Skip to main content
வந்தாலும் வரலாம்
வெளியே

வெயிலின் தலைவன்

உச்சியில் இருந்தான் !வெக்கையில்

வெந்த தேகம்

சடுதியில் சக்கையானது !எவனைப்பார்த்தாலும்

எரிச்சலாய் இருந்தது !


சென்றவிடமெல்லாம்

சாக்கடை மணத்தது !


யாவருக்கும்

முன்மண்டையில்

உற்பத்தியாகிப் பொழிந்தது

வியர்வையின் அருவி !


ஆசைகள்

ஆயுளை நீட்டின !


மருந்துகள்

மரணத்தை ஒத்திப்போட்டன !


விளைவாய் ,

கும்பல் கும்பலாய்

கூட்டம் கூடிக் கும்மியடித்தது !


விலகாமலேயே

விலக்கப்பட்டார்கள் !


நெருங்காமலேயே

நெருக்கப்பட்டார்கள் !


நடக்காமலேயே

நகர்த்தப்பட்டார்கள் !


சிந்தையில்லா

மனிதர்கள்

மந்தையைப்போல

மிரண்டு ஓடினர் !


பேருந்தில்

பெருங்கூட்டம் !


உணவகத்தில்

உலகக்கூட்டம் !


கடைகளில்

கணக்கில்லாத கூட்டம் !


திரையரங்குகளில்

திருவிழாக்கூட்டம் !


வண்டிக்காரன் ஒருவன்

முண்டியடித்து

சண்டித்தனம் செய்தான்

சீருடைக் காவலன் ஒருவன் - அவனை

தண்டிப்பேன் என கண்டித்தான் !


போக்குவரத்தின்

நெரிசலில்

வரிசையின் தர்மம்

விரிசல் கண்டது !


நகர்ந்து செல்லும் வாகனங்கள்

நொடி நேரம் நின்றாலும் - அன்றைய

நாளின் பொழுது நடுச்சாலையில் தான் !


சத்தம் அதிகமாய் இருந்தவனே
யுத்தத்தில் வென்றான் !

உலகறியாத குழந்தைகள்

உரத்து அழுதன !


தம்பதிகளின்

தெருச்சண்டையில்

தாம்பத்தியம்

தரம் தாழ்ந்தது !


வகையாய்க் குடித்த

வாலிபர்கள் வஞ்சங்களை

வசைபாடித் தீர்த்துக் கொண்டனர் !


எவளோ எவளையோ

முறைத்தாள் !


எவனோ எவனையோ

அறைந்தான் !


மனதை ரணப்படுத்தும்

நாக்குச் சாட்டை

சுதந்திரமாய்ச்

சொடுக்கப்பட்டது !


நான்கு திசைகளிலும்

நாராச ஒலி

செறிந்து செறிந்து

உச்சத்தை அடைய ,


கேட்டது ,


பேரிரைச்சல் அல்ல

பேய் இரைச்சல் !


காதுகளில் பாய்ந்தது


நகரத்தின் சத்தம் அல்ல

நரகத்தின் சத்தம் !


அடுத்த

பத்தாண்டுகளில்

பூங்காவிற்குச் செல்வதென்றாலும்

பதிவு செய்து காத்திருக்க வேண்டும் !


நடைபயிலுவதற்கும்

நடைபாதைச் சீட்டு வாங்க நேரிடும் !


வீதிகளில் உலவுவதற்கு

விலக்கு வந்தாலும் வரலாம் !!!
Comments

Popular posts from this blog

ரயில் சினேகிதி 
சட்டென்று
எனக்குள்
சகலமும்
வெளிச்சமாகி
விடுகின்றன,
எதற்கோ புன்னகைத்தபடி
எதிரே வந்தமர்ந்த
அவளைப் பார்த்ததும் !

கோழிக்குஞ்சை
உள்ளங்கையில்
பொத்திக் கொண்டால்
எப்படியிருக்குமோ
அப்படியிருக்கிறது
என் காதுகளுக்கு
யாருடனோ பேசியபடி
அவள் சிரிப்பது !

வேடிக்கை பார்த்தபடி
பூ விரல்களால்
அவள் கழுத்தை
அவளே
வருடிக் கொள்கிறாள் !
இங்கே எனக்கு
சொக்குகிறது !

எப்படியும்
நிமிர்ந்து என்னைப்
பார்த்து விடுவாள்
என்ற நம்பிக்கையில் தான்
எழுந்து போய்
காசு போடுகிறேன்
அந்த
குருட்டுப் பிச்சைக்காரனுக்கு !

இளஞ்சிவப்பு
நெயில் பாசிஷ்
தடவிய
அவள் பாதங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கறேன்,
சட்டென்று
கதை பேச
ஆரம்பிக்கின்றன
அந்தப் பாதங்கள்
என்னோடு !

நீர் குடிப்பதற்காக
அந்த வாட்டர் பாட்டிலின்
மூடியை
மென்மையாக
மிக மென்மையாக
அவள் திருகுகிறாள்,
தேவராகம்
கேட்டது போல
இன்பமாக அதிர்கிறது
என் பின்னங்கழுத்து !

பற்ற வைத்த
அணுகுண்டு
எப்போது வெடிக்குமென
பதைப்போடு
பார்ப்பது போலப்
பார்க்கிறேன்
உறக்கத்தில்
இமை மூடிய
அவள் விழிகளை !

அவளை விட
அழகான ஒருத்தி
அங்கே வந்து நின்றாலும்
அந்த அழக…

ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு

ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு

மாமன் மகள்


எனக்கு மொத்தம் ஐந்து தாய் மாமாக்கள். அவர்களில் அநேகமாக அனைவருக்குமே
பெண் பிள்ளைகள் இருந்தாலும் அதில் துரைராஜ் மாமாவின் மகளான பிரியாவின்
மீது எனக்கு ஒரு ஈர்ப்பு. பிரியாவிடம் இதுவரை ஒரு வார்த்தை கூடப்
பேசியதில்லை. ஏனெனில் துரைராஜ் மாமாவின் மனைவி விஜயா அத்தைக்கு
சுற்றத்தாரோடு ஒட்டி வாழ்வது என்பது பிடிக்காமல் இருந்தது. மற்ற நான்கு
மாமாக்கள் வீடுகளுக்கும் சகஜமாகப் போய்வரும் சொந்த பந்தங்கள் இந்த ஒரு
மாமாவின் வீட்டில் கால் எடுத்து வைக்க மட்டும் சற்று அதிகப்படியாகவே
தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக என் அம்மாவிற்கும், அத்தைக்கும் ஆகவே
ஆகாது. இரண்டு மனிதர்களுக்கு இடையே இயல்பிலேயே இருக்கும் வெறுப்பையும்
காழ்ப்புணர்ச்சியையும் நான் இவர்கள் விஷயத்தில் கண்கூடாக
உணர்ந்திருக்கிறேன். நடந்த சம்பவங்களின் மூலம் நான் அதனை உணர்ந்து கொண்ட
போது " அட ! இவங்க ரெண்டு பேத்துக்கும் ஆகாது போலவே " என்று ஒரு அற்ப
திருப்தி மனதில் ஏற்பட்டது. திருப்தி ஏனென்றால் நடக்கும் சம்பவங்களை
அடிப்படையாக வைத்து ஒரு உண்மையை உணரும் போது இயல்பிலேயே அந்த உண்மையை
நாம் உணர்ந்து கொண்டோம…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…