Skip to main content
மன்மத மகிமை


இது என்ன ,

தேகத்தின் பித்தமா ?

மோகத்தின் மொத்தமா ?

காமத்தின் யுத்தமா ?

தாபத்தின் சத்தமா ?


மஞ்சத்தில் மோதலா ?

கட்டிலில் சாதலா ?


எழுச்சியில் எழுவதா ?

உணர்ச்சியில் விழுவதா ?


இல்லற இனிமையா ?

மன்மத மகிமையா ?


நெருங்கி நெருங்கி

நெகிழ்தலா ?

உருகி உருகி

உலர்தலா ?


விரகின்றி வேகிறோம் !

சாவின்றி சாகிறோம் !


கட்டியணை ,

கரைந்து போவோம் !

தொட்டுவிடு ,

தொலைந்து போவோம் !


புதைந்து புதைந்து

புதையலைத் தேடுவோம் !

வளர்ந்து வளர்ந்து

வானத்தில் ஏறுவோம் !

இன்பத்தின் இறுதியில்

இறந்து போவோம் !!!

Comments

Post a Comment