Skip to main content
குறிப்பு : சுத்தக்காரர்கள் இக்கவிதையைப் படிக்க வேண்டாம் !சுகாதாரம்


   


சுகாதார அமைச்சர்
பள்ளிக்கு வருகிறாராம் !

கிழிந்து விட்டது
ஒட்டுமொத்த உற்சாகமும்
அழிந்து விட்டது !

தலைமையாசிரியர்
தலையில் அடித்துக் கொண்டார் !

உடனடியாக
அணி பிரிக்கப்பட்டது !
பணி ஒதுக்கப்பட்டது !

சுற்றுப்புறத்தில்
வீசியது
சுத்தத்தின் புயல் !
அங்கே
ஒவ்வொருவனும் ஆனான்
ஒரு குட்டி முயல் !

கூட்டலும், பெருக்கலும்
தரையில் நிகழ,
சொடுக்கப்பட்ட பம்பரமாய்
யாவரும் சுழல,

பித்தம் பிடித்தது போல
யுத்தம் செய்வது போல
யாவரும் அங்கே
சுத்தம் செய்தார்கள் !

ஓடி ஓடி
சுவரெல்லாம்
வெள்ளையடித்தார்கள் !
தேடித் தேடி
தூசியைக்
கொள்ளையடித்தார்கள் !

வேர்த்து வேர்த்து
கோலங்கள் இடப்பட்டன !
பார்த்துப் பார்த்து
பூஞ்செடிகள் நடப்பட்டன !

தலைமையாசிரியர்
மூக்கு விடைத்தபடி
மேற்பார்வை பார்த்தார் !

நோட்டம்
முடிந்ததும்
கூட்டம் நடந்தது !

பாக்கி இருப்பவை
பட்டியல் போடப்பட்டன !

அதன் படி,

வளாகமெங்கும்
வண்ணங்கள் தீட்டப்பட,
ஆங்காங்கே
கம்பீரமாய்
கொடிகள் நாட்டப்பட,
வாழ்த்துரைகள்
மீண்டும் மீண்டும்
வாசித்துக் காட்டப்பட,
நேரம் இல்லையென்று
கழிவறை மட்டும்
கமுக்கமாய்ப் பூட்டப்பட,

அந்த நாளும்
வந்து விட்டது !

ஆர்ப்பரித்தது
பார் !
கூடி நின்றது
ஊர் !
வரிசை கட்டியது
கார் !
தோற்றுப் போனது
தேர் !

அமைச்சர்
வந்திறங்கினார் !

இருமுறை
இருமினார் !
தொண்டையை
செருமினார் !

வெயில் ஆகாமல்
வியர்வையில்
பிசுபிசுத்தார் !
அப்புறம் குனிந்து
உதவியிடம்
கிசுகிசுத்தார் !

உதவி,
தலைமையாசிரியரை
நெருங்கி,
அவர் காதோடு
சொன்னார்,

" தலைவருக்கு
கொஞ்சம் போல சர்க்கரை !
சில நிமிடங்கட்கு ஒருமுறை
சிறுநீர் கழித்தாக வேண்டும் !
கொஞ்சம் உங்கள்
கழிவறையைக் காட்டுங்கள் ! "Comments

 1. பள்ளி பருவத்தின்
  நினைவுகளை
  மீள் பிரசுரிக்கிறது

  உங்கள் வரிகள்

  வரி வரியை
  பள்ளியை சுற்றி
  வட்டம் போட்டு இருக்கிறீர்கள் ....

  நிதர்சனம் கண் முன்
  நிழலாடுது .........

  சமூகத்தின் அவலத்தை
  சாட்டையால் அடித்தது போல ......

  சுத்தம் செய்ய வேண்டிய இடம் தவிர
  அனைத்தும் சுத்தம் .........

  மனித மனம் போல
  அசுத்தத்தின் மறைவிடங்கள்

  ஆழ வெளிபடுகிறது கவிதையில்

  பாராட்டுக்கள் ..........

  ReplyDelete
 2. அப்பா ! கவிதை என்று நான் நினைத்துக் கொண்டு எழுதியதை விட அதற்கு கவிதையாக ஒரு பின்னூட்டம் இட்டுள்ளீர்களே, அது இன்னும் கவிதையாக இருக்கிறது ! சில நேரங்களில், ஆட்டைக் கொண்டு போய் சிம்மாசனத்தில் ஏற்றினால், அது கம்பீரமாகத் தெரியுமாம் ! அது போலத் தான், உங்கள் சிம்மாசனப் பின்னூட்டத்தில் எனது ஆட்டுக் கவிதை கம்பீரமாய்த் தெரிகிறது ! நன்றி

  ReplyDelete
  Replies
  1. எதையும் பிரமாண்டமாய் பார்க்கும் அதே கண்தான் புள்ளியையும் பார்க்கிறது

   நன்றி நண்பா

   Delete

Post a Comment

Popular posts from this blog

திருமணம் 2013 


' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
--------------------------------------------

இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
--------------------------------------------

திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
--------------------------------------------

மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
--------------------------------------------

குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
--------------------------------------------

ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
--------------------------------------------

காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
--------------------------------------------

தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------…
பிரிந்த காதலி

அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப…
குறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .

தடயம்

எனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா ? சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் ? எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் ? வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .
என் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை " மதன சுந்தரி " டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ? எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் " ஆயாக்கள் " தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே " கடுப்பு முடியாக " இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …