Skip to main content

Posts

Showing posts from January, 2011
உமிழ்தல் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் ! அம்மா அசைவம் சமைத்திருப்பாள் அமுதமென உண்ணலாம் ! அசைபோட்டபடி நடந்தேன் ! எதிரே வந்தவன் காறி உமிழ்ந்தான் ! செருப்பு அடியையும் செவிட்டு அறையும் சேர்ந்தாற்போல உணர்ந்தேன் ! துப்புதல் என்ன தேசிய வியாதியா ? சுவாசம் போன்று இன்னொரு அநிச்சையா ? இல்லை தொண்டையின் சாபமா? அல்லது எச்சிலின் கோபமா ? அன்று பற்களோடு வாயசெய்த பகிங்கரக் காமமா ? ஒருவேளை அது பொறாமையின் புறத் தோற்றமோ ? அருவருப்பின் உருவமைப்போ ? துப்பியவனுக்கே வெளிச்சம் ! என்னைப்பொறுத்தவரை இது நெஞ்சின் நஞ்சு ! ஆத்திரத்தின் மூத்திரம் ! எல்லாருடைய அடிநாக்கிலும் இருக்கிறது - இந்த அவமதிப்பு ஆயுதம் ! மனித இதயத்தின் மொத்த ஈரமும் உமிழ்ந்து உமிழ்ந்தே உலர்ந்து விட்டதோ ? துப்புதல் என்பது இருமலின் பின்குறிப்பாக இருந்த போதிலும் பெரும்பாலும் தனிக்குறிப்பாகத்தான் துள்ளிவருகிறது ! கடுப்பாக இருந்தது வெறியோடு நடந்தேன் !
படைப்புலகப் பிச்சைக்காரன் இப்போதெல்லாம் பாடு பொருள்கள் கிடைப்பதில்லை ! கற்பனைகள் வறண்டு விட்டன ! உவமைகள் தீர்ந்து விட்டன ! மோனைகள் முரண்டு பிடிக்க , எதுகைகள் ஏளனம் செய்கின்றன ! வார்த்தைகளை மாற்றிப் போட்டே வண்டி ஓடுகிறது ! பக்கத்து மொழியிடம் கடன் வாங்கித்தான் பிழைப்பே நடக்கிறது ! மூளையைப் போலவே மழுங்கிக் கிடக்கிறது என் பேனாவின் முனையும் ! எனக்கும் கசாப்புக்கடைக்காரனுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை ! அவன் கூறுபோடுவது ஆட்டை ! நான் கூறு போடுவது பாட்டை ! அவன் கொல்வது கோழியை ! நான் கொல்வது மொழியை ! இதில் அவ்வப்போது இலக்கியச் சேவை வேறு ! அறுபதுபக்கத்தொகுப்பில் பொருளடக்கமே மூன்று பக்கம் ! அணிந்துரைகளும் பொழிப்புரைகளும் சேர்ந்தாற்போல இருபது பக்கம் ! இதில் என்னுரை ஒரு ஏழு பக்கம் ! கணக்கிடுங்கள் கவிதைகள் எத்தனை பக்கம் ? இதில் கொடுமை என்னவென்றால் தலா ஒரு கவிதைக்கு நான்கு பக்கம் என நாசூக்காய் ஒத்து க்கியிர
தமிழ் எந்தன் தாயடி .......... அன்பே , ஆருயிரே , இனிமையின் ஈர்ப்பே , ஈர்க்கின்ற இனிமையே , உன்னத உயிரே , ஊறுகின்ற உணர்வே , என்னில் பாதியே , ஏற்ற மிகு எழிலே , ஐம்பொன் அழகே , ஒப்பிலா வனப்பே , ஓங்காரச் சிறப்பே , ஒளவையின் மொழியே , அக்கின் நிறைவே ! புகழுரை போதுமா ? இன்னமும் வேண்டுமா ? புன்னகைத்தது போதும் மீதியையும் படி ! தமிழ் எந்தன் தாயடி ! நான் தமிழுக்கு மகனடி ! முதலில் அவளுக்கு நன்றி சொல் ! முடிந்தால் விழுந்து வணங்கு ! ஏனெனில் , இந்தப்பாட்டில் உன்னைப்பாட , அவள் தன்னுயிரைத் தந்துள்ளாள் !!!
கோபத்தை நிறுத்தி விடாதே சில பொழுதுகளில் காக்க வைத்து த தவிக்க விட்டால் கோபித்துக் கொள்ளுகிறாய் ! தனிமைச் சூழலில் துணிந்து தொட்டால் சினந்து தள்ளுகிறாய் ! சின்னச் சின்ன பொய்கள் சொன்னால் சிவந்து துள்ளுகிறாய் ! கடந்து செல்லும் கன்னியை கவனித்தால் காரமாய்க் கிள்ளுகிறாய் ! உன்னிடம் எனக்குப் பிடித்ததே என்னிடம் நீ கொள்ளும் கோபம் தான் ! உனது கோபத்தை என் மீது நீ கொண்ட உரிமையின் வெளிப்பாடாய் உணர்கிறேன் ! அக்கறையின் அம்சமாய் அறிகிறேன் ! கரிசனத்தின் தரிசனமாய்க் காண்கிறேன் ! தயவு செய்து உனது கோபத்தை நிறுத்தி விடாதே !!! குறிப்பு : இந்தக் கவிதையில் " கொள்கிறாய் " என்கிற பதம் " கொள்ளுகிறாய் " என்று ஓசை நயத்துக்காக எடுத்தாளப்பட்டுள்ளது .
முன் குறிப்பு : இந்தக் கவிதை வயது வந்தவர்களுக்கு மட்டும் நீயும் நானும் பழுத்த மரம் நீ பசித்த மரங்கொத்தி நான் கொத்துகிறேன் ! மல்லாந்த உரல் நீ செங்குத்து உலக்கை நான் இடிக்கிறேன் ! பவளத் தோணி நீ பக்குவத் துடுப்பு நான் துழாவுகிறேன் ! குழைந்த நிலம் நீ குத்திக்கிழிக்கும் ஏர் நான் உழுகிறேன் ! திறந்த பூட்டு நீ தினவெடுத்த சாவி நான் நுழைகிறேன் ! தேன் ததும்பும் பூ நீ தேள் கொடுக்குத் தேனீ நான் கொட்டுகிறேன் ! பிளந்த பாதை நீ புறப்பட்ட அம்பு நான் பயணிக்கிறேன் !!! பின் குறிப்பு : இந்தக் கவிதைக்கான களம் களவாடப்பட்டது
உறங்கினது போதும் தம்பி உறங்கினது போதும் தம்பி வரபோகும் விடியல் உன்னை நம்பி ! வந்து விட்டது உன் காலம் , நீ தான் எங்களின் எதிர்காலம் ! சோர்ந்து கிடக்கிறான் இறைவன் , உடனடித் தேவை ஒரு தலைவன் ! இதுவரை பொறுத்தது உன் பணிவு , உனது தலைமையில் பிறந்திடும் புதுத்துணிவு ! எட்டு வையடா மேற்கொண்டு , தடைகள் எல்லாம் கற்கண்டு ! தகுதி என்னடா தகுதி நீ எங்கள் இதயத்தின் இன்னொரு பகுதி ! உன்னையன்றி யாருமில்லை கதி , எங்களை வாழச்செயவதே உந்தன் விதி !
குறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பர்களுக்கு மட்டும் ............. காதல் மன்னர்கள் ஆண்களால் ஆன எனது தொழிற்ச்சாலை காதலால் இயங்குகிறது ! அங்கே ஒவ்வொரு ஊழியனும் ஒரு காதலன் ! ஒவ்வொரு காதலனும் ஒரு ஊழியன் ! என் அலுவலகத்தில் இருக்கிறார் கள் காதலின் கர்த்தாக்கள் ! இதயத்தை சின்னமாகக் கொண்ட காதல் மன்னர்கள் சிலரைப் பற்றி இதோ ............. வினோபா , காதலில் சோதனைகளை அதிகம் பார்த்ததில் அவன் ஒரு சாதனையாளன் ! கௌரி ஷங்கர் , காதல் சாம்பலில் மீண்டும் உயிர்த்த பீனிக்ஸ் பறவை ! அருள் முருகன் , காதலைப் போராடி வென்ற கர்ம வீரன் ! ஜெகன் , விடலைப் பெண்களின் உள்ளம் கவர்ந்த வெள்ளை வித்தகன் ! மாணிக்கராஜ் , பேசிப் பேசியே காதலைக் கனிவித்த இன்சொல் அரசன் ! பீட்டர் , பைங்கிளிகளின் பக்குவம் தெரிந்த பண்பாளன் ! மனோஜ் , மலர்க்கொடிகளின் மனம் கவர்ந்த மன்மதன் ! ஹரி , கன்னிப் பெண்களின் கனவு நாயகன் !
குறிப்பு : கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும் . நீ ஆம்பளையாப் பொறக்கணும் கடைசியா என்னக் கருப்புன்னு மறுத்தவளே , காசுக்காக வெறுத்தவளே , கேட்டுக்கடி கள்ளச்சிறுக்கி ! நாப்பதுக்கும் மேல நாய் கூட சீண்டாது , நாறிப் போன உடம்பு நாலு காசு பெறாது ! உன் நெனப்பில்லாம வேகாதுடி இந்தக்கட்டை ! மனசுங்கறது உனக்கு கழட்டி மாட்டுற சட்டை ! காதலிக்கும்போது நீ தாண்டி என் கண்ணு ! உனக்கோ நான் பத்தோட பதினொன்னு ! காதல்ங்கறது எனக்கு ரெண்டாவது உசுரு ! உனக்கோ அது ஒண்ணுமில்லாத மசுரு ! நான்தாண்டி தாடி வளத்து தரிசாப் போறேன் ! நீ அமெரிக்காவுல அலையன்ஸ் பாக்குற ! என் வேதனைய உணராத உத்தமியே , அடுத்த சென்மத்துலயாவது நீ ஆமபளயாப் பொறக்கணும் !!! நீ ஆமபளயாப் பொறக்கணும் !!!
மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !