Skip to main content
குறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .

தடயம்

எனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா ? சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் ? எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் ? வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .
என் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை " மதன சுந்தரி " டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ? எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் " ஆயாக்கள் " தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே " கடுப்பு முடியாக " இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி . அதிலும் சிவப்பாக அஜித் குமார் மாதிரி ஒருத்தன் இருக்கிறான் . சமயத்தில் அவன் யாரிடம் பேசுகிறான் என்பதே தெரியாது . திடீரென்று " சாப்பிட்டாச்சா ........... ? " என்பான் . நான் " ம்ம்ம்ம் ஆச்சு .... நீங்க சாப்பிட்டாச்சா ? " என்பேன் . அவன் " அப்புறம் .....உங்கப்பன் என்ன பண்றான் ? " என்பான் . அவனுக்கு மரை கிரை கழண்டு விட்டதோ என்று பார்த்தால் அப்போதுதான் தெரியும் அவன் அதுவரை பேசியது அவனுடைய காதலியிடம் என்று . நான் அவசர அவசர மாக பாத்ரூமிற்குள் சென்று தலையைத் தலையை முட்டிக்கொள்வேன் . போங்கடா நீங்களும் உங்க காதலும் . சரி மேட்டருக்கு வருகிறேன் . என் அலுவலக சக ஊழியன் ஒருத்தன் பார்க்க பையா பட கார்த்தி போலவே இருப்பான் . எப்போதும் சாட்டிங்கிலேயே இருப்பான் . அவனிடம் ஒருநாள் கெஞ்சிக் கூத்தாடி ஒரு சாட்டிங் வெப் அட்ரசை வாங்கினேன் . ஒரு ஞாயிறுகாலை பத்துமணி சுமாருக்கு வழக்கமாகச் செல்லும் அந்த ப்ரொவ்சிங் சென்டருக்குள் நுழைந்து , ஆறாம் நம்பர் சிஸ்டத்தில் அமர்ந்தேன் . வெப் ஐடி யை வெறித்தனமாக டைப் செய்து சாட்டிங் உலகத்திற்குள் நுழைந்தேன் . ச்சை ............ எல்லாமே ஆண்கள் . எங்கு போனாலும் இவன்கள் தொல்லை தாங்க முடியவில்லை . அதுவும் இந்த சென்னையில் மகாக்கொடுமை ! தெரு , பேருந்து , பேருந்து நிறுத்தம் , திரையரங்கு , கோயில் , வங்கி , பழரசக்கடை , இணைய மையம் , மளிகைக்கடை , துணிக்கடை , செருப்புக்கடை , உணவகம் , என எங்கு பார்த்தாலும் ஆண்கள் மயம் . இந்தப் பெண்கள் எல்லாம் எங்கே போய்த்தொலைந்தார்கள் . கொஞ்சம் மாநிறத்தில் , ஓரளவு லட்சணமாக இருக்கும் எவளுக்கும் குறைந்தபட்சம் பதினைந்து பழைய காதலர்களும் , இருபத்திநான்கு ஒருதலைக்காதலர்களும் , ஆறு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள காதாலர்களும் , ஒரே ஒரு இளிச்சவாயக் காதலனும் இருப்பார்கள் . திருமணம் ஆகும் வரை ஒவ்வொரு அழகான பெண்ணுக்கும் , ஒவ்வொரு நாளும் , ஒரு சொர்க்க நாள் . திருமணமானபின்னும் , தாம்பத்தியத்தை துச்சமாக நினைத்து , பழைய சொர்க்கத்தின் மிச்சத்தை அனுபவிப்பவர்களும் உண்டு . இவ்வளவு வக்கணையாகப் பேசுகிறேனே , என்னையும் ஒரு ஜந்துவாக மதித்து , தன கடைக்கண் பார்வையை எவளாவது காட்டி விட்டால் , வாலைச் சுருட்டிக் கொண்டு போகமாட்டேன் என்று நினைக்கிறீர்களா ? அதெல்லாம் சமர்த்தாகப் போய்விடுவேன் . நான் உலகமகா வெறுப்போடு , சுமல் என்று இருந்த ஒரு ஐகானை சொடுக்கினேன் . எப்படியெல்லாம் பெயரைத் தேர்ந்து எடுக்கிறார்கள் . கமல் , விமல் , போன்று சுமல் . நாளடைவில் அமல் , பமல் , தமல் , வமல் என்று பெயர்கள் வந்தாலும் வந்து விடும் . சும்மா அந்த சுமலுக்கு , ஹாய் என்று போட்டு வைத்தேன் . பக்கத்திலேயே கூகுல் போய் இமேஜ் சர்ச்சில் " மல்லு மசாலா ஆண்டீஸ் " என்று போட்டு வைத்தேன் . இங்கே அந்த சுமல் பதிலுக்கு ஹய் என்று பதில் அனுப்பி இருந்தான் . நான் அசுவாரசியமாக , என்ன செய்கிறாய் ? என்று அனுப்பினேன் . பதில் வரவில்லை . போடா ....... பு ....... என்று அந்த சுமலைத் திட்டி விட்டு , மல்லு மசாலா ஆண்டீஸ் பக்கம் தாவினேன் . ஹலோ ...... பு..... என்றால் புண்ணாக்கு , புளிமூட்டை , புடலங்கா , இதில் எதையாவது சொல்ல வந்திருப்பேன் . நீங்கள் வேறு எதையாவது நினைத்து வைக்கப் போகிறீர்கள் . மல்லு மசாலா ஆண்டீஸ் , குண்டு குண்டாக பார்க்கவே அதி பயங்கரமாக இருந்தார்கள் . ச்சை ! அதற்குள் அந்த சுமல் ப்ளின்க்கின்னான் . திறந்து பார்த்தால் , உங்களுடன் சாட் செய்து கொண்டிருக்கிறேன் என்று பதில் வந்திருந்தது . கலாய்க்கிறானாம் ! ஒரு நிமிடம் .................. பொதுவாக ஒரு ஆண் மற்றொரு ஆணை இது மாதிரி கலாய்க்க மாட்டான் . ஒருவேளை சுமல் என்பது ஒரு பெண்ணாக இருக்குமோ ? சுக்கிரன் நமக்கும் அருள் பாலிக்க ஆரம்பித்து விட்டானோ என்று அந்த சுமலிடம் , சரி , நீ படிக்கிறாயா ? அல்லது உத்யோகம் செய்கிறாயா ? என்று அனுப்பினேன் . உடனே , உத்தியோகம் என்று பதில் வந்தது . நான் அடுத்ததாக உன் வயது என்ன என்று அனுப்பினேன் . பதில் வரவில்லை . சற்று நேரம் கழித்து , சுமலிடம் இருந்து உங்கள் வயது என்ன ? என்று வந்திருந்தது . நான் இருபத்தி ஐந்து என்று அனுப்பினேன் . காத்திருந்தேன் . ஐந்து நிமிடங்கள் கழித்து , என் பெயர் சுமலதாசுரேஷ் . வயது முப்பத்தி இரண்டு . திருமணமாகி விட்டது . என் கணவர் சுரேஷ் , அரசு கல்லூரி ஒன்றில் பிசிக்ஸ் பேராசிரியராக உள்ளார் . நான் ஒரு தனியார் கம்பனியில் ஹெச் ஆராக இருக்கிறேன் . எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் . ஒருத்தி யுவப் பிரியா ! மற்றொருத்தி யோகப் பிரியா ! என்று பதில் வந்தது . எனக்குள் சில ரசாயன மற்றும் சில பௌதீக மாற்றங்கள் ஏற்ப்பட்டன . சௌகரியமாக அமர்ந்து கொண்டேன் . இதயம் , சகல உறுப்புக்களுக்கும் அதிகப் படியாக உதிரத்தை பம்ப் செய்தது . நானும் பதிலுக்கு என்னைப் பற்றிய உண்மை விவரங்களைக் கொடுத்தேன் . பதிலுக்கு சுமலதாவிடம் இருந்து நைஸ் என்று பதில் வந்திருந்தது . நான் அடுத்ததாக என்ன கேட்பது என தடுமாறி , நீங்கள் என்ன ராசி ? என்று அனுப்பினேன் . கூறு கெட்ட கூமுட்டையன் கூட அந்த மாதிரி கேட்க மாட்டான் . பதிலுக்கு சுமலதா மேடத்திடமிருந்து , நீங்கள் சுத்த போர் . என்று பதில் வந்தது . ஆஹா அப்போ ஆண்டி என்னிடமிருந்து ரசனையாக எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று , நீங்கள் அழகாக இருப்பீர்களா என்று அனுப்பினேன் . நான் நடிகை அனுஷ்கா மாதிரி இருப்பேன் என்று பதில் வந்தது . நல்ல சிவப்பா என்று கேட்டேன் . உடனே ஆம் என்பது பதிலாக வந்தது . நான் , அப்போ உங்களைக் கிள்ளிப் பார்க்க வேண்டுமே என்று அனுப்பினேன் . பதில் வரவில்லை . ஓவராகப் போய் விட்டேனோ என்று நினைத்த போதுபதில் வந்தது . உதை விழும் என்றிருந்தது . ஆகா பட்சி மடிந்து விடும் போலிருக்கிறதே என்று , பரவாயில்லை ...... நீங்கள் காலைத் தூக்கி உதைப்பீர்கள் என்றால் எத்தனை உதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்கிறேன் என்று டைப்பினேன் . பதிலாக ச்சீய் என்று சொன்னார்கள் . வொர்கவுட் ஆகிறதே என்று , எதற்க்காக ச்சீய் சொன்னீர்கள் என்று கேட்டேன் . அவர்களோ , நாங்கள் காலைத் தூக்கினால் , உங்கள் பார்வை எங்கே போகுமென்று நன்றாகவே தெரியும் என்றார்கள் . எனக்கு வாயில் ஜொள் வழிந்து விட்டது . இரண்டு காதுகளும் அடைத்துக் கொண்டன . கைவிரல்கள் , தட்டச்சு செய்ய முடியாமல் நடுங்கின . வாயெல்லாம் வறண்டு விட்டது . உடனே சுமலதா மேடத்திடமிருந்து , என்ன பதிலையே காணோம் என்று வந்தது . நான் , ஒன்றுமில்லை எனக்கு இங்கே வாயில் ஜொள் வழிந்து விட்டது என்றேன் . உடனே அவர்கள் , எனக்கும் தான் .................ஆனால் வாயில் இல்லை . என்றார்கள் . நான் , வாயில் இல்லையென்றால் வேறு எங்கே என்று அனுப்பினேன் . அவர்களோ , நேரில் வந்தால் காட்டுகிறேன் என்றார்கள் . நான் எங்கே எங்கே என்று கதறினேன் . அவர்கள் ஒரு முகவரியைக் கொடுத்தார்கள் . வருகிற ஞாயிறு அன்று சரியாக பத்து மணிக்கு அந்த முகவரிக்கு வருமாறும் , அவள் ( இனிமேல் அவளுக்கு என்ன மரியாதை ? ) தனியே காத்திருப்பதாகவும் சொன்னாள் . பை பை சொல்லி தற்காலிகமாகப் பிரிந்தோம் . ச்சே அவளிடமிருந்து மொபைல் நம்பரை வாங்காமல் விட்டு விட்டேனே என்று தவித்தேன் . பரவாயில்லை ஞாயிற்றுக் கிழமை வட்டியும் முதலுமாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு கட்டி எழுந்தேன் .



தொடரும் ........................

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர