Skip to main content
நண்பன்



நானும் அவனும்

ஒரே சமயத்தில் ,

ஒரே தொழிற்சாலையில் தான்

பணியில் சேர்ந்தோம் !


இருவரும் ,

வேறு வேறு துறைகள் !

அவன் தர நிர்ணயம் !

நான் தரக்கட்டுப்பாடு !


ஆறு மாதங்கள் கழித்தே என்

அறையில் வந்து தங்கினான் !


ஒரே அறையில் தங்கியதால்

நண்பர்களாக ஆனோம் !

பிறகு ,

நண்பர்களாக ஆகிவிட்டதால்

ஒரே அறையில் தங்கினோம் !


ஒவ்வொரு முறையும் ,

" மச்சி , மச்சி " என்று அவனைக்

கூப்பிடும் போதெல்லாம் ,

அவனுடைய காதலியை

எனது தங்கையாகத் தான் உணர்கிறேன் !


அவனுடைய தாயை

நான் " அம்மா " என்றே அழைக்கிறேன் !

நட்பில் தான்

அன்பின் வசதிக்காக மட்டுமே ,

உறவுகள் உருவாக்கப்படுகின்றன !


அறையில் அவ்வப்போது

விளையாட்டாய் ,

மல்யுத்தத்தில் ஈடுபடுவோம் !

பெரும்பாலும் தோற்பது அவன்தான் !

பாவி ,

விட்டுக்கொடுக்காமல் இருத்தலை

விளையாட்டாய்க்கூடச் செய்யமாட்டான் !


அறையில் பெரும்பாலும்

சமைப்பவன் அவன்தான் !

அதிலும் ,

அவன் சமைக்கும் உப்புமாவிற்கு

அப்படியே அம்மாவின் கைப்பக்குவம் !


மது அருந்த மாட்டான் !

ஆனால் நான் மது அருந்தும்போதெல்லாம்

கூடவே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பான் !


அறையில் நான் இல்லாத

சமயங்களில் கூட ,

தொலைக்காட்சியில் ,

எனக்குப் பிடித்த பாடலை ,

எனக்காகப் பார்த்துக்கொண்டிருப்பான் !


கணக்கில் கெட்டிக்காரன் !

ஆனால்

எனக்காக செலவு செய்த

கணக்கில் மட்டும்

வேண்டுமென்றே கோட்டை விடுபவன் !


என்னுடைய நண்பன்

அவனுக்கும் நண்பன் !

என்னுடைய எதிரி

அவனுக்கும் எதிரி !

இந்த விசயத்தில் மட்டும் அவன் ,

கடைசி வரை

கற்புக்கு அரசனாக இருந்தான் !


காதலிக்காக

வேறு வேலை தேடினான் !

அவனுடைய மனசுக்காக

நல்ல வேலை கிடைத்தது !


மகிழ்ச்சியாகத்தான் இருந்தது !

அவனுடனான கடைசி நாளை

கொண்டாடித் தீர்த்தோம் !


அவனது உடைமைகளோடு

அவனை வழியனுப்பிய போது

மனதுக்கு நிறைவாய் இருந்தது !


திரும்பி அறைக்கு வந்து ,

தனிமையை உணர்ந்த போது தான்

உண்மை உரைத்தது !


இனிமேல் அவன்

இங்கு இருக்கப்போவதில்லை !


குறுஞ்செய்திகள் ,

மின்னஞ்சல்கள் ,

அலை பேச்சுக்கள் ,

இவையாவும் அவனது

வெற்றிடத்தை முழுமையாக

நிரப்பப் போவதில்லை !


அவன் இருந்த அறை !

அவனோடு மல்யுத்தம்

நடத்திய தலையணை !

அவன் தூய்மை செய்த

எனது தட்டுக்கள் !

அவன் கடைசியாகப்

பரிசளித்த வாசனை திரவியம் !

எல்லாம் இருந்தன

அவனைத் தவிர !

முதன் முறையாக

சூனியத்தை உணர்ந்தேன் !


இரண்டு நாட்கள் கழித்து ,

அலைபேசியில்

" மச்சி " என்று

அவன் அழைத்த போது ,

என்னால் ,

கண்ணீர்த் துளிகளை

கட்டுப்படுத்த முடியவில்லை !





Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர