Skip to main content

Posts

Showing posts from May, 2012
நிலா நிலா, அன்பின் சின்னம் ! வான் இலையின் ஒரு கரண்டி அன்னம் ! பாற்கடலில் இருந்து பிய்ந்து வந்த பின்னம் ! வான் போர்வைக்குள் ஒருக்களித்த தேவதையின் ஒரு பக்கக் கன்னம் ! நிலா........ வெண்மை .............. பால் ................ பசி ................. அம்மா ! நிலவைப் பார்த்து . எழுதாதவன் கவிஞன் இல்லை ! நிலவைப் பார்த்து மகிழாதவன் மனிதன் இல்லை ! கவிஞர்கள் செய்கிறார்கள் கவிதை விற்பனை ! அதற்கு மூலதனம் - அவர்கட்கு நிலவு தரும் கற்பனை ! உறவுகளைப் பிரிந்து போகும் ஒவ்வொரு பயணத்திலும் கூடவே வருவது நிலவு மட்டுந்தான் ! நிலவிருக்கும் வரை எவனும் இங்கு அநாதை இல்லை ! நிலவோடு சிறிது உலவிவிட்டு வரலாம் உறக்கம் வராதவர்கள் ! கவலைகளால் பசியெடுக்காதவர்கள் மொட்டை மாடியில் நிலாச் சோறு உண்ணலாம் ! வானப் பூந்தோட்டம், நட்சத்திரப் பூக்கள், இரவுத் தேன் ! வெள்ளைப் பொன்வண்டு நிலா ! வான்குளம், நட்சத்திர மீன்கள், வெள்ளைத் தாமரை நிலா ! வான மைதானம் நட்சத்திர வீரர்கள் வெள்ளைப் பந்து நிலா ! உலகுக்கே பாசப் பசியாற்றும் ஒரு சொட்டுத் தாய்ப்பால்  நிலா !!!
அவளை எனக்குப் பிடிக்கிறது ! அவளை எனக்குப் பிடிக்கிறது ! அவள்  எது செய்தாலும் பிடிக்கிறது ! குறுஞ்செய்தியில் குலவும் போது அவள் ஒற்றை எழுத்தும்  பிடிக்கிறது ! பேசும் போது காற்று கலைக்கும்  அவள் கற்றைக் கூந்தல் பிடிக்கிறது ! வெட்கத்தில்  சிவக்கும் கன்னம் பிடிக்கிறது ! கோபத்தில் சிவக்கும் மூக்கு பிடிக்கிறது ! பின்னலிடும்  பார்வை பிடிக்கிறது !  பின்னங்கழுத்து வேர்வை  பிடிக்கிறது ! அவளை  சும்மாவேனும் பிடிக்கிறது !  சும்மா சும்மா பிடிக்கிறது ! காற்றில் பறக்கும் அவள் துப்பட்டா பிடிக்கிறது !  என் பார்வையுணர்ந்து அவள் அப்பட்டா  என்றாலும் அது கூடப் பிடிக்கிறது ! அவ்வப்போது அவள் அழுவது பிடிக்கிறது ! தாமதமாகி  வெடுக்கென்று அவள் எழுவது பிடிக்கிறது !  அவள் பேசினாலும் பிடிக்கிறது !  கோபத்தில் ஏசினாலும் பிடிக்கிறது ! அவள், கன்னத்தின் குழி பிடிக்கிறது ! கீழுதட்டின் சுழி பிடிக்கிறது ! அவள் முத்தம் மறுப்பது பிடிகிறது !  சத்தம் வெறுப்பது பிடிக்கறது ! அவளிடம்  ஏதேதோ பிடிக்கிறது ! எல்லாமே பிடிக்கறது ! அவள் தும்மல் பிடிக்கிறது !  காதில்
குறிப்பு : ஒரு பாமரனின் கண்ணோட்டத்தில் தான் இந்தக் கவிதை எழுதப் பட்டுள்ளது. பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. அப்படி ஏதும் இருந்தால் சுக்கிர பகவானே எனை மன்னித்து விடு ! காட்சிப் பிழைகள் அது ஒரு பேருந்து நிறுத்தம் ! பகல், பத்துமணி இருக்கும் பத்தடி தூரத்தில் அவள் வந்து நின்றாள் ! பருவம் தான் உள்ளம் உதறவைக்கும் உருவம் தான் ! நானும் அவளும் தனித்திருந்தோம் ! சூழலுக்கு இதமாய் இனித்திருந்தோம் ! வெட்ட வெளியை வெறித்தபடி வெறுமனே நின்றாள் ! நேர்ப்பார்வை பார்ப்பவள்  - திரும்பியொரு கூர்ப்பார்வை பார்த்தாளென்றால் வேர்வரை அது பாயுமே ! ஏக்க அலை ஓரளவாவது ஓயுமே ! பாரடி ! பாரடி ! பைங்கிளி ! பைங்கிளி ! இரு ! இரு !  - கொஞ்சம் பொறு ! பொறு ! பார்ப்பாள் ! பார்ப்பாள் ! இளமைக்கு நீர்தன்னை வார்ப்பாள் ! வார்ப்பாள் ! எனக்கு நானே வேதம் ஓதினேன் ! பொறுமையிழந்து உஸ்ஸ்  என்று காற்று ஊதினேன் ! திருப்பதி பகவானே திருப்பம் தா ! அவளுக்கு எனைப் பார்க்கும் விருப்பம் தா ! திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டு திரும்பிப் பார்த்தேன் ! திக் என்றது ! பத்து வ