Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதையில் முடிவை எதிர்பார்க்காதீர்கள் ...............



பவி


அவள் பெயர் பவித்ரா !


பவி , பவி என்று தான்

கூப்பிடுவேன் !


கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம் !


முதன் முதலில் ,

அவளாகத்தான் வந்து பேசினாள் !


"பட்டாம்பூச்சி பேசுகிறதே ! " என ,

வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன் !


அவளைப் பார்க்கும் போதெல்லாம் ,

மனது மயிலிறகால் வருடப்படும் !


அவளால் பார்க்கப்படும் போதோ ,

மனமே மயிலிறகாய் மாறிவிடும் !


அவளுடன் இருக்கும்போது மட்டும் ,

எனக்கு தேவதைகள் தென்படுவார்கள் !


அவளால் உச்சரிக்கப்பட்ட பிறகுதான் ,

என் பெயரை எனக்கே பிடித்தது !


அவளுடன்

பேசிவிட்டு வந்த தருணங்களில் ,

நான் அழகாய் மாறிப்போனதை

கண்ணாடியில் உணர்ந்திருக்கிறேன் !


ஒருமுறை ,

"போடா கிறுக்கா " என்றபடி ,

என் தலைமுடியைக் கலைத்துவிட்டாள் !

அவள் கலைத்தமுடி

கலையக்கூடாது என்பதற்காகவே ,

இரண்டு வாரங்கள்

தலை சீவாமல் அலைந்தேன் !

அதன் பிறகு கூட ,

அவள் சொல்லித்தான்

தலை வாரினேன் !


இன்னொரு முறை ,

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன் .

பின்னால் வந்தவன் இடித்துவிட்டான் .

அது நான்கு சக்கர வாகனம் .

புலி போலத்தான் திரும்பினேன் !

"பவித்ரா " என்று எழுதப்பட்டிருந்தது !

பேசாமல் வந்து விட்டேன் !


அவளது மதிய உணவை ,

பெரும்பாலும் உண்பவன் நான்தான் !

எனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே ,

தினமும் தக்காளி சாதம் கொண்டுவருவாள் !


நானும் அவளும் பேசியபடியே ,

வெகுதொலைவு நடந்திருக்கிறோம் .

அப்போதெல்லாம் ,

அவளாக விடுவித்துக்கொள்ளும் போதுதான்

அவளுடைய கையை ,

அதுவரை பற்றியிருந்ததையே உணர்வேன் !


அவளைப் பார்த்துத்தான்

கவிதை எழுத ஆரம்பித்தேன் !

அந்தக் கவிதைகளைப் படித்த

மூன்று பெண்கள் முழுமனதாய்

என்னைக் காதலித்தனர் !


அவளுடன் இருந்த காலங்களில் ,

அவள் என் விதியை

வசப்படுத்தி வைத்திருந்தாள் !

எனக்கு எல்லாமே மாறித் தெரிந்தது !


அவளை என் மனதில் ,

வெகு உயரத்தில் வைத்திருந்தேன் .

அதனாலேயே என் காதலை

அவளிடம் சொல்லவில்லை !


கல்லூரியின் கடைசி நாள் !


நாங்கள் பேசிக்கொண்டே

வெகு தொலைவு நடந்தோம் !

அப்போதும் அவள் கையைப் பற்றியிருந்தேன் .

ஆனால் அவள் விடுவித்துக்கொள்ளவில்லை !

நானாகத்தான் விடுவித்தேன் !


விடைபெறும்போது ,

தன கண்களைத் துடைத்தபடியே சென்றாள் .

நான் தனியாக நின்று ,

வெகுநேரம் அழுது கொண்டிருந்தேன் !


காலங்கள் சென்றன !


அழைக்காததால் ,

என் திருமணத்திற்கு

அவள் வரவில்லை !


அழைத்தும் ,

அவள் திருமணத்திற்கு ,

நான் போகவில்லை !


ஆறு வருடங்கள் கழித்து ,

அவளை வழியில் பார்த்தேன் !

அதே பார்வை !

அதே பேச்சு !

அதே பவித்ரா !


பையனைப் பள்ளியில்

விட்டு வருகிறாளாம் !


நாங்கள் பேசுவதற்காகவே ,

பக்கத்தில் பூங்கா இருந்தது !


பேச்சின் நடுவில்

அதை அவளிடம் சொன்னேன் !


" ஒரு காலத்தில் உன்னைக் காதலித்தேன் ! "


" அப்படியா "


" உன்னை நினைத்து நிறைய கவிதைகள்

எழுதி இருக்கிறேன் " .


" ஒன்று சொல்லேன் " .


" உன் முதலெழுத்தும் ' பி ' ,

என் முதலெழுத்தும் ' பி ' ,

நமக்கு எப்போது ' பீப்பீ ' ? "


அவள் விழுந்து விழுந்து சிரித்தாள் !

சட்டென்று மௌனமானாள் .

என் கண்களையே சில நொடிகள் பார்த்தாள் !

" அப்போதே சொல்லியிருக்கலாமே " என்றாள் .

" சொல்ல முடியவில்லை " என்றேன் !


அதன் பிறகு ,

நாங்கள் பேசாமல்

அருகருகே வெகுநேரம் அமர்ந்திருந்தோம் !!!





பின்குறிப்பு : பிரதீஷ் ........... இதைப் படித்தீர்களா ?















Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர