Skip to main content
Note : This poem is based on the spectrum broad band issue ............................



விரைந்து வருவாயா தலைவா ?


தோரணங்களில் நீ சிரிக்க எனக்கு

காரணங்கள் தேவையில்லை !


நீ சிரிக்க வேண்டும் !

அது போதும் !


நீ

மேடைகளில்

முழங்கும்போது - உனக்கு

மாலை போட

முண்டியடிப்பவன் நான் !


என்னை உனக்குத் தெரியாது

எனக்கு உன்னை மட்டுமே தெரியும் !


உனக்கு வணக்கம் சொல்லாமல்

எனக்குப் பொழுதுகள் விடிவதில்லை !


உன்னை வாழ்த்திப்பாடாமல்

என் இரவுகள் இனிப்பதில்லை !


தலைவன் என்று

நீ வந்துவிட்டதால் ,

இறைவன் என்று

எவன் இருந்தாலும்

ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன் !


என் வீட்டில் ஒருவேளை

அடுப்பு எரிந்தாலும் ,

அரிசியில் உன் முகத்தையே

தரிசிக்கிறேன் !


குடிசையில் நான் இருந்தாலும் - நீ

கோபுரத்தில் வாழ வேண்டும் !


மண்தரையில் நான் படுத்தாலும் - நீ

மலர் மஞ்சத்தில் உறங்கவேண்டும் !


என்னைப் பொறுத்தவரை ,

மாநாடுகள் தான்

மகிழ்ச்சியான திருநாள்கள் !

பொதுக்கூட்டங்கள் தான்

பிடித்தமான பண்டிகைகள் !


சுவரொட்டியில் உனது

சிரிப்பைக் கண்டால்தான்

சிந்தனையே சீராகும் !


கரைவேட்டியைக்

கட்டினாலே போதும் ,

கவலைகள் மறந்து

கம்பீரம் பிறந்து விடும் !


கொடிகளைக் கண்ட மனமோ

களிப்படைந்து கொண்டாடும் !


எதோ பெரிய இழப்பாம் !

தொகை மட்டும்

லட்சங்களின் கோடியாம் !


புலன் ஆய்ந்தவர்கள்

பட்டியல் நீட்டி ,

வில்லங்கத்திற்கு

விஞ்ஞான விளக்கம் சொல்கிறார்கள் !

வீணாய்ப்போன மண்டைக்குத்தான்

விளங்க மாட்டேன் என்கிறது !


பத்திரிக்கைகள்

பக்கம் பக்கமாய் எழுதுகின்றன !


எதிர்க்கட்சிகள்

ஏளனமாய்ச் சிரிக்கின்றன !


அண்டை வீட்டுக்காரன் கூட

ஆவேசமாய் ஏசுகிறான் !


யாவற்றையும் ,

நிலவின் களங்கம் - என்று கூறி ,

நாசூக்காய்

நகர்ந்து விடுகிறேன் !


மனசாட்சி மட்டும்

முரண்டு பிடிக்கிறது

மது இருந்தால் அதுவும்

மாண்டு போகும் !


இது வேறு ஒன்றுமில்லை தலைவா !


சூழ்நிலை பின்னிய

சூழ்ச்சிவலை !

விதி செய்த சதி !

காலம் போட்ட கோலம் !


சரித்திரத்தின் சோதனை இது

சோர்ந்து விடாதே !


வரலாற்றின் வேதனை இது

வீழ்ந்து விடாதே !


ஆனால் ,


மௌனத்தை எப்போது

உடைக்கப் போகிறாய் ?

கறைகளை எப்போது

துடைக்கப் போகிறாய் ?


இகழ்ச்சிகளை

இல்லாமல் செய்வாயா ?

தூற்றுதல்களைத்

தூக்கி எறிய வருவாயா ?


எப்போது என

நான் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் !


நாளைய தீர்ப்பில் ,

நியாயத்தின் பக்கம்

நீ இல்லை என்றானாலும் ,

நாணிச் சாக நானிருக்கிறேன் !

நீ நிமிர்ந்தே நட !


இறுதியாக ,

ஒரே ஒரு வேண்டுகோள் !


எனக்காகவோ

உனக்காகவோ வேண்டாம் - நம்

உறவுக்காகவாவது ,

உண்மையை உலகிற்கு உரைத்திட

விரைந்து வருவாயா தலைவா ???







Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர