Skip to main content
தம்பீ கேள் ..........


மேலே பார் வானம் உள்ளது !

தாங்கிக்கொள்ள தரணி இருக்கிறது !


சோகத்தில் குனிந்து கிடக்கிறாய் !

முயன்று பாரேன் !

முதுகு நேராகும் !


ஏளனங்கள் ,

ஏணிகள் !

அவமானங்கள் ,

ஆசீர்வாதங்கள் !

கேலிகள் ,

வெற்றியின் தோழிகள் !


இகழ்ச்சிகள் ,

இளைப்பாறக்கிடைத்த

தூண்கள் !


தூற்றுதல்கள் ,

தகுதியை எடை போடும்

தராசுகள் !


பொல்லாங்கு சொல்வோருக்கு ,

புன்னகையைப் பரிசளி !


பழித்துக் காட்டுவோருக்கு ,

பாசத்தை விருந்து வை !


பிறகு பார் !

வருங்காலம்

உன்னை தோளில் ஏற்றி

தூக்கி நிறுத்தும் !

வரலாறுகள் ,

வரிசையில் வந்து

மாலை சூட்டும் !


அவமதிப்புகள் இல்லையென்றால் ,

அண்ணல் காந்தியையும் ,

அபிரகாம் லிங்கனையும் ,

அவனி இழந்திருக்கும் !


காயங்களை ,

கட்டித்தழுவு !

காப்பியத்தின் தலைவனாவாய் !


வசைகளை ,

வணங்கித்தொழு !

வரலாற்றின் நாயகனாவாய் !

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
கவிதை செய்தல் உயிரை உருக்கித் தயாரிக்கும் உணர்வின் இரசம் ! மூளையைப் பிழிதெடுக்கும் மொழிச்சாறு ! உணவுண்ணும் போதும் கனவுண்ணும் கைங்கர்யம் ! கற்பனையின் , கையில் அகப்பட்டது கைவிட்டுப் போகாதிருக்க கையோடு இருக்கும் கைக்குறிப்பு ! குளியலறையிலும் குதித்தாடும் சிந்தனைகள் ! பணி நடுவிலும் அணிவகுக்கும் அழகுணர்ச்சி ! சக மனிதனின் சூழல் திருடும் சாமார்த்தியம் ! உலகப் படைப்புகளில் ஊழல் செய்யும் சாணக்கியம் ! ரகசியங்களை ரசனைப் படுத்தும் ரசாயனம் ! பழமையைப் புறந்தள்ளும் பௌதிகம் ! பிறப்பெடுத்த மலர்ச்சியிலும் பிரசவித்த அயர்ச்சி ! புத்தி சொல்லும் கேனத்தனம் புத்தி இழக்கும் ஞானத்தனம் ! உணர்ச்சிக்கு வடிவம் கொடுக்கும் வித்தை ! - மொழியுடனான புணர்ச்சிக்கு படுக்கை விரிக்கும் மெத்தை ! எண்ணங்களின் வானவில்லுக்குப் பேனாவால் மழை பொழிதல் ! உண்மையின் அந்தரங்கம் மறைக்க பொய்யால் ஆடை நெய்தல் ! ஒரே ஒரு வார்த்தைக்கும் வாரக்கணக்கில் மெனக்கெடுதல் !