Wednesday, May 14, 2014

                                                                     மறதி


அந்த
சாலையோர
கடைக்காரக்கிழவி,
பாக்கி சில்லறையை
நாளை வாங்கிக்கொள்ளும்படி
கூறியிருந்தாள் !

மறுநாள்
மழை பெய்ததால்
அவள் வரவில்லை !

அதற்கும் மறுநாள்,
அவள்
எனக்குத் தரவேண்டியதை
உண்மையாக மறந்துவிட்டாள் !
நான்
பொய்யாக மறந்துவிட்டேன் !

 

2 comments:

  1. உங்கள் மறத்தல் இனிமை

    ReplyDelete
    Replies

    1. வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி

      Delete