Skip to main content

Posts

Showing posts from 2010

common man: செத்துப பெய்த மழை

common man: செத்துப பெய்த மழை : "ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இர..."

விகித பிழை

அந்த பேருந்தில் மொத்தமே மூன்று பெண்கள் ! ஒருத்தி மூன்றாம் முப்பதை தொட்டிருந்தாள் , இன்னொருத்தி இரண்டு இருபதை கடந்திருந்தாள் , மற்றொருத்தி பதினெட்டே நிறைந்திருந்தாள் , மொத்தமிருந்த மூவரில் ரசிக்கும்படி இருந்தவள் மூன்றாவதாய் இருந்தவள் ! - அவளும் முகம் தெரியாத எவனோ ஒரு யுவனுடன் செல்லில் சிரித்துக கொண்டிருந்தாள் . முப்பது கடந்தும் முஹூர்த்தம் பார்க்காதவர்களில் நானும் ஒருவனாய் அப்பேருந்தில் ! நான் கல்லூரி காலங்களில் காதலியை தேடாத கோழை ! பணிபுரியும் தொழிற்சாலை , ஆண்கள் மட்டும் நிறைந்த சிறைச்சாலை ! ஆயிரம் ஆண்களுக்கு எழுநூறு பெண்கள் என்ற கணக்கில் நான் முன்னூறில் ஒருவன் ! மனசு நிறைந்த வெறுப்போடு நான் வெளியே பார்த்தேன் ! ஆளில்லாத அப்பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஆறு நாய்களில் ஐந்து நாய்கள் ஆண் நாய்கள் !!!!

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை .