Skip to main content
குறிப்பு : கொஞ்சம் மொக்கையாக இருக்கும் . ஆனாலும் அலுவலக நண்பர்களுக்காக ...................................




என் அலுவலகக் கட்டைகள்




கட்டுடலைப் பொருத்தமட்டில்


கர்ணா ஒரு கர்லாக் கட்டை !




பிரதீஷ் ,


உருவத்தால் உருட்டுக்கட்டை !


உள்ளத்தால் உன்னதக்கட்டை !




மனோஜ் ,


மனதைப் பொறுத்தவரை


மணமணக்கும் சந்தனக்கட்டை !




பீட்டர் ,


நிறத்தால் கரிக்கட்டை எனினும்


வருங்காலத்தில் வைரமாகப் போகிறவன் !




அருள் முருகன் ,


அன்பால் ஒட்டிக்கொள்ளும்


அரக்குக் கட்டை !




கௌரி சங்கர் ,


அறிவில் முதிர்ந்து


அன்பில் கனிந்த கிழட்டுக்கட்டை !




மாணிக்கராஜ் ,


நல்லோர்க்கெல்லாம்


நேர்மையான நாட்டுக்கட்டை !




தினேஷ் குமார் ,


தரத்தைப் பொருத்தமட்டில்


தகுதி குறையாத


தங்கக் கட்டை !




தினேஷ் ,


தோல்விகளைத்


தாங்கித் துடைக்கும்


துடைப்பக்கட்டை !




ராமதாஸ்


வேலை என்று


வந்துவிட்டால்


விட்டுக்கொடுக்காத


விசுவாசக் கட்டை !




கருஜகன் ,


கண்கவர் அழகிகளுக்கு


கச்சிதமான காமக் கட்டை !




ஹரி ஹரன் ,


கன்னிப் பெண்களைக்


கவர்ந்திழுக்கும் காந்தக்கட்டை !




பிரதீப் ,


சுவையான பேச்சில்


சூடான கொழுக்கட்டை !




சுரேஷ் ,


தீமைகளை


விரட்டி அடிக்கும்


விறகுக்கட்டை !




காமராஜ் ,


உழைத்தே தேயும்


பாவமான பூரிக்கட்டை !




இறுதியாக






தேவராஜ் ,
விதியால் உருட்டப்படும்
துவண்டுபோன தாயக்கட்டை !

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர