Skip to main content

Posts

Showing posts from April, 2012
சில நிராகரிப்புகளும் ஒரு தெளிவும்

கடைசியில்
அவளும் என்னை
நிராகரித்து விட்டாள் !

மெலிந்த தேகம்
மாநிறம்
சராசரித் தோற்றம்
நடுத்தர வர்க்கம் !

பட்டம் ஒன்று
படித்திருந்தாள் !
கட்டம் கட்டிய
புகைப்படத்தில்
விட்டம் பார்த்து
சிரித்திருந்தாள் !

மூன்று நாட்களாய்
மனதளவில் அவளை
மனைவியாய்
வரித்திருந்தேன் !

இவள் தான்
இவள் தானென்று
இருநூறு முறையாவது
இதயத்திடம்
இறுமாந்திருப்பேன் !

நிறத்தைக் காரணங்காட்டி
நிராகரித்து விட்டாள் !

வாழ்த்துக்களோடு
விடை பெற்றுக் கொண்டாள் !

வாழ்த்துதல்
நிராகரிப்பின்
நாசுக்கான மொழி !

திருமணச் சந்தையில்
விலை போகாததென்
தலையெழுத்து தானென
அலை பாயும் மனதைத்
தேற்ற  முயன்று
தோற்றுக் கொண்டிருந்தேன் !

மாலை வந்ததும்
ஆலையில் இருந்து
வேலை முடிந்து
சாலையில் நடந்தேன் !

சில காட்சிகள்
கண்ணில் தட்டுப்பட்டதும்
மனக்கவலை
சற்றே மட்டுப் பட்டது !

அவையாவன,

ஊன்று கோல் பற்றி
சாலை கடக்கக்
காத்திருந்தான்
ஊனமுற்ற ஒருவன் !

எப்போது வீடு போய்ச் சேர்வானோ ?

வாங்குவோர்கள்
வாங்குவார்களென
காய்கறிகளைக்
கூறு கட்டி வைத்திருக்கிறாள்
நூறு தொடும் கிழவியொருத்தி !

யாராவது வாங்குவார…
சில பல காரணங்களுக்காக ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு வேறு வலைப்பூவிற்கு மாற்றப் படுகிறது.
சில பல காரணங்களுக்காக ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு வேறு வலைப்பூவிற்கு மாற்றப் படுகிறது.
 தயவு செய்து
சண்டை போடுங்கள்ஒரு சண்டை
தேவைப்படுகிறது !

மாதத்தில் ஓர் நாள்,
வாரத்தில் ஓர் நாள்
வாழ்வின் சலிப்பு நீக்க
ஒரு சண்டை தேவைப்படுகிறது !

மண்டை முழுக்கக்
குடைச்சல் இருந்தால்
அண்டை வீட்டானிடம்
சண்டை போடுங்கள்
சரியாகிவிடும் !

பாட்டு ஓடும் பேருந்தில்
சீட்டுக் கிழித்து
சலித்த நடத்துனன்
நோட்டு நீட்டினால் - ஒரு
காட்டுக் காட்டுவது
சண்டையை எதிர்பார்த்துத்தான் !
நாளெல்லாம்
நின்று வந்த கடுப்பை
எவன் வாயையாவது
தின்று தீர்க்கலாம்
என்று நினைக்கலாம் அவன் !

சமையல் பாத்திரத்தின்
' கழுவல் ' சரியில்லை எனில்
அன்றைய இரவில்
' தழுவல் ' சுகமாயிருக்கிறது
கணவனுக்கும் மனைவிக்கும் !
காரணம்,
பாத்திரத்தின் பொருட்டு
கழுவலுக்கும்
தழுவலுக்கும் நடுவில்
தம்பதியரிடையே
தம்படியளவேனும்
சண்டை நடந்திருக்கும் !

அம்மா அடிப்பாள்
என்று தெரிந்திருந்தும்
சும்மா சும்மா
புழுதியில் புரள்கிறான்
பள்ளிச் சிறுவன் !
ஏன் தெரியுமா ?
அடி வாங்கி அழுத பிறகு,
அம்மா ஊட்டும் சோறு
அவ்வளவு ருசியாயிருக்கிறது
அவனுக்கு !

காதலில்
சலிப்பு எனும்
பழுது போக்க
பொழுது போக்காகவாவது
பொய்ச் சண்டை
போடுகின்றனர்
பரந்த உலகின்
சிறந்த காதலர்கள்…
அவசர ஞானம்

பேருந்து
போய்க் கொண்டிருந்தது.

ஓட்டமாக
வந்து ஏறியிருந்தாலும்
உள்ளே ஒரே
கூட்டமாக இருந்தது !

கண்கள்
மேயவிட்டு
உள்ளே இருந்த
பெண்கள் அனைவரையும்
எண்கள் ஆக்கியதில்
ஏழெட்டுத் தேறியது !

சுடிதார்
பட்டாம்பூச்சியாக
ஒருத்தி !

சேலைச் சோலையாக
ஒருத்தி !

உற்றுப் பார்த்தால்
முற்றுந்தெரியும்
முற்போக்கு ஆடையில்
ஒருத்தி !

நூலாடை
என்ற பெயரில்
தோலாடை அணிந்த
' துணிவு' மிக்க
ஒருத்தி !

உடுத்திய உடை
உடலைத்
தழுவி நிற்கிறதா ?
நழுவி நிற்கிறதா ?
என யூகிக்க முடியாத
நாகரிக நிலையில்
ஒருத்தி !

எவனிடமோ
கைபேசியில்
பொய்பேசி வந்த
ஒருத்தி !

கூந்தலின்
பின்னல் விழும்
இடத்தில்
ஜன்னல் வைத்த
ஒருத்தி !

ஜாதகப் படி
சுக்கிரன் இன்று
உச்சமா ?
எங்காவது ரகசியமாய்
எனக்கு முளைத்த
மச்சமா ?

பார்க்கும்
இடத்திலெல்லாம்
பெண் இருக்கிறாளே !

எவளை உரசலாம் ?

அதிகம்
அலட்டிக் கொள்ளாமல்
முற்றும் தெரிபவளை
முழுமனதாகத் தேர்ந்தெடுத்தேன் !

எட்டி இருந்தவன் - அவளை
ஒட்டி நின்று கொண்டேன் !

முதலில்
மூக்கு மட்டும் வியர்த்தது !

வெறி கொண்ட இரத்தம்
தறி கெட்டுப் பாய்ந்தது !

வசை பெற்றவனின்
குமுறல் போல
தசைக…