்தில்
பெருங்கூட்டம் !

உணவகத்தில்
உலகக்கூட்டம் !

கடைகளில்
கணக்கில்லாதகூட்டம