Skip to main content
பிரம்மச்சரியம் 



 


திருமணம்
இல்லாமல்
வாழ முடியாதா ?
இருமனம்
இணையாமல்
இருக்க முடியாதா ?

இரண்டு மாதங்களில்
அகவை முப்பது
கடக்கப் போகிறது !
முதுமை வந்து
மொத்த உடம்பையும்
அடக்கப் போகிறது !

நிரந்தரம் தான்
இந்தத் தனிமை !
இருக்கவே போவதில்லை
இனி  இனிமை !

வற்றி வற்றியே
காய்கிறது
ஆண்ட்ரோஜன்  !
பகட்டை நோக்கியே
பாய்கிறது
ஈஸ்ட்ரோஜன்  !  

தோலில் இல்லை
சிவப்பு !
வாழ்வில் இல்லை
உவப்பு !
நடுத்தரமென்றாலே
இங்கு கசப்பு !
நடப்பதெல்லாம் 
வெறும் பசப்பு !

வசந்தத்திற்கு
வைக்கப்பட்டது சிறை !
இனி வாழ்வென்பது
வெறும் அறை !
நிரந்தரமாகி விட்டது
குறை !
இது  எந்தப் பாவத்தின்
கறை ?

ஒவ்வொருத்திக்கும்
வேண்டும்
அனைத்திலும்
சிறந்தவன் !
ஒன்று குறைந்தாலும்
அவள்கட்கு
அவன்  இறந்தவன் !

கருணையில்லாதவன்
காமன் !
இனி உருவாக மாட்டான்
மருமகனுக்கொரு
மாமன் !

பாழும் உலகில்
பெண்களே இல்லை !
மக்கட்தொகையில்
அவர்கள்
எண்களே இல்லை !

இனி
புகைக்க வேண்டும்
கஞ்சா !
தனிமையை விட
அது
அவ்வளவு பெரிய
நஞ்சா ?

பழகி விட்டது
இந்த
பிரமச்சரியம் !
திருமணம் நடந்தால்
அது
உலக ஆச்சர்யம் !

அடுத்த பிறவியிலாவது
கிட்டுமா
இல்லறத்தின் ஆசி ?
எங்காவது
கிடைப்பாளா
அன்பு செலுத்தும் தாசி ???








Comments

  1. ஒரு 20 வருடத்திற்கு முன்பெல்லாம் முதிர் கன்னிகள் குறித்த கவிதைகள் அதிகம்.இதோ ஒரு முதிர் கண்ணன் பற்றிய கவிதை.காரணம் நாடு முழுதும் உசிலம்பட்டி ஆனதுதான். இதே ரீதியில் போனால் செவ்வாய் கிரகத்துக்குத்தான் போக வேண்டும் பெண் தேட. பெண் குழந்தையை போற்றுங்கள்

    ReplyDelete
  2. அந்த முதிர்கன்னிகள் விட்ட சாபமோ என்னவோ, எங்களைப் போன்ற முதிர் கண்ணன்கள் கடைசி வரை திருமணம் ஆகுமா ஆகாதா என்று புதிர்கண்ணன்களாகவே இருக்கிறோம் !
    வாசித்து கருத்து சொன்னமைக்கு " அகில உலக முதிர் கண்ணன்களின் " சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. நடப்பது எல்லாம் நன்மைக்கு தான் நண்பா ஒரு தேவதையின் வருகைக்காக காத்திருக்க சொல்லுகிறார் கடவுள் காத்திரு ......வரிகளில் தெரிகிறது மனதின் ரணம் வார்த்தைகளில் விழுகிறது கனம்

    ReplyDelete
  4. இரணமான மனதை மயிலிறகால் வருடியது போல இருக்கிறது தங்கள் ஆறுதல் மொழி ! மிக்க நன்றி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர