Skip to main content
புனிதம்





ஓட ஆரம்பித்தது
ரயில் !
ஆடி ஆடி
போவதில் தான்
என்ன ஒரு
ஒயில் !
கூ கூ எனக்
கூவுவதில்
அது ஒரு குயில் !,
ஓரிரு நிமிடத்தில்
ஏற்படும்
தன்னிலை மறந்த
துயில் !

போய்க்
கொண்டிருக்கிறேன்
ஊர் !
எங்கெங்கோ
கிளை பரப்பினும்
அங்குதானிருக்கிறது
வேர் !

புறப்படும் முன்பே
ஆண்டவனிடம்
வேண்டியிருந்தேன் !
மனப் பரப்பில்
ஆசைப் பள்ளம்
தோண்டியிருந்தேன் !

அப்படியென்ன
ஆசை அது ?

பயணத்தின் போது
எதிரே வேண்டும்
இளமையான ஒரு
 பெண் !
அப்புறம்
அரும்பாடுபட்டாவது
அறிய வேண்டும்
அவளது
அலைபேசியின் எண் !

நானும் அவளும்
ஒருவரையொருவர்
பார்க்க வேண்டும் !
கண்ணோடு கண்
கோர்க்க வேண்டும் !
இதயத்தை
இடம் மாற்றி
சேர்க்க வேண்டும் !
இளமை வேருக்கு
காதல் ரசம்
வார்க்க வேண்டும் !

பக்குவமாய்
இதைத் தான்
இறைவன் காதில்
போட்டிருந்தேன் !
எண்ணியது
ஈடேறும்படி
ஈசனவன் காலைப் பிடித்துக்
கேட்டிருந்தேன் !

அப்போது
அங்கு வந்திட்டாள்
அட்டகாசமாய்
ஒருத்தி !
இதயத்தில் வெடித்தது
பஞ்சு பஞ்சாய்
பருத்தி !

பார்த்ததுமே
புன்னகை !
சத்தியமாய்த்
தோற்றது
அவளணிந்த
பொன்னகை !

ஆஹா .........

வினாடியில்
வண்ணமாகிவிட்டது
புவி !
நன்றாகத்தான்
கேட்கிறது
இறைவனுக்கு
செவி !

ம்கும்
என்றொரு
கனைப்பு !

நிமிர்ந்து பார்த்தால்
நின்றிருந்தான்
நடுத்தர வயதுக்காரன் !

அநேகமாய்
அவன்
அவளுக்கு
அப்பனாயிருக்கலாம் !

ச்சே !

கெட்டதே
குடி !
பட்டென்று அறுந்ததே
பறந்து கொண்டிருந்த
கொடி !

அவள்
என்னெதிரே
வந்தமர்ந்தாள் !
வா ! வா !
அவளருகே
அந்த அப்பன் !
போ ! போ !

நான்,
தாடையை
சொறிந்தேன் !
வெறுப்போடு
அத்தகப்பன் மீது
பார்வையை
எறிந்தேன் !

அவன்
தன் மகளுக்கு
பிஸ்கோத்து
பிரித்துக் கொடுத்தான் !
பிறகு
புட்டி திறந்து
பாசமாய்,  நீர்
பருகக் கொடுத்தான் !

அவள்
தந்தை தோளில்
தலை சாய்த்துக்கொண்டாள் !
அவன்
அன்பொழுக
மகளின் தலையைத்
தடவிக் கொடுத்தான் !

சட்டென்று
சூழலில்
புனிதம் வந்து
ஒட்டிக் கொண்டது !
ஏனோ தெரியவில்லை
கண்ணீரானது
கண்ணில் வந்து
முட்டிக் கொண்டது !

சுற்றிலும் பார்த்தேன் !

கிழவியொருத்தி
நின்றிருந்தாள் !

இங்கே
அமரவேண்டியவள்
இப்போதைக்கு அவள்தான் !

எழுந்து போனேன் !
 என்னிருக்கையில்
அமரச்சொன்னேன் !

கேட்டதும்
கிழவிக்கு
வாயெல்லாம் பல் !
சட்டென்று
இறங்கியது
பாரமாயிருந்த
ஒரு பெரிய கல் !

கதவருகே
காலியாயிருந்தது !

காற்று வந்து
உரிமையோடு
தலை கலைத்தது !

வெளியே
தெரிந்த இயற்கையோடு
நான்
பேசத் தொடங்கினேன் !



Comments

  1. ஒரு மெக்கா சீரியல் பார்த்து முடித்ததுபோல் இருந்தது
    தன்கள் கவிதை அருமை!..தொடர வாழ்த்துக்கள் .மிக்க
    நன்றி பகிர்புக்கு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றி அன்பு

      Delete
  2. ஒரு ஆணின் மனநிலை
    அப்பட்டமான படபிடிப்பு ..........

    சிற்றின்பத்தின் கடைசி புள்ளியில்
    தொடருது பேரின்பத்தின் பயணம் .....

    அருமையான உள்ளீடுகள் தொடருங்கள் நண்பா
    வார்த்தைகள் தோறும் மோனையும் எழுதுகையும் தோரணமாய் அலங்கரிக்கிறது உங்கள் கவிதையை

    ReplyDelete
    Replies
    1. கவிதையில் உள்ள பேரின்பத்தின் சாரத்தை அப்படியே உள்வாங்கி , பின்னூட்டமாக வெளியிட்டதற்கு நன்றி தோழி

      Delete
  3. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர