Skip to main content
ஒரே ஒரு முத்தம் கொடு


அடி ,

பத்தரை மாற்றுத் தங்கமே ,

பற்ற வைக்கும் பருவமே !

உயிரை வாங்கும் உருவமே ,

என்னை ஈர்க்கும் துருவமே !


இரவைக் கொஞ்சம்

இரவல் கொடு !

தூக்கம் வந்து ,

தொல்லை செய்கிறது !

பார்வையை சிறிது

வார்த்துப்போ !

உயிரின் வேர்

உலர்ந்து விட்டது !


ஒற்றை வார்த்தையை

வீசிச் செல் !

யுகப்பசி தீர்ந்து விடும் !


ஒரே ஒரு முத்தம் கொடு

மோட்சமடைய அது போதும் !


சின்னப்புன்னகை

சிந்திவிடாதே !

இதயத்தில் இனிமேலும்

இடம் இல்லை !


செல்லச் சிணுங்களை

சிறிது கேட்டாலும் ,

இன்னிசை ஓசை

ஓயவேயில்லை !


ஒரே ஒருமுறை

கன்னம் தொட்டு கிள்ளிச் சிரித்தாய் !

பரவச நிலையை

பத்து நாள் அனுபவித்தேன் !





Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர