Skip to main content

Posts

Showing posts from October, 2014
இதைப் போலவே இருக்கும் இன்னோர் உலகத்தில் மனிதச்சிலை வீற்றிருக்கும் ஒரு கோவிலில் கடவுளின் பிரார்த்தனை இப்படித்தொடங்குகிறது ......... " எல்லாம் வல்ல மனிதா ............. தயவுசெய்து தயவுசெய்து சகமனிதன் துயர் துடை ! "
நியூட்டனின் மூன்றாம் விதி நமது போராட்டங்கள் கேயாஸ் தியரிப்படி இப்பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் அவர்களுக்குப் புறக்கணிக்கத்தக்கவை ! இஃது இன்னோர் விடுமுறை என்றுதான் அவர்கள் கடந்துபோகிறார்கள் நமது கடையடைப்புக்களை ! மூன்று நாட்களுக்கு மேல் பேருந்துகளை முடக்கி வைத்தால் அது நமக்கே பதிப்பு என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ! உண்ணாவிரதங்கள் நமது வயிற்றினில் ஏற்படுத்தும் நீர்த்த அமிலங்களில் அவர்கள் நீச்சல் பழகுகிறார்கள் ! நாம் நாளெல்லாம் நின்று கத்திச்செய்யும் ஆர்ப்பாட்டங்களால் அதிகப்பட்சம் அன்று மாலை மழை வரலாம் ......... அவ்வளவே ! நமது மொட்டை போடுதல்களையும் தீச்சட்டி ஏந்துதல்களையும் சத்ரு சம்ஹார யாகங்களையும் முன்னெப்போதும் போலவே இப்போதும் அசுவாரசியமாய்ப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார் கடவுள் ! நமக்கான தியாகிப்பட்டம் சுமந்துவரும் செய்தித்தாள்களின் தற்கொலைப் பெட்டிச் செய்திகள் காலப்பெருநெருப்பில் அழிந்து போகலாம் நம்மைப் போலவே .........! அப்போதும் இப்போதும் எப்போதும் .......... கைகட்டி வேடிக்கை பார்க்கவும
ஓர் எளிய கவிதை " ச்சீ இவ்வளவு எளிய கவிதையா ? " என்று ஓர் எளிய கவிதையைப் புறக்கணிக்கிறேன் ! " ச்சீ இவ்வளவு கடின மனிதனா ? " என்று அக்கவிதை புறக்கணிக்கிறது என்னையும் .........!
புன்னகைக்காதவர்கள்  எதிரே வருகிற ஒரு தெரிந்தவன் புன்னகைப்பான் என எதிர்பார்க்கிறேன்...... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறான் ! எதிரே வருகிற ஒரு தெரிந்தவனான நான் புன்னகைப்பேன் என எதிர்பார்த்திருக்கக் கூடும் அவனும் .......... ஏமாற்றிவிட்டுக் கடந்துபோகிறேன் ! எதிரே வருகிற நாங்கள் புன்னகைத்துக் கொள்வோம் என எதிர்ப்பார்க்கிறது புன்னகை ............ ஏமாற்றிவிட்டுக் கடந்து போகிறோம் ! ====================== ====================== ======================