Skip to main content
அன்பு நண்பரே,

                             
       இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் !


நாம் சிரித்தால் தீபாவளி





 
தீபாவளி என்றாலே,

கொண்டாட்ட நினைவு
உள்ளத்தினின்று
அரிப்பதுதான் !

கவலைத்தோலை
மனித நாகங்கள்
உரிப்பதுதான் !

பட்டாசுகளை
பரவசத்தோடு
எரிப்பதுதான் !

களிப்பு வியர்வை
உடம்பு முழுக்க
கரிப்பதுதான் !

மகிழ்ச்சி மதுவை
தொண்டைக்குழியில்
சரிப்பதுதான் !

உறவுகளோடு
உற்சாகமாய்
சிரிப்பதுதான் !

உண்டதையெல்லாம்
லேகியம் தின்று
செரிப்பதுதான் !

பட்ஜெட் துண்டால்
புருஷன் கழுத்தை
நெரிப்பதுதான் !

விருந்துண்டு
தாம்பூலம்
தரிப்பதுதான் !

விளக்கேற்ற
தாமரை நூலைத்
திரிப்பதுதான் !

வாங்கிய வெடிகளை
பங்குபோட்டுப்
பிரிப்பதுதான் !

ஏதோவொன்றை
எண்ணைச்சட்டியில்
பொரிப்பதுதான் !

நரகாசுரன்
நமக்குள்ளே
மரிப்பதுதான் !

ஒரு
சங்கல்பத்தை
நெஞ்சுக்குள்
வரிப்பதுதான் !

வண்ண வேடிக்கையை
வான் வெளியில்
விரிப்பதுதான் !

ஒன்றே ஒன்று
இறுதியாக !

தீபாவளிதான்
நாம் சிரித்தால் !
தீபாவளி அல்ல
நாம் மட்டும் சிரித்தால் !


Comments

  1. அழகான கவிதை. கடைசி வரிகளில் முத்திரை பதித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஐயா ! கவிதையை இட்ட சில நிமிடங்களிலேயே வாசித்து கருத்திட்டதற்கு நன்றி ! தங்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் !

      Delete
  2. சிறப்பான முத்தாய்ப்பு! அருமையான படைப்பு! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பா ! தங்களுக்கும் இனிய உளம் கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

      Delete
  3. உள்ளத்து உணர்வதைச்
    அள்ளிச் சொரிந்திட்டீர்கள்!

    மிக அருமை! போட்டியில் வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
    தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கவிதையை ரசித்து மகிழ்ந்ததற்கு நன்றி தோழி ! இந்த தீபாவளியில் தாங்கள் வாழ்வு சிறக்க பிரார்த்தனைகள் !

      Delete
  4. அருமை... இணைப்பை (கவிதையை) ஏற்கனவே நடுவர்களுக்கு அனுப்பி விட்டேன்...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. போட்டி குறித்து தகவல் தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே ! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  5. இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்...

    என்றும் சொர்க்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
  6. அருமை ! வெற்றி பெற வாழ்த்துக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தோழி ! தங்களுக்கும் தங்களைச் சார்ந்த சில அன்பு உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    நெற்கதிர் கூட
    தான் விழுங்கும்
    நீரில் சில துளியை
    தனைச்சார்ந்த
    புல்லுக்கு கொடுக்கிறதே..
    நாம் மட்டும் ஏனிங்கு
    நமக்கே நமக்காக...
    என்று ஓங்கி தலையில் கொட்டு வைக்கும் கவிதை...
    நாம் மட்டும் சிரித்தால் இல்லை தீப ஒளி..
    அருமையான கவிதை நண்பரே..
    வெற்றிபெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கவிதையாக ஒரு பின்னூட்டம் எழுதி எனது கவிதையின் தரத்தை உயர்த்தி விட்டீர்கள் நண்பரே ! நன்றி !

      Delete
  8. தீபாவளி என்றால் இதுதான், இதுதான் என்று அருமையாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
    தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் எனது கவிதையைப் படித்து பின்னூட்டம் இட்டது மிகவும் பெருமையாக இருக்கிறது தோழி !

      Delete
  9. வணக்கம்

    தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

    போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

    என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா ! ரிசல்ட் எப்போ ?

      Delete

  10. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. எனது கவிதையை விடவும் அழகாக இருக்கிறது அதற்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் ! நன்றி நண்பரே !

      Delete
  11. வணக்கம்!

    இயபுகள் கொஞ்சும் இனிய அடிகள்
    இயல்புடன் கண்டேன் இனித்து!

    ReplyDelete
    Replies
    1. எனது கவிதையை விடவும் அழகாக இருக்கிறது அதற்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் ! நன்றி நண்பரே !

      Delete
  12. சிறந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !