Skip to main content

Posts

Showing posts from April, 2015
ஏதோவொரு தருணத்தில்
நான்
நீர்த்துப் போய்விடுகிறேன் !

ஏதோவொரு தருணத்தில்
நான்
கெட்டவனாகி  விடுகிறேன் !

ஏதோவொரு தருணத்தில்
நான்
தோல்வியடைந்து விடுகிறேன் !

நான்
தொடர்ந்து
இயங்கிக்கொண்டிருப்பதால்  ..........

ஏதோவொரு தருணத்தில்
நான்
வீரியம் பெற்றுவிடுகிறேன் !

ஏதோவொரு தருணத்தில்
நான்
நல்லவனாகி விடுகிறேன் !

ஏதோவொரு தருணத்தில்
நான்
வெற்றி பெற்றுவிடுகிறேன் !

நான்
தொடர்ந்து
இயங்கிக்கொண்டிருப்பதால் ..........