Skip to main content
உழைப்பு



                             


வாழ்க்கையே
வெறுத்து விட்டது !
உழைத்து உழைத்தே
உடம்பு,
சிறுத்து விட்டது !

காலையிலேயே
கல்லொன்று
காலைத்
தடுக்கியது !
' போகாதே ' என்று
புத்திமதியை
மண்டைக்குள்
முடுக்கியது !

அப்போதே
கணித்திருக்க வேண்டும் !
போகவேண்டாமென
பாழும் மனதைப்
பணித்திருக்க வேண்டும் !

கஷ்ட காலம் !
பிசகிவிட்டது !

சொந்தக்காரன்
செத்துவிட்டான்
என்று,
அன்று
சக ஊழியன்
வரவில்லை !

அது,
அடிக்கடி
அவன் சொல்லும்
சாக்கு !
அவனைப்
பொருத்தமட்டில்
நான் ஒரு
பேக்கு !

மேலதிகாரி,
வேலை எனும்
கல்லில் போட்டு
துவைத்து விட்டான் !
உட்கார்ந்தபடியே
உள்ளிருக்கும்
உதிரத்தை
சுவைத்து விட்டான் !

முன்மண்டையில்
முடியில்லாத எவனோ
மேலிடத்திலிருந்து
வருகிறானாம் !
அனைத்தையும்
ஆய்ந்து
' நலமே'  என்று
சான்றிதழ்
தருகிறானாம் !

அதற்கு நானா
அகப்பட்டேன் ?
ம்ஹ்ம் !
இந்த வேலையில்
எங்கே நான்
சுகப்பட்டேன் ?

ஸ்ஸ்ஸ் யப்பா !

எவ்வளவு
வேலை !
கரும்பைப் போல்
பிழிந்து விட்டது
ஆலை !

யாவும் முடிந்து
வெளியே
வருவதற்குள்
ஓடு போலத்
தேய்ந்து விட்டேன் !
ஒட்டுமொத்தமாய்
ஓய்ந்து விட்டேன் !

அப்போது
கருப்பாய்
மாறியது  வானம் !
கேட்கத்தொடங்குமா
மழையின் கானம் ?

அதோ !
வந்து விட்டது
மழைத்துளி !
மணிக்கட்டில்
விழுந்தது
முதல் துளி !

இடி எனும்
தடியால்
வானத்தை
யாரோ
 அடிக்க,
மின்னல் வந்து
விரிசல் போல
வெடிக்க
சும்மா,
பிளந்து கொண்டு
கொட்டியது ஆகாயம் !

அப்போது
சட்டெனத்
தோன்றியது
ஒரு கேள்வி !
கணப்பொழுதில்
கனன்றது
எண்ணத்தின் வேள்வி !

யாருக்காக
இந்த மழை ?

நாளெல்லாம்
நான் சிந்திய
வியர்வைக்காகத்தான்
இப்படி
விடாது பொழிகிறதா
வானம் ?

ச்சே ச்சே !
அப்படியெல்லாம்
இருக்காது !

ஆனாலும்
ஆனாலும்

தேகம் ஏன்
இப்படி சிலிர்க்கிறது ?
கண்களில் ஏன்
கண்ணீர் துளிர்க்கிறது ?

அம்மம்மா !

என்ன ஒரு
நிறைவு !
இன்பத்திற்கு
இங்கே என்ன
குறைவு ?

அதன் பிறகு
வீடு வந்தேன் !
உணவு உண்டேன் !
உழைப்பின் பரிசாய்
உலகம் மறந்து
உறங்கினேன் !



Comments

  1. உழைப்பின் வலி

    உள்ளத்தின் சோர்வு

    இயலாமையின் சோகம்

    இத்தனையும் தாண்டி

    மழையை கண்டு மனதை மீட்டுகொள்ளும்

    உணர்வு ..............அருமை குரு

    உழைப்பாளியின் நிலை கண்முன் காட்சியாய் சோகத்தை பிழிகிறது

    வார்த்தைகளில் தெறிக்கும் மோனையும் எதுகையும் படிபவருக்கு சந்தத்தின் சத்தத்தை அதிகரிக்கிறது
    அருமை

    ReplyDelete
  2. உண்மையில் தங்களின் பின்னூட்டம் தான் இந்தக் கவிதைக்கு அழகூட்டுகிறது தோழி ! மற்றபடி, டி.ராஜேந்திரையும் , கவிஞர் வாலியையும் பின்பற்றி எழுதிய கவிதை இது !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர