Skip to main content
குறிப்பு : இக்கவிதை வயது வந்தவர்களுக்கு மட்டும்


ஆதலால் காதல் செய்வீர்



பேருந்து நிறுத்தத்தில்

பேருந்துக்காகக் காத்திருந்தேன் !


என்னைத் தவிர அங்கே ,

இரண்டு சிட்டுக்குருவிகள்

இருந்தன !

ஒன்று ஆண் !

இன்னொனொன்று பெண் !


இரண்டும்

என்னைப் பார்த்து

எதோ பேசிக்கொண்டன !

அநேகமாகத் திட்டியிருக்கலாம் !

"கூடிப்பேசிக் கூடல் செய்வதைக்

கெடுக்க வந்த கயவன் ! " - என்றிருக்கலாம் !


நான் சுரணையற்று

நின்றிருந்தேன் !


அப்போதுதான்

எங்கிருந்தோ அவள் வந்தாள் !

சுற்றுப்புறத்தில்

சுகந்தம் வீசியது !


கடைந்தெடுத்த சந்தனத்தின் அம்சம் அவள் !

வடிவான அரபுக்குதிரை வம்சம் அவள் !


செதுக்கிய தேகத்தில்

பாகங்கள் பதுக்கப்பட்டிருந்தன !


கச்சிதமான கண் மை !

உறுத்தாத உதட்டுச்சாயம் !


நெகிழ்ந்தாலும்

சேலை நேர்த்தியாய் இருந்தது !


இடுப்பு உடுக்கை

போலிருந்தாலும்

பாங்கான மடிப்பு

படுக்கைக்கு அழைத்தது !


கண்ணின் விழிகள்

காமத்தின் மொழி பேசின !


உதட்டு மச்சம் - அது

உணர்ச்சியின் உச்சம் !


முகத்தில்

மன்மதக் கடலையே

குடிவைத்திருந்தாள் !


காமத்தின் கலையை

பேசாமல் பேசினாள்

மோகத்தின் வலையை

வீசாமல் வீசினாள் !


மொத்தத்தில் கட்டழகி !

மன்மத மொட்டழகி !


அவளின்

அருகாமைக் கதகதப்பில்

உருகியபடியே

உறைந்து கொண்டிருந்தேன் !


முப்பதின் முதிர்ச்சி

முகத்தில் இருந்தாலும் - என்

இளமைக்கு இன்ப அதிர்ச்சியை

அயராது தந்துகொண்டிருந்தாள் !


கற்றை முடியைக் கோதியபடி

ஒற்றைப் பார்வையை வீசினாள் !


அந்தப் பார்வையில்

ஒரு " அழைப்பு " இருந்தது !

என் வாலிபம் மலைத்து நின்றது !


அவள் ,

புடவையை சரிசெய்வது போல

பாகங்களைப் படையலிட்டாள் !

கழுத்தை வருடியபடி

காமத்தைக் கடைவிரித்தாள் !


கீழுதட்டைக் கடித்து

பல்லிடுக்கில் கசிய விட்டாள் !


யம்மா ..........


உப்பி உப்பி வெடிக்கப்போகும்

ஊதப்பட்ட பலூனாய்

காமக் கொந்தளிப்பில் ,

தேகம் தத்தளித்தேன் !


சத்தியமாக

என் வசத்தில் நான் இல்லை !


அவள் எங்கே

அழைத்தாலும் ,

வாலைச் சுருட்டியபடி

பின்னாலேயே போகும்

நாயின் நிலையில்தான்

நான் நின்றிருந்தேன் !


அப்போது பார்த்து

அலைபேசி அதிர்ந்தது !


சே ! காதலி கூப்பிடுகிறாள் !


"என்ன " என்றேன்

எடுத்தவுடன் !


இனியவள் ,

இனிமையை இரண்டால் பெருக்கி

" என்ன செய்கிறாய் ? " என்றாள் !


நான்

நக்கலை நான்கால் பெருக்கி

" சிரைத்துக் கொண்டிருக்கிறேன் " என்றேன் !


" ஏதாவது கோபமா ?

நான் பிறகு அழைக்கிறேன் " என்றாள்

ஏமாற்றத்தை எட்டால் வகுத்தபடி !


அவள் பாவம்

என்று தோன்றியது !


" இரு இரு ......... என்ன சொல் ? " என்றேன்

புறக்கணிப்பை பத்தால் வகுத்தபடி !


" சும்மாதான் " என்ற

செல்ல சினேகிதி சிரித்துவிட்டாள் !


அதுவரையிருந்த காமம்

அப்போது கழுவப்பட்டது !


இதற்குள்

நடுத்தர வயதுக்காரன் ஒருவன்

நிறுத்தத்தினுள் நுழைந்தான் !


மந்தாகினி இப்போது

என்னை விட்டு

அவனைப் பார்க்க ஆரம்பித்தாள் !


பிடித்த காதலியுடன்
பேச்சு வளர வளர
மனிதனாய் இருந்தவன்
புனிதனாய் மாறிப் போனேன் !


காலம் கடந்த போது ,

பட்சி ,

கட்சி மாறிப் பறந்து போனது !


நான் என்னவளுடன்

பேசிக்கொண்டே இருந்தேன் !


" நல்லவேளை " என்று

நினைத்துக் கொண்டேன் !


இறுதியாக

ஒன்றே ஒன்றை மட்டும்

சொல்லிக்கொள்கிறேன் !


வாலிபம் என்பது வங்கக்கடல் !

ஆசைகள், ஆவேச அலைகள் !

காதல் , காப்பாற்றும் கடவுள் - அதுமட்டுமே

கரை சேர்க்கும் கப்பல் !


ஆதலால்

காதல் செய்வீர் !!!










Comments

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர