Saturday, April 30, 2011

இறைவனாலும் இயலாது
மின்சாரமில்லா


மதியப் பொழுது !'
தொலைக் காட்சியும்


துணையில்லை !
தொலை பேசவும்


இணையில்லை !
உறக்கமும்


உபசரிக்கவில்லை
தினசரியும்


அனுசரிக்கவில்லை !
கழுவ வேண்டிய


பாத்திரங்கள் !
கொடிகளில்


தொங்கும்


துவைக்காத துணிகள் !
மூலையில் குவிந்த


பாலித்தீன் குப்பைகள் !
காலியான


மது புட்டிகள் !
அறை எனும் சிறை !
பணியிடம் எனும் பலியிடம் !
பெண்கள் இல்லாத பயணங்கள் !
துணையில்லாமல் பார்க்கும்


திரைப்படங்கள் !
காதல் இல்லாத


கனவுகள் !
காதலி இல்லாத


கடற்கரை !
குறைக்கத் தேவையில்லாத


தொப்பை !
சிரைக்கத் தேவையில்லாத


தாடி !
தலையெழுத்து எனும்


பிழைஎழுத்து !
விதி எனும் சதி !
ஜாதகம் எனும் பாதகம் !
வரம் இல்லாத தவம் !
பிரமச்சர்ய சூனியம்


நரகத்தை விடக் கொடியது !
அறையை விட்டு


வெளியே வந்தேன் !
பக்கத்து வீட்டுப் பாட்டிதான்


பல்லிளித்துப்


பார்த்துப் போனாள் !
நண்பனோடு போகையில்


எதிரே வருபவள்


அவனை மட்டும் பார்க்கிறாள் !
கல்லூரித்தோழன் ஒருவன்


வலையில் வலைவீசி


வஞ்சிக்கொடி ஒருத்தியுடன்


வகையாய் வம்பளக்கிறான்
அதைப்பார்த்து


நானும் வலையில்


உலவிப் பார்த்தேன்


கிழவி கூடக் கிடைக்கவில்லை !
அலுவலகத் தோழன் ஒருவன்


அத்தை மகளோடு


வித்தையாய் வார்த்தையாடுகிறான் !
எனக்கோ ,


அத்தை மகள்


வயதுக்கே வரவில்லை !
அக்காவுக்கு


மகளே இல்லை !
இருக்கும் ஒரேயொரு


மாமன் மகளோடு


மோகம் வளர்க்க


காமன் என்னை அனுமதிக்கவில்லை !
எண்களில்


பெண்களே இல்லாத


அலைபேசியை


விலைபேசி விற்றால் தான் என்ன ?


தண்மையாய்ப் பேச


தகுந்த துணையொருத்தி இல்லாமல்


தூங்காமல் தவித்த


தனியிரவுகள் எத்தனை எத்தனை ?
எங்களின்


வாலிபப் பசிக்கு


காதல் பழரசங்கள்


காலியாகி விட்டனவாம் !


அடுத்ததாக இருப்பது


ஆபாசம் எனும்


அழுகிய மாமிசம் தானாம் !
இந்த வையகத்தில்


இறைவனாலும்


இயலாத காரியம்


ஒன்றிருக்குமானால்


அது


என் போன்றவர்களுக்கு


ஏற்றதொரு


துணை தேடித்தருவது தான் !!!


அதன் பிறகு ...........


அதன் பிறகு ,


பெண்களோடு பேசும்போது


அவர்களின்


கண்களை மட்டும் பார்க்கும்


கண்ணியம் வந்துவிடும் !
அதன் பிறகு ,


கடந்து சென்றவள்


தேவதையாய் இருந்தாலும்


திரும்பிப் பார்க்கத் தோன்றாது !
அதன் பிறகு ,


பணியின் சுமை


பெரிதாகத் தெரியாது !
அதன் பிறகு ,


கனவுகள் கவனிக்கப்படும் !
அதன் பிறகு ,


உணவின் மீதான


விருப்பம் குறையும் !
அதன் பிறகு ,


இதயத் துடிப்பு


இதமாகும் !
அதன் பிறகு ,


தன் தாடியைத் தானே


கண்ணாடியில் பார்த்து


நாளாகியிருக்கும் !
அதன் பிறகு ,


பேச்சு மென்மையாகும்


நடை நளினமாகும் !
அதன் பிறகு ,


மதுவின் கசப்பு


பிடிக்காமல் போகும் !
அதன் பிறகு ,


மொட்டை மாடியில்


" மாலைகள் " கழியும் !
அதன் பிறகு ,


சத்தமில்லாமல்


பேசும் கலை கைவரும் !
அதன் பிறகு ,


பறவைகளின் சத்தங்கள்


உணரப்படும் !
அதன் பிறகு ,


நிலவின் மீது


நேசம் பிறக்கும் !
அதன் பிறகு ,


பேசாத இரவுகளில்


உறக்கமே வராது !
அதன் பிறகு ,


காத்திருப்பது


கடினமாகத் தோன்றாது !
அதன் பிறகு ,


ஒரு கோப்பைத் தேநீர் குடிக்கவும்


ஒரு மணிநேரமாகும் !
அதன் பிறகு ,


பிச்சைக் காரனுக்கு


மறுக்க மனம் வராது !
அதன் பிறகு ,


பேட்டரி தீர்ந்தால்தான்


பேச்சு நிற்கும் !
அதன் பிறகு ,


உடம்பின் உஷ்ணம்


உயர்ந்தே இருக்கும் !
அதன் பிறகு ,


ஒரு மொக்கை


குறுஞ்செய்தியின் சாரம் போதும்


ஒரு வாரம் முழுக்க


சிரித்துப் பேசுவதற்கு !
அதன் பிறகு ,


திரைப்பட வன்முறை


வெறுப்பாயிருக்கும் !
அதன் பிறகு ,


காதல் பாடல்கள்


மனப்பாடமாகும் !
அதன் பிறகு ,


கிறுக்கியதெல்லாம்


கவிதையாகும் !
அதன் பிறகு ,


வெட்ட வெளியை


வெறித்துப் பார்த்தபடி


வெகுநேரம் அமர்ந்திருக்கலாம் !
அதன் பிறகு ,


பூங்காவில்


வேடிக்கை பார்ப்பது


வாடிக்கையாகலாம் !
அதன் பிறகு ,


கடற்கரைக் காதலர்கள்


கடவுளாவர் !
அதன் பிறகு ,


தானாய் சிரிப்பதும் ,


தானாய்ப் பேசுவதும்


தானாய் நிகழும் !
இவையெல்லாம்


எதன்பிறகு என்கிறீர்களா ?


அனுபவித்தவர்கள் அதை


அழகாகப் புரிந்து கொள்வார்கள் !!!


Monday, April 25, 2011

கவிதை செய்தல்
உயிரை உருக்கித்


தயாரிக்கும்


உணர்வின் இரசம் !
மூளையைப் பிழிதெடுக்கும்


மொழிச்சாறு !
உணவுண்ணும் போதும்


கனவுண்ணும் கைங்கர்யம் !
கற்பனையின் ,


கையில் அகப்பட்டது


கைவிட்டுப் போகாதிருக்க


கையோடு இருக்கும்


கைக்குறிப்பு !
குளியலறையிலும்


குதித்தாடும் சிந்தனைகள் !
பணிநடுவிலும்


அணிவகுக்கும் அழகுணர்ச்சி !
சக மனிதனின்


சூழல் திருடும் சாமார்த்தியம் !
உலகப் படைப்புகளில்


ஊழல் செய்யும் சாணக்கியம் !
ரகசியங்களை


ரசனைப் படுத்தும் ரசாயனம் !
பழமையைப் புறந்தள்ளும்


பௌதிகம் !
பிறப்பெடுத்த மலர்ச்சியிலும்


பிரசவித்த அயர்ச்சி !
புத்தி சொல்லும் கேனத்தனம்


புத்தி இழக்கும் ஞானத்தனம் !
உணர்ச்சிக்கு


வடிவம் கொடுக்கும் வித்தை ! - மொழியுடனான


புணர்ச்சிக்கு


படுக்கை விரிக்கும் மெத்தை !
எண்ணங்களின் வானவில்லுக்குப்


பேனாவால் மழை பொழிதல் !
உண்மையின் அந்தரங்கம் மறைக்க


பொய்யால் ஆடை நெய்தல் !
ஒரே ஒரு வார்த்தைக்கும்


வாரக்கணக்கில் மெனக்கெடுதல் !
பாலையில் சோலை தேடுதல்


சோலையில் பாலை தேடுதல் !
எண்ணங்களின் கோலத்திற்கு


வார்த்தைகளால் வண்ணமிடுதல் !
அறிவு என்னும் தறி கொண்டு


வரி எனும் நூல் கொண்டு


மொழிப்பெண்ணின் மானம் காக்க


சேலை நெய்யும் கலை !
கவியில் வாழாத நாட்கள் ,


புவியில் வாழாத நாட்கள் !
யாசித்ததை வாசித்து


வாசித்ததை நேசித்து ,


நேசித்ததை யோசித்து ,


யோசித்ததை வேசித்து


வேசித்ததை .....................


ச்சே ! இதற்கு மேல்


எதுகை எட்டவில்லை


விட்டு விடுங்கள் !
இதைப் பற்றி


சொல்லிக்கொண்டே போனால் ,


இது ஒரு


முடியாத முடிவிலி !
இதை ,


இப்போதைக்கு


நிறுத்தி வைக்கும் நான் ஒரு


" முடியாத " அறிவிலி !!!
Friday, April 22, 2011

தேடிக்கொண்டே இருக்கிறேன் நான் ...................


அது ஒரு


திருமண நிகழ்ச்சி !
தோழிகளுடன்


துள்ளிக் கொண்டிருந்தாள் அவள் !
நண்பர்களுடன்


நகைத்துக் கொண்டிருந்தேன் நான் !
அவள் ,


மின்மினி போல


மின்னிக் கொண்டிருந்தாள் !
சிரித்தபடி


ஜொலித்துக் கொண்டிருந்தாள் !
அதற்குக் காரணம் ,


அவளது அங்கமா ? அல்லது ,


அவளணிந்த தங்கமா ?


பங்கப்பட்ட சிந்தையோடு


புறவுலகம் மறந்து


பரிதவித்தேன் நான் !
எங்கேயோ பார்ப்பது போல


எனைப் பார்த்தாள் !
வேண்டுமென்றே நான்


அவளைப் பார்த்தேன் !
அவள் ,


யாருக்கோ வீசிய புன்னகை ,


எனக்காக மட்டும் என்பது


எனக்கு மட்டும் புரிந்தது !
என்


காது மடல்


வெப்பமானது !
உணர்ச்சி பொங்கித்


தெப்பமானது !
அழகான


அவஸ்தைப் பந்து ஒன்று


அடிவயிற்றில் புகுந்து கொண்டது !
பெருவிரலால் கோலமிட்டு


அவள் நின்றிருந்த கோலம் ,


அங்கு அவளுக்கும் அதே நிலை


என்பதைக் கோடிட்டுக் காட்டியது !
அவள் ,


என் பார்வையின் தூண்டிலில்


சிக்கி நின்றாள் !
வெட்கத்தை விழுங்காமல்


விக்கி நின்றாள் !
அங்கே ,


மணமகன் பெண்ணுக்குத்


தாலி கட்டினான் !


இங்கே ,


விழிகளால் நாங்கள்


வேலி கட்டினோம் !
அடுத்ததாக ,


உணவுண்ணும் போது ,


எங்கிருந்தோ வந்தவள்


எனக்கெதிரே அமர்ந்தாள் !
அதிசயமாய்


அனைத்துமே எனக்குத் தித்தித்தது !


நண்பனிடம் நவின்ற போது


நாக்கில் தான் கோளாறு என்றான் !


அவனுக்குத் தெரியுமா ?


நங்கையை நினைத்த


என் மனதில் தான் கோளாறு என்பது ?
தாம்பூலம் தரிக்கும் போது


நானும் அவளும் தனித்திருந்தோம் !


வெற்றிலையின் சிவப்பை விட - அவள்


வெட்கத்தின் சிவப்பே


விஞ்சி நின்றது !


அவள் பெயரைக் கேட்கலாம்


என நினைத்தேன் .


அந்தோ !


தடுமாற்றத்தில்


தாய்மொழியை மறந்து விட்டேன் !


ஒருவழியாக மண்டைக்குள்


தேடிப்பிடித்துத் தெளிந்த போது - அவள்


ஓடிப் போய் விட்டிருந்தாள் !
மறுபடியும்


அவளைப் பார்த்த போது


மழலை ஒன்றை


மடியில் வைத்திருந்தாள் !


கொஞ்சம் கொஞ்சமாய்


எனைப் பார்த்துக்கொண்டே - குழைந்தையை


கொஞ்சிக் கொஞ்சிக் குதூகலித்தாள் !
ஏதோ ஒரு தருணத்தில் என்னைப்


பித்தமாய்ப் பார்த்துவிட்டு - மழலையை


மொத்தமாய் முத்தி எடுத்தாள் ! - நான்


சுத்தமாய் சூழல் மறந்தேன் !
புறப்படும் நேரம் ,


அனைவரிடமும் ,


வார்த்தையால் விடை பெற்றாள்


என்னிடம் மட்டும்


விழிகளால் விடை பெற்றாள் !
இனி எப்போது என


ஏக்கத்தைத் தேக்கி


அவளைப் பார்த்தேன் .


அந்தத் தேக்கம்


அவளது கண்களிலும்


தொக்கித் தெரிந்தது !
தோழிகளுடன் அவள்


திரும்பிச் சென்ற போது


திரும்பிப் பார்த்துத்


திரும்பவும் பார்த்தாள் !
நான் ,


உன்மத்தம் பிடித்தவனாய் - அவள்


உருவத்தை மட்டும்


உள்ளத்தில் பதித்தவனானேன் !


அவள் தந்த பிரிவென்னும்


பள்ளத்தில் குதித்தவனானேன் !
அதன் பிறகு


நான் அவளை ,


எங்கேயும் பார்க்கவில்லை !
அன்றிலிருந்து ,


திருமணம் என்று


எங்கு சென்றாலும்


தேவதை தென்படுவாளா என


தேடிக் கொண்டிருக்கிறேன் - நான்


தேடிக்கொண்டே இருக்கிறேன் !!!