Skip to main content

Posts

Showing posts from 2014
இதைப் போலவே இருக்கும் இன்னோர் உலகத்தில் மனிதச்சிலை வீற்றிருக்கும் ஒரு கோவிலில் கடவுளின் பிரார்த்தனை இப்படித்தொடங்குகிறது ......... " எல்லாம் வல்ல மனிதா ............. தயவுசெய்து தயவுசெய்து சகமனிதன் துயர் துடை ! "
நியூட்டனின் மூன்றாம் விதி நமது போராட்டங்கள் கேயாஸ் தியரிப்படி இப்பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் அவர்களுக்குப் புறக்கணிக்கத்தக்கவை ! இஃது இன்னோர் விடுமுறை என்றுதான் அவர்கள் கடந்துபோகிறார்கள் நமது கடையடைப்புக்களை ! மூன்று நாட்களுக்கு மேல் பேருந்துகளை முடக்கி வைத்தால் அது நமக்கே பதிப்பு என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ! உண்ணாவிரதங்கள் நமது வயிற்றினில் ஏற்படுத்தும் நீர்த்த அமிலங்களில் அவர்கள் நீச்சல் பழகுகிறார்கள் ! நாம் நாளெல்லாம் நின்று கத்திச்செய்யும் ஆர்ப்பாட்டங்களால் அதிகப்பட்சம் அன்று மாலை மழை வரலாம் ......... அவ்வளவே ! நமது மொட்டை போடுதல்களையும் தீச்சட்டி ஏந்துதல்களையும் சத்ரு சம்ஹார யாகங்களையும் முன்னெப்போதும் போலவே இப்போதும் அசுவாரசியமாய்ப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார் கடவுள் ! நமக்கான தியாகிப்பட்டம் சுமந்துவரும் செய்தித்தாள்களின் தற்கொலைப் பெட்டிச் செய்திகள் காலப்பெருநெருப்பில் அழிந்து போகலாம் நம்மைப் போலவே .........! அப்போதும் இப்போதும் எப்போதும் .......... கைகட்டி வேடிக்கை பார்க்கவும
ஓர் எளிய கவிதை " ச்சீ இவ்வளவு எளிய கவிதையா ? " என்று ஓர் எளிய கவிதையைப் புறக்கணிக்கிறேன் ! " ச்சீ இவ்வளவு கடின மனிதனா ? " என்று அக்கவிதை புறக்கணிக்கிறது என்னையும் .........!
புன்னகைக்காதவர்கள்  எதிரே வருகிற ஒரு தெரிந்தவன் புன்னகைப்பான் என எதிர்பார்க்கிறேன்...... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறான் ! எதிரே வருகிற ஒரு தெரிந்தவனான நான் புன்னகைப்பேன் என எதிர்பார்த்திருக்கக் கூடும் அவனும் .......... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறேன் ! எதிரே வருகிற நாங்கள் புன்னகைத்துக் கொள்வோம் என எதிர்ப்பார்க்கிறது புன்னகை ............ ஏமாற்றிவிட்டுக் கடந்து போகிறோம் ! ====================== ====================== ======================
ஒரு கரண்டி அன்பு எழுதி முடித்ததில் செத்துப் போனது ஒரு கவிதை ! ========================= பூட்டிய கதவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கும் கத்திக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியும் கொண்டாடித் தீர்க்கின்றன ஒரு மறதியை ! =========================== எடுக்க வேண்டும் எடுக்க  வேண்டும் என்று நினைக்கும் முடிவுகளையே நாம் எடுத்து விடுகிறோம் என்றாவது ! =========================== இந்திரியத்தின் கடைசித் துளி வெளியேறுகிறது ! ஞானத்தின் முதல் துளி உள் நுழைகிறது ! =========================== வேலை என்பது கடல் ! வாழ்க்கை என்பது தீவு ! இங்கேயும் தீவு, கடலில் தான் இருக்கிறது ! =========================== நம்முடைய இறுக்கமெல்லாம் ஒரு கண்ணாடியைப் போலத்தான் ! அன்பின் சிறுகல் பட்டாலும் அது உடைந்து விடும் ! =========================== அலைபேசிக்குள் ஆயிரம் ரகசியம் புதைத்திருக்கும் பெண்ணே ........ நீயல்ல பாரதி கண்ட புதுமைப் பெண் ! =========================== இறைச்சியை மட்டும் ஒதுக்கி விட்டு மேலாக்க எடுத்துப் போடும் குஸ்காவுக்கு அசைவ தோஷமில்லையாம் ! பின்னிரவு
மழைக் கலைஞன் பரபரப்புக்கு மட்டுமே  பஞ்சமே வராத  அந்தப் பெருநகரத்துச்  சாலையில்  வான் பூக்களென  பெய்து கொண்டிருந்தது  மழை !  சாலையோரத்தில்  அவன்  சுருண்டு கிடந்தான்  தன்  ஒற்றைக் கையை  மழையில்  ஏந்தியபடி !  ஒரு  நவீன மழை ஓவியம்  போன்றுதான்  அந்தக்காட்சி  முதலில்  மண்டைக்குள் பதிந்தது !  கொஞ்சமிருந்த  சில்லறைகளில்  துன்பச்சங்கீதம்  இசைத்துக் கொண்டிருந்த  அந்த  ஒற்றைக் கையும்  மழைக்குளிரில்  நடுங்கிக்கொண்டிருந்த  ' என்புதோல் போர்த்த '  அந்த உடம்பும்  அவனொரு  ரத்தமும் சதையுமான  இல்லையில்லை ............  ரத்தமும் எலும்புமான  ஒரு உயிர் என்பதை  புத்தியில் அறைந்தன !  பரிதாபப்பார்வையும்  மிரட்சி நடையுமாகப்  பெண்கள் அவனைக்  கடந்து போயினர் !  குடைபிடித்து  வந்த ஒருவன்  அந்த  ஒற்றைக் கைக்கு  காசு போட்டுப்போனான்  ஏற்கனவே  அந்தக் கை  இசைத்துக் கொண்டிருந்த  துன்ப சங்கீதத்திற்கு  மேலும்  சுருதி சேர்ப்பது போல !  மழைக் கலைஞன்  போலக் கிடந்த  அவனை  திகைப்போடு பார்த்து  குரைத்துவிட்டு ஓடியது  தெருநாய் !  மனசாட்சியை  சமாதானப்படுத்துவதற்காகவே  அவனைத்  திரும்பித் தி
சிறுவயதில் நூல்கட்டி விளையாடியதற்காய் மன்னிப்புக்கேட்க வேண்டும் ! ஊசித்தட்டானே நீ எங்கிருக்கிறாய் ? ============================= ஊரில் பல்லாங்குழிச் சிறுமிகளையும் கில்லித்தட்டு சிறுவர்களையும் காணவில்லை ! திரும்பிப்பார்க்கிறேன் ....... என்னுடனே வந்துகொண்டிருந்த என் பால்யத்தையும் காணவில்லை ! ============================= எங்களூரின் தாவணிக்கனவுகள் எல்லாம் இப்போது சுடிதார்க் கனவுகளாக ! அந்தக்கனவில் வண்ணம் இருந்தது ! இந்தக் கனவில் சாயம் மட்டுமே இருக்கிறது ! ============================= கட்டிப்பிடித்துக் கதற வேண்டும் போலிருந்தது ! பாலித்தீன் பைகளை மேய்ந்து கொண்டிருந்த எங்களூர் பசுமாட்டை ! ============================= ஒரு நோயுற்ற முதியவளைப் போல குற்றுயிராக சுருண்டு கிடந்தாள் காவிரி ! முடிந்தமட்டும் கண்ணீர் வார்த்துத் திரும்பிவந்தேன் ! ============================= இரட்டை மாட்டுவண்டியில் கோவணங்கட்டிய ஒரேயொரு விவசாயி தென்பட்டான் ! கடவுளையே பார்த்தது போலிருந்தது ! ============================= வீட்டில் இரவு உணவுக்கு இட்டிலி ! ம்ம்ம்.......... அரிசீம்பருப்புச் சோறை அம்மாவே மற
கண்ணில் தட்டுப்பட்ட பட்டாம்பூச்சி   காற்றெனும் சமுத்திரத்தில் வாழும் மீன்களென மீன்கள் நம்மை நினைத்துக் கொண்டிருக்கலாம் ! ஆனால் எந்த மீனும் இங்கே வந்து மீன் பிடிப்பதில்லை ! =============================== உங்கள் முன்பு தென்படும் நம்பிக்கை என்ற கூட்டில் எந்தப் பறவையாவது வாழ்ந்து கொண்டிருக்கலாம் ! உண்மை என்ற கல்லெறிந்து விடாதீர்கள் ! =============================== அழகாயிருந்தது  என்றாலும் வந்து தொலைக்காமலேயே இருந்திருக்கலாம் , ஏற்கனவே யாரோ எழுதிவிட்டது போலத் தோன்றிய நானெழுதிய அந்தக் கவிதை ! =============================== சுவையாக இருப்பது போன்ற பிரமையைத் தருகின்றன சூடாக இருக்கும் உணவுகள் ! =============================== மருத்துவனாவேன் என்றான் ஒருவன் ! பொறியாளனாவேன் என்றான் ஒருவன் ! விஞ்ஞானியாவேன் என்றான் ஒருவன் ! விவசாயியாவேன் என்றான் ஒருவன் ! நான் ஓடிச்சென்று அந்த வருகால விவசாயியைக் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினேன் ! நாளையவன் வளர்க்கப் போகும் நெற்கதிருக்கு என் கண்ணீர் உரமாகட்டும் ! ================================ ஒற்றை பிராமணனும் ஒரு விதவையும் எதிரெதிரே கடந்து போனார்கள் ! திகை
அது எதோவொரு நாளில் அது எனக்கு அறிமுகமானது ! அன்றிலிருந்து அது எனக்கு உற்ற நண்பன் ! யாராவது அதைச் சீண்டினால் எனக்கு பொல்லாத கோபம் வரும் ! திடீரென்று ஒருநாள் அது என்னைத் தாண்டி வளர்ந்து நின்றது ! அது சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்தேன் ! எனக்கே தெரியாமல் நானதன் அடிமையானேன் ! தனக்கான பெருந்தீனியை கொண்டா கொண்டா என நாலாப்புறமும் அது என்னை விரட்டியது ! அதைத் திருப்திப்படுத்துவதே என் வாழ்நாள் இலக்கானது ! சில தனிமைகளில் அது பூதாகரமாக என்னைப் பார்த்துச் சிரிக்கும் ! பயமாக இருக்கும் ! என் நண்பர்கள் அதைக் கொன்றுவிடும்படி சொன்னார்கள் ! ஆகவே, நானதைப் பட்டினி போட ஆரம்பித்தேன் ! பசியால் அது துடித்தது ! சிறுகச்சிறுக அதைக் கொன்று விட்டதாய் நண்பர்களிடம் சொன்னேன் ! ஒருநாள் என் மனதின் பாதாள அறைதிறந்து உள்ளே சென்றேன் ! அங்கே, சாதுவாய் அது அமர்ந்திருந்தது ! அதற்கான உணவை அளித்துவிட்டு " பயப்படாதே நானிருக்கிறேன் " என்றேன். ! அது புன்னகைக்க ......... நானும், அதுவாகிய நானும் கைகுலுக்கிக் கொண்டோம் !
   இலட்சிய பொம்மை என்னிடம் கொஞ்சம்  களிமண் இருந்தது ! ஒரு பொம்மை செய்ய  ஆசைப்பட்டேன் ! பொம்மை செய்பவர்களின்  உலகத்தில்  சில கருத்துக்கள்  நிலவிவந்தன ! பொம்மை  புன்னகைக்க வேண்டும்  என்றொரு கருத்து ! ஆகவே,  பொம்மைக்கு  புன்னகையை அளித்தேன் ! கண்களில்  உயிர்ப்பு கொண்டதுதான்  பொம்மை  என்றொரு கருத்து ! கொஞ்சம் முயன்றதில்  பொம்மையின்  கண்கள்  உயிர்ப்படைந்தன ! வண்ணமில்லாதது  பொம்மையில்லை  என்றது  ஒரு கருத்து ! சற்றே  மெனக்கெட்டதில் வண்ணத்தில்  ஜொலித்தது  பொம்மை ! கொஞ்சமாவது  உடைந்து  அழுக்கானால்தான்  அது பொம்மை  எனுமொரு கருத்து ! அவ்வாறே  ஆனது பொம்மையும் !  இப்போது  பொம்மை,   பொம்மை உலகத்தின் இலட்சிய பொம்மையாக  உருவெடுத்திருந்தது !  ஆனால், அது  என் பொம்மையாக  இருக்கவில்லை !
    மழை வீடு   வெளியே மழை பெய்துகொண்டிருந்தது ! அறையில் இரவுப்பணியின் உறக்கத்திலிருந்த நான் திடுக்கிட்டு விழித்து கதவைத் திறந்து மழை பார்த்தேன் ! முன்பெல்லாம் மழை பெய்தால் வீட்டில் பஜ்ஜி சுடுவாள் அம்மா ! தொண்டையைச் செருமிக்கொண்டு கதை சொல்லத்தொடங்குவார் அப்பா ! பஜ்ஜி வாசமும் கதை வாசமும் சேர்ந்து இனிதே வீட்டை நிறைக்கும் ! இந்த நினைவுகளை மனதில் சுமந்தபடி நான் பெய்த மழையை வெறித்துக் கொண்டிருந்தேன் ! பஜ்ஜியையும் கதைகளையும் நினைவுகளில் சுமந்தபடி ஊரில் அம்மாவும் அப்பாவும்கூட இதேபோல் மழையை வெறித்துக்கொண்டிருக்கலாம் !  
இயற்கையின் குட்டி நாக்குகள் வெளியே காய்ந்த  ஆடைகளில்  வெயிலின் வாசம் !  ======================================  யாரோவின்  சாயலிலிருக்கும் என்னை  யாரோவென நினைத்து  யாரோ  கடந்து போனார்கள்  நானும் ..........  ======================================  அவரவர்  அவரவர் உலகத்தில்  வாழ்ந்து கொண்டு  அனைவரும்  ஒரே உலகத்தில் தானிருக்கிறோம் !  ======================================  இரவை  இருட்டு என்கிறார்கள்  சிலபேர் !  நிலவு என்கிறார்கள்  சிலபேர் !  நீங்கள்,  இருட்டா ?  நிலவா ?  ======================================  தன்னந்தனியாய்  இனிப்பை  உருட்டிக்கொண்டிருந்த  ஒரு எறும்பை  யாரோ தெரியாமல்  மிதித்தார்கள் !  ======================================  எந்த விளக்குகளாலும்  அணைக்க முடியவில்லை  தனிமை என்ற  இருட்டை !  ======================================  சந்தர்ப்பத்தோடு  புணர்ந்ததில்  நிஜத்தைப் பிரசவித்தது  ஒரு கற்பனை !  ======================================  எறும்புகள் எனும்  இயற்கையின்  குட்டி நாக்குகள்  நக்கிக் கொண்டிருந்தன  நான்  உண்டுமுடித்து எறிந்த  இனிப்பு டப்பாவை !  ==================
இப்படிக்கு இல்லத்தரசி எங்கள் வீட்டில் என் கணவரின் டாபர் மேன் வள் என்கிறது ! மகனின் அல்சேஷன் லொள் என்கிறது ! மகளின் பொமரேனியன் கீச் என்கிறது ! எனது வெறுமை மியாவ் என்கிறது ! ====================================== என் கணவர் தொலைகாட்சியில் மூழ்கிக்கொண்டு ! மகன் இணையத்தில் மூழ்கிக்கொண்டு ! மகள் அலைபேசியில் மூழ்கிக்கொண்டு ! நான் பாத்திரங்களில் மூழ்கிக்கொண்டு ! ====================================== என் கணவர் வீட்டிலிருந்து வங்கிக்குச் செல்கிறார் ! மகன் வீட்டிலிருந்து நிறுவனத்திற்குச் செல்கிறான் ! மகள் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்கிறாள் ! நான் வீட்டிலிருந்து வீட்டிற்குச் செல்கிறேன் ! ====================================== தன்னுடைய வேஷ்டியை என் கணவர் வாங்கி விடுகிறார் ! தன்னுடைய ஜீன்ஸை என் மகன் வாங்கி விடுகிறான் ! தன்னுடைய சுடிதாரை என் மகள் வாங்கி விடுகிறாள் ! என்னுடைய சேலையை மூவரும் வாங்கி விடுகின்றனர் ! ====================================== வீட்டில் என் கணவருக்கென்று தனியறை ! மகனுக்கென்று தனியறை ! மகளுக்கென்று தனியறை ! எ
  நாம் சந்தித்துக்கொள்ளும் போதெல்லாம் எனக்கு நீங்கள் கொடுத்த முகமூடியை நானும் உங்களுக்கு நான் கொடுத்த முகமூடியை நீங்களும் அணிந்து கொண்டபிறகே நம் உரையாடல் தொடங்குகிறது !
  என் அறையில் என்னுடன் ஒருவன் இருக்கிறான் ! சில சமயங்களில் அவன் மகத்தான நண்பன் ! சில சமயங்களில் அவன் மாபெரும் எதிரி ! அவன் பெயர் தனிமை ! 
அப்பா   ஒரு சூரியனைப் போன்றதுதான் அப்பாவின் கோபமும் ! பொழுதானால் மறைந்துவிடும் ! =============================================== பாசங்காட்டும் போது அவர் அப்பா ! அறிவுரை சொல்லும்போது அவர் தந்தை ! ============================================== காயத்திற்கு மயிலிறகு போன்றவள் அம்மா ! மருந்தைப் போன்றவர் அப்பா ! மயிலிறகு காயத்தின் வலியைக்குறைக்கும் ! மருந்துதான் காயத்தை ஆற்றும் ! =============================================== நாம் ஆயிரம் திட்டினாலும் பிறர் அப்பாவைத் திட்டும்போது இயல்பாக எழும் கோபத்தின் பெயர்தான் ரத்தம் ! =============================================== அப்பாவுக்காக மகன் தலை குனியலாம் ! மகனுக்காக  அப்பா தலைகுனியக் கூடாது ! ============================================== இந்த உலகத்திலேயே உன்னைக் கைநீட்டித்திட்டும் உரிமை உன் அப்பனுக்குத்தானிருக்கிறது ! எவனுக்குமில்லை ! =============================================== உன் பொருட்டு உன் அப்பாவின் கண்களில் நீர் வருவது நான்கு  பேர் உன்னைப் பாராட்டும் போதுமட்டும் இருக்கட்டும் ! =============================================== வேறெ
பேருந்தில் அந்த நால்வர்   எனக்கு முன்னே ஒருவன் அமர்ந்திருக்கிறான் ! பின்னே இன்னொருவன் அமர்ந்திருக்கிறான் ! வலப்புறமாக மற்றொருவன் ! இடப்புறமாக வேறொருவன் ! அதுவொரு பேருந்து ! வலப்புறம் அமர்ந்தவன் தன் வசதிப்படி அமர்ந்திருந்ததால் என் வலக்கையை வாகாக வைக்கச் சௌகரியமில்லை ! இடப்புறம் அமர்ந்தவன் இடித்துக்கொண்டு அமர்ந்ததனால் என் இடதுகைக்கும் இடவசதியில்லை ! முன்னேயாவது கால்நீட்டிச் சற்று  ஆறுதல் அடையலாமென்றால் முன்னேயிருந்தவன் கால் முரட்டுத்தனமாய் இடறியது ! பின்னேயாவது கால் நீட்டி ஆசுவாசப்படலாமென்றால் பின்னேயிருந்தவன் கால் பிடாரித்தனமாய்ப் பிறாண்டியது ! நிற்க ............ என் கோபமெல்லாம் எனக்கு நாலாபுறமும் அமர்ந்திருந்த அந்த நால்வர் மீதில்லை ! அந்த நால்வருக்கு மத்தியில் கொண்டுபோய் என்னைக் கிடத்திய என் பாழாய்ப்போன விதியின் மீதுதான் !
வழிப்போக்கனான நான் அந்தச் சாலைக்கூட்டம் பிளந்து எட்டிப்பார்க்கிறேன் ! ஒருவன் அடிபட்டிருந்தான் ! அவன் அநேகமாக இறந்து விட்டிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது ! பார்த்துப் பழகிய ஒரு திரைப்படத்தை உயிரில்லாமல் பார்ப்பது போல காவலர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ! கீழே சரிந்திருந்தது அவன் இருசக்கர வாகனம் ! தலைக்கவசம் இல்லை ! குடித்து வேறு இருக்கிறானாம் ! சர்தான் ! அவசரகால ஊர்தி வந்த பிறகும் யாவரும் எதற்கோ காத்திருந்தனர் ! பார்வையிட அமைச்சர் கிமைச்சர் வருகிறாரோ ? அடிபட்டவன் தொண்டைக்குழியில் உயிரின் அறிவிப்பாக ஒரு மெல்லியஅசைவு தென்படுமுன் அடியேன் அவ்விடம் விட்டகன்றேன் !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
துப்பாக்கி 'துப்பார்க்குத் துப்பாய' படிக்குமுன்பே துப்பாக்கி எனக்கு அறிமுகம் ! நானறிந்த துப்பாக்கியில் அப்போது ஆறு குண்டுகள் ! இப்போது எண்ணிக்கை சற்றுக் கூடியிருக்கலாம் ! ஒரு துப்பாக்கியை முறைப்படி வாங்கும் விவரங்களை இணையத்தில் தேட வேண்டும் ! கைவசம் ஒரு லகரம் இருக்கிறது ! தொகை சற்றுக்கூடுதலானால் வங்கிக்கடன் பெற்றுக்கொள்ளலாம் ! துப்பாக்கியோடு சேர்த்து சுடுவதற்கான பயிற்சி இலவசமா அல்லது அது தனியா ? சுட்டுப்பழக கூடுதல் குண்டுகள் தருவார்களா ? பீரோவின் ரகசிய மூலையில் அதைப் பதுக்கவேண்டும் ! அந்த ஒற்றைச்சாவி எப்போதுமிருக்கும் என் உள்பாக்கெட்டில் இதயம் தொட்டுக்கொண்டு ! எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள் தான் ! அவர்களைக் கொல்லவேண்டிய தேவை எனக்கில்லை ! மேலும், அவர்களைக் கொல்ல வாய்த்துப்பாக்கி போதும் ! கைத்துப்பாக்கி தேவையில்லை ! வேட்டையாட விருப்பம்தான் ! காடுகளைத்தான் காணவில்லை ! ஆகவே அந்தக்காரணமும் இல்லை ! பாதுகாப்புக்கு நான் துப்பாக்கியை விட பணத்தை நம்புகிறேன் ! தற்கொலை புரிவதென்றால் தூக்கமாத்திரை தின்று சுகமாகச் சாகலாம் ! துப்பாக்கி தேவையில்லை ! பறவை சுடுவதென்றால் எஞ்சியிருக்கும் காக
நாயும் நானும் அதுவொரு மதிய வேளை ! உருவாகிக்கொண்டிருந்த புதிய வேளை ! யாருமில்லை தெருவில் ! நான் நடந்து கொண்டிருந்தேன் வியர்வையில் குளித்த உருவில் ! சூழலில் நெருப்பு ! தவித்தது செருப்பு ! நீரூற்றி வெளியில் வைத்தால் வெந்துவிடும் பருப்பு ! இப்போதைக்கு யாருமில்லை அறையில் ! கொஞ்சநேரம் விடுதலை எனக்கந்த சிறையில் ! நாடலாம் தனிமையை ! பாடலாம் இனிமையை ! என்ன இனிமை என்கிறீர்களா ? ஆபாசப்படம் மற்றும் சுயமைதுனம் ! பின்னே பாழும் பிரம்மச்சாரியான நான் தனிமை கிடைத்தால் பகவத் கீதையா படிக்க முடியும் ! இதைச்சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை ! போலிப்புனிதங்களில் எனக்கு மயக்கமில்லை ! மேலும் இம்மாதிரி எழுதி வைத்தால்தான் இக்கவிதையை நவீனத்தில் சேர்ப்பார்கள் ! இல்லையெனில், மரபு என்று கூறி பரணில் போடுவார்கள் ! எதில் விட்டேன் ? ஆங் ,,,,,,,,,, தனிமையைக் கொண்டாடலாம் ! இன்பத்தில் திண்டாடலாம் ! இன்ன பிற ,,,, இன்ன பிற ,,,,,,,,,, அப்போதுதான் அதைப்பார்த்தேன் ! அதுவொரு நாய் ! பயமுறுத்தியது அதன் வாய் ! அது, பல்லைக்காட்டிக் குரைத்தது ! அதன் பாஷையில் கோபமாய் எதையோ உரைத்தது ! ஐயகோ ! இதென்ன வம்பு ? தேவையில்லாத துன்பத்தின் அம்ப
                                                                     மறதி அந்த சாலையோர கடைக்காரக்கிழவி, பாக்கி சில்லறையை நாளை வாங்கிக்கொள்ளும்படி கூறியிருந்தாள் ! மறுநாள் மழை பெய்ததால் அவள் வரவில்லை ! அதற்கும் மறுநாள், அவள் எனக்குத் தரவேண்டியதை உண்மையாக மறந்துவிட்டாள் ! நான் பொய்யாக மறந்துவிட்டேன் !  
   ஏதோவொன்று நடப்பதற்கு முன்பு சந்தர்ப்பம் ! நடக்கும் போது சம்பவம் ! நடந்த பின் செய்தி !  
   ஒருவனை எனக்குப் பிடிக்கவில்லை ! அந்த ஒருவனை இன்னொருவனுக்கும் பிடிக்கவில்லை ! அந்த இன்னொருவனை எனக்குப் பிடிக்கும் ! ஒருவனை எனக்குப் பிடிக்கிறது ! அந்த ஒருவனை இன்னொருவனுக்கும் பிடிக்கிறது ! அந்த இன்னொருவனை எனக்குப் பிடிக்கலாம் ! அல்லது பிடிக்காமல் போகலாம் ! 
  நிறுத்தத்தில் என்னுடன் நின்று கொண்டிருந்தவன் தயங்கியபடி என் முகம்பார்த்தான் ! நல்லவேளை, பேருந்து வந்துவிட்டது !
                                                              இரங்கற்பா   நானெழுதிய இரங்கற்பாவையும் சேர்த்தே தீமூட்டுகள் ! ஏனெனில் அதை வாசித்துவிட்டு சில கைதட்டல்களை எதிர்பார்த்திருந்தேன் !