Skip to main content
இந்த நாள்
இனிய நாள்






எழும் போதே
மணி பத்து !
கலையவில்லை
இன்னும்
தூக்கத்தின் பித்து !

வாவ் !
இன்று விடுமுறை !

ஆகஸ்ட் பதினைந்து !

போகத்தேவையில்லை
ஆலை !
செய்யத் தேவையில்லை
வேலை !

நான்குநாள்
தாடியை முதலில்
சிரைக்க வேண்டும் !
அழுக்குகளைத்
தண்ணீரில்
நுரைக்க வேண்டும் !
காதலியிடம்
அரைத்த மாவையே
மீண்டும் கொஞ்சம்
அரைக்க வேண்டும் !
மாலையில்
மதுவருந்துவது பற்றி
நண்பனிடம்
உரைக்க வேண்டும் !

நினைத்த படியே
மீண்டும் தூக்கத்தில்
விழுந்தேன் !
பத்து நிமிடத்தில்
பதறியடித்து மீண்டும்
எழுந்தேன் !

எண்ணிய யாவையும்
எண்ணியாங்கு முடித்து

கலைக்காட்சி
பார்க்கலாமென்று
தொலைகாட்சி போட்டேன் !

அதில் எவனோ
படுத்துக் கொண்டே
கில்லியடித்தான் !
எதிரிகளை
விரட்டி விரட்டி
சொல்லியடித்தான் !

அப்புறம்,

உள்ளாடை
மட்டுமணிந்த
வளரும் நடிகையைக்
காட்டினார்கள் !
அவள் வாயாலேயே
ஆங்கிலத்தில்
நாட்டுப்பற்றை
ஊட்டினார்கள் !

அதன் பின்
மதியம்,
உணவகம் !

பதார்த்தப் பட்டியலைப்
பார்வையால்
ஆய்ந்தேன் !
ஆடு, மாடு
புறா, சுறா என
ஒன்றுவிடாமல்
அனைத்தையும்
மேய்ந்தேன் !

பிறகு,
அறைக்கு வந்து
குப்புறப்படுத்து
குட்டித் தூக்கம் !

மாலை வந்தது !
நண்பன் வந்தான் !
மது அருந்த வேண்டும் !

மது,
அது
முன்பே
வாங்கப் பட்டு
குளிர்சதப் பெட்டியில்
காத்திருந்தது !

முட்ட முட்ட
குடித்தோம் !
போதை
சொட்ட சொட்ட
மது முழுவதையும்
முடித்தோம் !

போய்ப் படுத்தால்
பேயத்தூக்கம் வரும் !

அடுத்த விடுமுறை
ஆயுத பூஜைக்கா ?

எப்படியோ
இந்த நாள்
இனிதாகக்
கழிந்து விட்டது !
நாட்காட்டியில்
மற்றுமொரு தாள்
மறுபடி
கிழிந்து விட்டது !

ஆங்ங்ங்.......
சொல்ல மறந்து விட்டேனே !
 
ஜெய்ஹிந்த் !!!



Comments

  1. சராசரி இந்தியனின் சுதந்திர தினம் அருமை சார்.. மிகவும் பிடித்தது உங்கல் கவிதை

    ReplyDelete
    Replies
    1. வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே

      Delete
  2. அப்பட்டமான உண்மை
    அழுக்காக தெரிகிறது

    தேதிகள் மட்டுமே கிழிக்கபடுகிறது

    எப்போது மாறும் இந்நிலை
    ஒரு தோசையை போல உலகை திருப்பி போட முடியாத
    இயலாமையின் எழுத்தாக எனக்குள் பல என்னஅகழி உருவாகுது உங்கள் வரிகள்

    ஆனாலும் உங்களின் தினசரி நடைமுறைகளை அறிய முடிந்தது
    நண்பா

    ReplyDelete
    Replies
    1. நான், நான் என்று வருவதால் அனைத்தும் எனது சொந்த தனிப்பட்ட நடவடிக்கைகள் என்று பொருள் கொள்ளவேண்டாம் தோழி ! சமூகத்தில் உள்ள ஒரு சராசரி இளைஞனையே அந்த " நான் " பிரதிபலிக்கிறது ! கவிதையின் நோக்கைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி !

      Delete
  3. இன்றைய இளைய தலைமுறையை பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை .அருமை.

    ReplyDelete
  4. தாங்கள் எல்லாம் என் கவிதைகளைப் படிப்பதே எனக்கு பெரும் பாக்கியம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர