Skip to main content
குறிப்பு : சிவப்பு வரிகள் ஆணினுடையவை !

நீல வரிகள் பெண்ணினுடையவை !


காதல் பேச்சு





அப்புறம் .....


ம்ம்ம் ................


என்ன ம்ம்ம்ம் .......... ?


ம்ம் என்றால் ம்ம்ம் !


ஏதாவது பேசேன் !


நீதான் பேசேன் !


என்ன பேச ?


ஏதாவது !


என்ன ஏதாவது ?


ஏதாவது என்றால் ஏதாவது !


சரி ... சரி .... மதியம் என்ன சாப்பிட்டாய் ?


தயிர் சாதம் !


புளித்த தயிர் ! புளித்த பதில் !

மதிய உணவை மாற்றவே மாட்டாயா நீ ?


ம்ம்ஹூம் ..... மாட்டேன் . மாற்றினால்

தொப்பை வந்துவிடும் உன்னைப்போல !


ஒ.... குத்திக்காட்டுகிறாயா ?

ஆறுவாரத்தில் ஆறு கட்டமைப்புகளோடு ( six pack )

வந்து அசத்தப் போகிறேன் பார் !


ம்ம்ம் பார்க்கத்தானே போகிறேன் !


வீட்டில் யாருமில்லையா ?


...................................................


என்னவாயிற்று ? என்னவாயிற்று ?


அப்பா வந்து பார்த்துவிட்டுப் போகிறார் !


போய்விட்டாரா ?


போய்விட்டார் .


அவருக்கு நான் வைத்த

பெயர் என்ன தெரியுமா ?


என்னவாம் ?


பஞ்சு மிட்டாய்த் தலையன் !


ஏய் படவா............


உன் அம்மாவின் பெயர் தெரியுமா ?


சொல்லித்தொலை !


உருளைக்கிழங்கு மூட்டை !


உதைக்கப் போகிறேன் உன்னை !


உனக்கும் கூடப் பெயர் இருக்கிறது .


கஷ்டகாலம் ........ சொல்லாதே


குள்ளக்கத்திரிக்காய் .......


உன்னை..... உன்னை..........


சரி ... சரி ..... சமாதானம் ! சமாதானம் !


என் மாமியாக்காரி என்ன செய்கிறாள் ?


சமைக்கிறாள் .


என்ன சமையல் ?


பூரிக் கிழங்கு !


ஏய் ....... வேடிக்கையைப் பார்த்தாயா ?

உருளைக்கிழங்கே உருளைக்கிழகைச் சமைக்கிறது !

ஐயோ ......... ஐயோ ...........


சகிக்கவில்லை ! நிறுத்து உன் பேச்சை !


வெள்ளைப் புறா ! வெள்ளைப் புறா !


என்னது ?


மண்டு ........ சமாதானம்டி ........


....................................


என்னது , இங்கு சூழ்நிலை சிவப்பாகி விட்டது !

அங்கு வெட்கப்படுகிறாயா என்ன ?


தெரியாத மாதிரி கேட்காதே !

" டி " சொன்னால் எனக்கு வெட்கம் வரும்

எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் !


இன்னும் என்னவெல்லாம் சொன்னால்

உனக்கு வெட்கம் வரும் ?


ஆசை ...... தோசை ..... அப்பளம் ......... வடை .........


சரி ஆசையே !

சரி தோசையே !

சரி அப்பளமே !

சரி வடையே !


...................................


ஏய் சில்லறைக் காசுகளை

கீழே சிந்தி என்ன விளையாட்டு ?


லூசு .......... நான் சிரித்தேன் !


பேருந்தில் போகும்போது சிரித்து வைக்காதே

தொலைந்தான் நடத்துனன் !


விட்டு விடேன் ...... என்னால் முடியவில்லை ................


சரி ..... நாம் எப்போது சந்திக்கலாம் ?


இப்போது முடியாது


மூன்று வாரங்களாகி விட்டதடி செல்லச் சிறுக்கி ................


அடுத்த வாரம் பரீட்சை இருக்கிறது !


பரீட்சையைக் கண்டுபிடித்தவன் பேதியில் போக !


அப்போ.... கல்லூரியைக் கண்டுபிடித்தவன் ........?


எனக்கு வாயில் நன்றாக வருகிறது !

எதையாவது சொல்லிவிடப் போகிறேன் !


சரி ..... அடுத்த வாரத்திற்கு அடுத்த வாரம் நாம் பார்க்கலாம் ..........போதுமா ?


போதாது ! இப்போது ஒரு முத்தம் கொடு !


ச்சீய்


ஏய் .... ஏய் .... கொடேன் .........


மாட்டேன் முண்டமே ..........


நானும் வாங்காமல் வைக்கமாட்டேன் முண்டமே ................


சரி ..... ஒரு நிமிடம் இரு .........


காத்திருக்கிறேன் காதலியே ........


.........................................


...........................................


ஏய் ..... என்ன சத்தத்தையே காணோம் ?


ஒன்றுமில்லை .........

ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பதால் ,

அலைவரிசை சரியாகக் கிடைக்கவில்லை !


கொல்லாதே கிறுக்கா .................


அப்புறம் .....

ம்ம்ம் ................

என்ன ம்ம்ம்ம் .......... ?

ம்ம் என்றால் ம்ம்ம் !

ஏதாவது பேசேன் !

நீதான் பேசேன் !

என்ன பேச ?

ஏதாவது !

என்ன ஏதாவது ?

ஏதாவது என்றால் ஏதாவது !........................................






















Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர