புன்னகைக்காதவர்கள்
எதிரே வருகிற
ஒரு தெரிந்தவன்
புன்னகைப்பான்
என
எதிர்பார்க்கிறேன்......
ஏமாற்றிவிட்டுக்
கடந்துபோகிறான் !
எதிரே வருகிற
ஒரு தெரிந்தவனான
நான்
புன்னகைப்பேன்
என
எதிர்பார்த்திருக்கக் கூடும்
அவனும் ..........
ஏமாற்றிவிட்டுக்
கடந்துபோகிறேன் !
எதிரே வருகிற
நாங்கள்
புன்னகைத்துக் கொள்வோம்
என
எதிர்ப்பார்க்கிறது
புன்னகை ............
ஏமாற்றிவிட்டுக்
கடந்து போகிறோம் !
======================
======================
======================
Comments
Post a Comment