Thursday, December 20, 2012

கலி, கலாச்சாரம், கற்பு
கலி இங்கே
முற்றிவிட்டது !
கலாச்சார நதி
வற்றிவிட்டது !
நாகரீகத் தீ
பற்றிவிட்டது !
ஆபாசப் பாம்பு
சுற்றிவிட்டது !

எல்லாம் இங்கே
கெட்டு விட்டது !
பண்பாட்டு மரம்
பட்டு விட்டது !

எல்லாருமே
காமத்தில்
கொழுக்கிறார்கள் !
பெரும்பாலோர்
பிஞ்சிலேயே
பழுக்கிறார்கள் !

சல்லடை போட்டுத்
தேடினாலும்
கற்புக்கரசர்களை - இங்கு
காண முடியாது !
ஸ்ரீ ராமனே
வந்தாலும்
நூறு சதம் கற்பை - இனி
பேண முடியாது !

ஒருத்திக்கு
ஒருவன்
என்றில்லாத
நிலை வரப்போகிறது !
கண்காட்சிக் கூடத்தில்
கற்புக்கும் ஒரு
சிலை வரப்போகிறது !

கொஞ்சம் கொஞ்சமாக
குடும்ப அமைப்பு
சிதையப் போகிறது !
உறவெனும் கோவில்
உருத்தெரியாமல்
புதையப் போய்கிறது !

அதென்ன
அச்சு பிசகாமல்
அழகானவர்களுக்கே
காதல் வருகிறது !
சொல்லி வைத்தாற்போல
சொடக்குப் போடுவதற்குள்
மோதல் வருகிறது !

எல்லா காதலர்களும்
காது சூடேற
பேசுகிறார்கள்
காமத்தை !
மோகத்தீயில்
வேக வைக்கிறார்கள்
அர்த்தராத்திரி
சாமத்தை !

அலைபேசியில்
அழைக்கும் போது
மாறிவிடுகிறது
ஒரே ஒரு
எண்ணானது  !
அதன் பின்
மொத்த வாழ்வையும்
மூடி விடுகிறது
கள்ளத்தனம் என்ற
மண்ணானது !

கணவனும்
மனைவியும் போல
ஆணும் பெண்ணும்
காதோடு பேசுகிறார்கள்
கணக்கிலடங்கா
 ரகசியம் !
அதனை
அவர்கள் நட்பென்று
சொல்வதுதான்
அளவிடமுடியாத
அதிசயம் !

சுடிதார்
பெண்ணொருத்தியின்
காலாடை
தோலாடை போல
ஓட்டிப் பிடித்திருக்கிறது
தொடையை !
ஈக்கள் தான்
மொய்க்காமல் இருக்குமா
திறந்து வைத்த
பலகாரக்
கடையை !

குடும்பக்குத்துவிளக்குகள் கூட
இறக்கித்தான்
கட்டுகிறார்கள்
சேலையை
வயிற்றில் !
எதிர் வருபவனின்
ஒழுக்கமெல்லாம்
அந்தரத்தில்
ஆடுகிறது
கயிற்றில் !

உருவத்தில்
மலர்ந்திருக்கும்
பருவத்தில்
உள்ள பெண்ணுக்கு
விலைபேசி,
அலைபேசி வாங்கினால்
இலவச இணைப்பாக
கூடவே சில
காதலர்களும்
கிடைக்கிறார்கள் !
பெற்றோர்களே
உஷார் !

நகரப் பேருந்திலும்
நிரம்பி வழிகிறது
கூட்டம் பிதுங்கி !
யாவரின் கற்புகளும்
ஓடி ஒளிகின்றன
ஓரமாய் ஒதுங்கி !

உரசுவதற்கென்றே
வருகிறார்கள்
கட்டுடல் கொண்ட
தடியர்கள் !
அவர்கள்
அந்தரங்கமாய்
அழகிகளின்
அனுமதி பெற்ற
இடியர்கள்  !

பெண்களும்
குடிக்கிறார்கள்
தயக்கமிற்றி
மதுவை !
புகலிடமாகிவிட்டது
அவர்களுக்கும்
புதுவை !

கொஞ்சம்
அழகாயிருப்பவள்
இணையத்திற்கு
வந்து விட்டால்
கெட்டது குடி !
அவள்,
ஆடவர்களுக்கு
ஆசை நெய்யும்
தறியாகிறாள் !
ஓநாய்க் கூட்டத்தில்
வந்து விழுந்த
ஒரு துண்டு
கறியாகிறாள் !

இனி,
அரசாங்க அனுமதி
பெற்றுத்தான்
இரண்டு எண்கள்
அலைபேசியில்
பேசிக் கொள்ளவேண்டும் !

காதல் என்பதற்கு
கட்டாயத் தடை
கட்டாயம்
வரவேண்டும் !

பேருந்தில்
பெண்களை
உரசுபவனை
முச்சந்தியில்
தூக்கிலிடுவோம் !

ஆபாச உடை
அணிபவளுக்கு
ஆயுள் தண்டனை விதிப்போம் !

கள்ளக் காமம்
செய்வோரைக்
கழுவிலேற்றுவோம் !

ஆபாசப்
படமெடுப்பவனை
அடித்தே கொல்வோம் !

எல்லா
சமூக வலைத்தளங்களும்
கால வரையின்றி
நிரந்தரமாக
மூடப் படட்டும் !

இருபாலர்
கல்லூரிகள்
இடித்துத் தள்ளப்படட்டும் !

ச்சை  !
இவ்வளவு
லோலாயம்  எதற்கு ?
பேசாமல்
கலாச்சாரம்
கற்பு
புனிதம்
பண்பாடு
புண்ணாக்கு
வெங்காயம்
போன்ற பக்கங்களை
நம்
வாழ்வகராதியில் இருந்து
கிழித்தெறிவோம் !
என்ன
குடியா முழுகிவிடும் ?

அரசாங்கத்திற்கு
ஒரு ஆலோசனை !
மதுவைப் போல்
விபச்சாரத்தையும்
ஏற்று நடத்தலாமே !
அதிலும்
ஆண் விபச்சாரர்களை
அறிமுகபடுத்தி
புதுமை செய்தால்
உலகம் இன்னும்
உருப்படும் !


10 comments:

 1. சற்று உணர்ச்சிவசப்பட்டு , கொஞ்சம் வயிற்றெரிச்சலோடு எழுதிய கவிதை, யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. பிழையிருப்பின் மன்னிக்கவும்

  ReplyDelete
 2. உங்களின் சில கருத்துக்களைதான் ஒத்துக்க்கொள்ளமுடியும் குருச்சந்திரன்... புடவை இழுத்துக் கட்டிய பெண்களை யாரும் இம்சிப்பதில்லையா.. உடைதான் குறைபாடா? இது பார்வைக்குறை...பெண்ணை ஒரு சக மனுசியாகப் பார்க்காமல் ...வளர்ப்புக் குறை ... பெண்ணை ஒரு பாலியல் தொடர்புடைய காட்சிப்பொருளாக்கிய சமூகத்தின் குறை.. உடைதான் பிரச்சனையென்றால் பழங்குடியிலும் ,காட்டுவாசி மக்களிலும் தினமும் கற்பழிப்புதானே அரங்கேறவேண்டும். இது இருபாலரையும், கற்பையும் பொதுவில் வைக்காததன் குறை...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி தோழி !

   Delete
 3. எது ஆபாசம் என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது! சில கருத்துக்கள் ஏற்புடையது! பல மறுப்புடையது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி நண்பா

   Delete
 4. உங்கள் கவிதையில் மொபைல் குறித்த பார்வை மிகச் சரி. மொபைல் வருவதற்கு முன்பு இப்போது இருக்கும் அளவு ஆணும் பெண்ணும் கெட்டிருக்கவில்லை தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு மிக நன்றி சகோ

   Delete
 5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

  ReplyDelete
 6. ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு..

  ReplyDelete
 7. ஆழ்மன விகாரங்கள்
  ஆழமாய் தெரிகிறது
  கிடைக்கவில்லை என்ற ஏக்கம்
  கிடைத்தபின் எழுத்துகளுக்கு தூக்கம் .

  சமூகம் என்பது நாம்தான்
  நமக்குள் இருக்கும்
  கழிவு பகுதிகள்
  முதன்மை பகுதிகளாக
  கொண்டாடுவதன் பாதிப்பு

  கால கால மாற்றத்தில் நீங்களும் மாறவில்லையெனில்
  அழிக்கப்பட்ட பகுதிகளில்
  அடைக்கலாமாகிவிடுவீர்கள்

  உங்களின் கோபம்
  சமூகத்தை மாற்றட்டும்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete