உமிழ்தல்
வேலை முடிந்து
வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் !
அம்மா அசைவம் சமைத்திருப்பாள்
அமுதமென உண்ணலாம் !
அசைபோட்டபடி நடந்தேன் !
எதிரே வந்தவன் காறி உமிழ்ந்தான் !
செருப்பு அடியையும்
செவிட்டு அறையும்
சேர்ந்தாற்போல உணர்ந்தேன் !
துப்புதல் என்ன
தேசிய வியாதியா ?
சுவாசம் போன்று
இன்னொரு அநிச்சையா ?
இல்லை
தொண்டையின் சாபமா?
அல்லது
எச்சிலின் கோபமா ?
அன்று
பற்களோடு வாயசெய்த
பகிங்கரக் காமமா ?
ஒருவேளை அது
பொறாமையின் புறத் தோற்றமோ ?
அருவருப்பின் உருவமைப்போ ?
துப்பியவனுக்கே வெளிச்சம் !
என்னைப்பொறுத்தவரை இது
நெஞ்சின் நஞ்சு !
ஆத்திரத்தின் மூத்திரம் !
எல்லாருடைய
அடிநாக்கிலும் இருக்கிறது - இந்த
அவமதிப்பு ஆயுதம் !
மனித இதயத்தின்
மொத்த ஈரமும்
உமிழ்ந்து உமிழ்ந்தே
உலர்ந்து விட்டதோ ?
துப்புதல் என்பது
இருமலின் பின்குறிப்பாக
இருந்த போதிலும்
பெரும்பாலும்
தனிக்குறிப்பாகத்தான்
துள்ளிவருகிறது !
கடுப்பாக இருந்தது
வெறியோடு நடந்தேன் !
எதிரே ஒருவன்
எவளுடனோ அலைபேசியில்
அளந்து கொண்டு வந்தான் !
பார்த்தால் முந்தாநாள்
துப்பியவன் போலிருந்தான் !
வேகமாய்
வயிற்றெரிச்சலுக்கு வடிவம்கொடுத்துத
தரையில் எறிந்தேன் !
த்த்த்தூஉ..........
ஒருவேளை
இந்தத்தொற்றுநோய்
இப்படித்தான்
ஒவ்வொருவனிடமிருந்தும்
ஆரம்பமாகிறதோ ?
எச்சிலின் கோபமா
ReplyDeleteஅன்று = anri right?