Skip to main content
சொல்லி விடு அன்பேஒரே ஒரு முறை
சொல்லி விடு !

என் மீதான
உனது காதலை
ஒரே ஒரு முறை
சொல்லிவிடு !


நானாக எனது காதலை

உன்னிடம் சொன்னபோது கூட - நீ

மௌனமாகத்தான் கேட்டுக்கொண்டாய்

அதை நான்

சம்மதமாக எடுத்துக்கொண்டேன் !


உனக்கான

காலை வணக்கத்தை

குறுஞ்செய்தியில் வருவிக்கிறேன் !


மதிய வணக்கத்தை

மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன் !


இரவு வணக்கத்தை

அலைபேசியில் அறிவிக்கிறேன் !


ஆனால் ,


சிலநேரங்களில் நீ

சிரிப்பதே இல்லை !


அலைபேசியில் கூட

அளந்துதான் பேசுகிறாய் !


பெரும்பாலும்

நானே பேசுகிறேன்

நீ கேட்டுக்கொண்டு இருக்கிறாய் !


எனது

பிறந்தநாளன்று தான்

உனது

புன்னகையே பார்க்கக் கிடைத்தது !


நாணம் மறந்திருப்பாயென

நானாகத் தொட்டாலும்

தீயாக சுட்டதென

நீயாக விலகிக் கொள்கிறாய் - காதல்

நோயாகக் கசக்கிறது !


கோவிலில் கூட

கடவுளோடுதான் பேசுகிறேன் !


கடற்கரைகளில்

காற்றுதான் வாங்க முடிகிறது !


திரையரங்குகளில்

திரையைத்தான் பார்க்கிறோம் !


வண்டியில் அமர்ந்தாலும்

விலகியே அமர்கிறாய் !


நாசுக்காய்ப் பழகுவதென்றால்

நண்பர்களாகவே இருந்து விடலாம் !


கனவில்தான் காதலென்றால்

கண்ணியமாகப் பிரிந்துவிடலாம் !


அம்மா

அதட்டுவாள் !


தந்தை

திட்டுவார் !


அண்ணன்

ஆவேசப்படுவான் !


என்றெல்லாம்

சாக்கு சொல்கிறாய் !


இங்கே உனக்கென்று

இன்னொரு இதயம் துடிப்பதை

உணர மறுக்கிறாய் !


வணக்கங்கள் இல்லையென்றால் - காதல்

வாழாது போலிருக்கிறது !


ஆகையால்

இனிமேலாவது அன்பே ,


காலை வணக்கத்தை

கனிவோடு அனுப்பு !


மதிய வணக்கத்தை

மகிழ்வாய்த் தெரிவி !


இரவு வணக்கத்தை

இனிமைகாகக் கூறு !


செல்ல சீண்டலை

சிறிதேனும் அனுமதி !


இன்பப் புன்னகையை

இயன்றவரை வீசிச்செல்


தொட்டுப்பேச

விட்டுக்கொடு !


கெஞ்சிய பிறகாவது

கொஞ்ச விடு !


பார்வையிலாவது
அணைக்க விடு !


வெள்ளிக்கிழமைஎன்றால்

சேலையில் வா !


முத்தத்தை

காற்றிலாவது அனுப்பு !


கணநேரமாவது

காதலோடு பார் !


வேண்டாம் என்பதையும்

வெட்கத்தோடு சொல் !


நகர்ந்து சென்றாலும்

நாணத்தோடு செல் !


விலக்கி விட்டாலும்

விலகி விடாதே !


அலைபேசியில் நீயாக

அவ்வப்போது அழை !


கைகளைக் கோர்த்துக்கொண்டு

காலாற நடப்போமே !


இதெல்லாம் கூடத்

தேவை இல்லை !


என்மீதான உனது காதலை

நீ இதுவரை சொல்லவே இல்லை !நானாக எனது காதலை
உன்னிடம் சொன்னபோது கூட - நீ
மௌனமாகத்தான் கேட்டுக்கொண்டாய்
அதை நான்
சம்மதமாக எடுத்துக்கொண்டேன் !

ஆகவே அன்பே ,


ஒரே ஒரு முறை
சொல்லி விடு !

என் மீதான
உனது காதலை
ஒரே ஒரு முறை
சொல்லிவிடு !Comments

Popular posts from this blog

ரயில் சினேகிதி 
சட்டென்று
எனக்குள்
சகலமும்
வெளிச்சமாகி
விடுகின்றன,
எதற்கோ புன்னகைத்தபடி
எதிரே வந்தமர்ந்த
அவளைப் பார்த்ததும் !

கோழிக்குஞ்சை
உள்ளங்கையில்
பொத்திக் கொண்டால்
எப்படியிருக்குமோ
அப்படியிருக்கிறது
என் காதுகளுக்கு
யாருடனோ பேசியபடி
அவள் சிரிப்பது !

வேடிக்கை பார்த்தபடி
பூ விரல்களால்
அவள் கழுத்தை
அவளே
வருடிக் கொள்கிறாள் !
இங்கே எனக்கு
சொக்குகிறது !

எப்படியும்
நிமிர்ந்து என்னைப்
பார்த்து விடுவாள்
என்ற நம்பிக்கையில் தான்
எழுந்து போய்
காசு போடுகிறேன்
அந்த
குருட்டுப் பிச்சைக்காரனுக்கு !

இளஞ்சிவப்பு
நெயில் பாசிஷ்
தடவிய
அவள் பாதங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கறேன்,
சட்டென்று
கதை பேச
ஆரம்பிக்கின்றன
அந்தப் பாதங்கள்
என்னோடு !

நீர் குடிப்பதற்காக
அந்த வாட்டர் பாட்டிலின்
மூடியை
மென்மையாக
மிக மென்மையாக
அவள் திருகுகிறாள்,
தேவராகம்
கேட்டது போல
இன்பமாக அதிர்கிறது
என் பின்னங்கழுத்து !

பற்ற வைத்த
அணுகுண்டு
எப்போது வெடிக்குமென
பதைப்போடு
பார்ப்பது போலப்
பார்க்கிறேன்
உறக்கத்தில்
இமை மூடிய
அவள் விழிகளை !

அவளை விட
அழகான ஒருத்தி
அங்கே வந்து நின்றாலும்
அந்த அழக…

ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு

ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு

மாமன் மகள்


எனக்கு மொத்தம் ஐந்து தாய் மாமாக்கள். அவர்களில் அநேகமாக அனைவருக்குமே
பெண் பிள்ளைகள் இருந்தாலும் அதில் துரைராஜ் மாமாவின் மகளான பிரியாவின்
மீது எனக்கு ஒரு ஈர்ப்பு. பிரியாவிடம் இதுவரை ஒரு வார்த்தை கூடப்
பேசியதில்லை. ஏனெனில் துரைராஜ் மாமாவின் மனைவி விஜயா அத்தைக்கு
சுற்றத்தாரோடு ஒட்டி வாழ்வது என்பது பிடிக்காமல் இருந்தது. மற்ற நான்கு
மாமாக்கள் வீடுகளுக்கும் சகஜமாகப் போய்வரும் சொந்த பந்தங்கள் இந்த ஒரு
மாமாவின் வீட்டில் கால் எடுத்து வைக்க மட்டும் சற்று அதிகப்படியாகவே
தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக என் அம்மாவிற்கும், அத்தைக்கும் ஆகவே
ஆகாது. இரண்டு மனிதர்களுக்கு இடையே இயல்பிலேயே இருக்கும் வெறுப்பையும்
காழ்ப்புணர்ச்சியையும் நான் இவர்கள் விஷயத்தில் கண்கூடாக
உணர்ந்திருக்கிறேன். நடந்த சம்பவங்களின் மூலம் நான் அதனை உணர்ந்து கொண்ட
போது " அட ! இவங்க ரெண்டு பேத்துக்கும் ஆகாது போலவே " என்று ஒரு அற்ப
திருப்தி மனதில் ஏற்பட்டது. திருப்தி ஏனென்றால் நடக்கும் சம்பவங்களை
அடிப்படையாக வைத்து ஒரு உண்மையை உணரும் போது இயல்பிலேயே அந்த உண்மையை
நாம் உணர்ந்து கொண்டோம…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…