Skip to main content

Posts

Showing posts from August, 2012
தாம்பத்யம் கடைசியில் நான் அவளை அறைந்து விட்டேன் ! அதிர்ச்சியில் அவள் உறைந்து விட்டாள் ! அதன் பிறகு மௌனம் ! ஊமையாகக் கண்ணீர் ! பார்வையில் ஈட்டி ! சூழலில் சூனியம் ! ச்சே ! அவளை அப்படி நான் அடித்திருக்கக்கூடாது ! அவளும் வார்த்தையால் என்னை இடித்திருக்கக்கூடாது ! நடந்தது நடந்ததுதான் ! கடந்தது கடந்ததுதான் !  அவள் அறைக்குள் சென்று முடங்கினாள் ! அழுது அழுதே  - கொஞ்சம் அடங்கினாள்  ! காரணம் இதுதான் ! உண்ணும் போதே நறநறத்தது பல் ! காரணம் பல்லில் இடறிய ஒரு கல் ! " ஏண்டி இவளே சமைக்க உனக்குத் துப்பில்லை ! சாம்பாரில் கூட உப்பில்லை !  "                 என்றேன். அடிபட்டவள் போல அவள் நிமிர்ந்தாள் ! " ஆமாம் ! ஆமாம் ! சமைக்க எனக்குத் துப்பே இல்லை ! வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் வேலைக்காரியை தப்பே இல்லை !"                  என்றாள். சைத்தானை அத்தோடு விடாமல் கெத்தோடு சொன்னேன். " வைத்துக் கொள்கிறேன் வேலைக்காரியை சமையலுக்கு மட்டுமல்ல யாவற்றிற்கும் !  " என் பார்வையில் தாராளமான வக்கிரம் ! அவள் பார்
அந்தி மாலையில் அந்த சாலையில் ...........  ( சிறுகதை ) பணி முடிந்து வரும் ஒவ்வொரு மாலையும் அழகாகத்தான் இருக்கிறது , இல்லையில்லை சுகமாக இருக்கிறது , இல்லையில்லை அழகாக இருப்பதால் சுகமாக இருக்கிறது ,  இல்லையில்லை ............ சுகமாக இருப்பதால் அழகாக இருக்கிறது .......... ஆனால் , உண்மையிலேயே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் .............................. .. சரி ! சரி ! என்னைப் பொறுத்தவரை இதன் அடிப்படை மனோதத்துவம் யாதெனில் அந்த சைக்கோ சொட்டைத் தலையன் முகத்தில் விழிக்க வேண்டியதில்லை . சரியான ' வொர்க்கஹாலிக் " மண்டையன் ! அவனை மேலதிகாரியாகப் பெற்றதற்கு போன பிறவியில் என்ன பாவம் செய்து தொலைத்தேனோ ? நொய் நொய் என்று எப்போது பார்த்தாலும் . ச்சே ........... அந்தாள் பற்றி இப்போது என்ன வாழுகிறது ? சிந்தனையை மாற்று சிந்தனையை மாற்று . மாற்றுகிறேன் , அதோ அந்த தேநீர் கடையில் பஜ்ஜி சுடுகிறார்கள் , என்ன மணம் ! என்ன மணம் ! சற்று தள்ளி , கைவண்டியில் பாணி பூரி ! த்சோ த்சோ !  ஒரு தட்டு வாங்கி உண்டால் என்ன