Skip to main content

Posts

Showing posts from October, 2011
குற்றவுணர்ச்சி மழை பெய்த ஒரு மாலை நேரம் ! மாடத்தில் தந்தை , சூடத்தில் தாய் , பாடத்தில் பையன் , - சமையல்காரி வேடத்தில் மனைவி , கூடத்தில் நான் ! மழைக்கு இதமாய் மிளகாய் பஜ்ஜி ! பொதுஅறிவுப் பாடம் படித்துக்கொண்டிருந்த பிள்ளையின் , " புதுஅறிவு " பாதிக்கக்கூடாதென்று சத்தத்தைக் குறைவாய் வைத்து " செய்திகள் " பார்த்துக்கொண்டிருந்தேன் ! தொலைக்காட்சிப்பாவை பரபரப்பான செய்தியொன்றை புன்னகை கலையாமல் வாசித்தாள் ! எந்தநாட்டிலோ பூகம்பமாம் ! இறந்தவர்களின் எண்ணிக்கை எக்குத்தப்பாய் எகிறிவிட்டதாம் ! புலன்களைக் கூர்மையாக்கி , புத்தியின் இடுக்குகளில் பள்ளிச்சிறுவன் போல புள்ளிவிபரங்களை அள்ளி அடுக்கிக்கொண்டேன் ! நாளை அலுவலகத்தில் மதியஉணவின் பொது " தொட்டுக்கொள்ள " சுவையான செய்தி சுடச்சுடத் தயார் ! இப்போது பூகம்பத்தின் மாட்சிகளை விளக்கும் காட்சிகளைக் காண்பித்தது தொலைகாட்சி ! மூன்று வயதுக்குழந்தை அதனுடைய மொழியில் அம்மாவென்று அலறியபடி இறந்து கிடந்த பெண் ஒருத்தியை எழுப்பும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தது ! அக்காட்சியின் கோரம் கண்டு என் இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருந்த ஈரம் , கண்ணீர்