Skip to main content

Posts

Showing posts from December, 2013
மனிதன் என்பவன் ............. ஒரு மங்களகரமான வெள்ளிக்கிழமை ! குளித்துவிட்டு மடியாகக் கோவிலுக்குக் கிளம்பினேன் ! பக்கத்துவீட்டுக் குழந்தை வீறிட்டழுதது ! இருசக்கர வாகனமொன்று சேறிறைத்தது ! எதிரில் வந்தவன் காறி உமிழ்ந்தான் ! கழிவுநீர் ஊர்தி கடந்து போனது ! எவனோ எவனையோ திட்டிய கெட்டவார்த்தை காற்றுவாக்கில் காதில் வந்தது ! இனவிருத்தியில் இரு நாய்கள் ! தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி ! பக்கத்தில் பன்றியிறைச்சி ! குடித்துவிட்டு ஒருவன் வாந்தியெடுத்தான் ! கோவிலில் வாங்கிய பூ வாடியிருந்தது ! ஒரு கிழிந்த நோட்டு கைக்கு வந்தது ! சில்லறை இல்லையாம் ! நுழையும்போதே வலதுகால் தடுக்கியது ! போடாத காசிற்குப் பிச்சைக்காரி சபித்து அனுப்பினாள் ! உள்ளே கொடுங்கூட்டம் ! வாங்கிய விளக்கில் திரியைக் காணவில்லை ! வரிசையில் ஒருவன் காலை மிதித்தான் ! கொடுத்த தேங்காய் அழுகிவிட்டது ! தரிசனம் காணும்போது தலைகள் மறைத்தன ! ஒற்றும்போது கற்பூரம் அணைந்தது ! அந்தக்கிழிந்த நோட்டை அய்யர் கூப்பிட்டுத் திருப்பிக் கொடுத்தார் ! பாதி வரிசையில் பிரசாதம்
திருமணம் 2013    ' சொல்லியனுப்புகிறோம் ' என்ற சொல்லை காலம் என்ற விலை கொடுத்து பெண் வீட்டார் வாங்கி விட்டனர் ! ------------------------------ -------------- இன்ஜினியர் பெண்ணும் இன்ஜினியர் ஆணும் தம்பதியாவது காலத்தின் கட்டாயம் ! டாக்டருக்கும் இது டிட்டோ ! ------------------------------ -------------- திருமணம் கல்லூரியில் நிச்சயிக்கப்படுகிறது ! ------------------------------ -------------- மாப்பிள்ளையின் சம்பளமும் மறைமுக வரதட்சணைதான் ! கொண்டுவாருங்கள் இதற்கொரு இ. பி. கோ ! ------------------------------ -------------- குவித்துத்தான் வைக்கிறார்கள் ஆண் ஜாதகத்தை ! பொறுக்கித்தான் எடுக்கிறார்கள் பெண் ஜாதகத்தை ! ------------------------------ -------------- ஒவொரு வினைக்கும் எதிர்வினை உண்டு ! ஆணினமே அனுபவி ! ------------------------------ -------------- காலஸ்த்ரி, திருநாகேஸ்வரம், திருவிடந்தை, திருமணஞ்சேரி ....................... அடுத்து என்ன ஜோசியரே ? ------------------------------ -------------- தந்தை மகற்காற்றும் உதவி திருமணத
ஒரு விடைபெறுதல்  தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது ! மேஜையில் எதிரெதிராக நீ ! நான் ! தேநீருடன் கூடிய நம் கடைசிச்சந்திப்பு ! தலைகுனிந்தபடி நீ ! உன்னையே பார்த்தபடி நான் ! ஒருவகையில் நம் முதல் சந்திப்பிலும் இப்படித்தானிருந்தோம் ! வேடிக்கைதான் ! இருவீட்டார் சம்மதத்துடன் நாம் பிரியப்போகிறோம் ! சுற்றிலும் ஆங்காங்கே தேநீர் அருந்தும் காதலர்களின் ஆசிர்வாதத்தோடு நாம் பிரியப்போகிறோம் ! என் இரண்டுவார தாடி உனக்குப்பிடிக்காதுதான் ! நினைவிருக்கிறதா இந்த  நீல நிறச்சட்டை நீ வாங்கித்தந்தது ! என் கை நகங்களில் அழுக்குப் படிந்துள்ளது ! சற்று முன்னர்தான் சிகெரெட் பிடித்தேன் ! என்னில் எல்லாமே இயற்கையாக இருக்கின்றன என் புன்னகையைத்தவிர ! எனக்குப்பிடித்த மஞ்சள் சுடிதாரில் நீ வரவில்லை ! பவுடர் சற்று அதிகம் ! கூந்தலில் ரோஜா இல்லை ! நான் வாங்கித்தந்த பிளாஸ்டிக் வளையல்களை உன்கைகள் அணிந்திருக்கவில்லை ! உதட்டுச்சாயத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் ! உன்னில் எல்லாமே செயற்கையாக இருக்கின்றன ! உன் கண்களைத்தவிர ! அந்தக்கண்களில் கண்ணீ