Skip to main content
பிரம்மச்சாரி - 2 




ச்சை !
வாழ்ந்து வாழ்ந்து
அலுத்து விட்டது !
ஏங்கி ஏங்கி
இதயம்
உலுத்து விட்டது !

சொடுக்குப்
போடுவதற்குள்
இதோ
வந்துவிடும்
நாற்பது !
திருமணப் போட்டியில்
எத்தனை முறைதான்
தோற்பது ?

ஆணும் பெண்ணும்
சேர்ந்து படிப்பதுதான்
வாழ்க்கை எனும்
பாடம் !
கால்களே போனபின்பு
காளைகளுக்கு எதற்கு
லாடம் ?

முன்னூறு
ஆண்களுக்கு
பெண்கள் மொத்தமே
மூன்றுதான் !
நகரப் பேருந்து கூட
அதற்கொரு நல்ல
சான்றுதான் !

பகிர்ந்துண்ண
காதலியில்லை
கடற்கரையில் வாங்கிய
சுண்டலை !
யார் கரைசேர்ப்பார்கள்
எங்கள்
வாலிபம் என்னும்
வண்டலை ?

எந்தப்பாலினமும்
எதிர்பார்ப்பது
எதிர் பாலினத்தின்
சூழலை !
எங்கு போய்
முறையிடுவது
பெண்சிசுக்கொலை என்ற
ஊழலை ?

பெண்ணை
எதிர்பார்த்து
கண்ணை
மூடிக்கொண்டு
ஏதாவதொரு
எண்ணை
அலைபேசியில்
அழுத்தினால்
எதிர்முனையில்
ஏக்கத்தோடு
ஹலோ சொல்கிறான்
' என்னைப் போல் ஒருவன் ' !

பெண் பிறந்தாலே
நாளை
பட்டாசு வெடிக்கும்
நிலை வரும் !
கனிந்து நிற்கும்
கிழவிகளுக்கும்
கண்ணம்மா பேட்டையில்
சிலை வரும் !

பொன்னகையா
கேட்கிறோம்
சம்மதம் சொல்லும்
புன்னகை தானே
கேட்கிறோம் !

வேண்டாம்
வரதட்சணை
என்றாலும்
வரா  தட்சணையாகத்தானே
இருக்கிறது
வாழ்க்கைத்துணை !

விதவையாவது
வாழ்வு கொடுப்பாளா
என்று போனால்,
விண்ணப்பம் வாங்க
வரிசையில்
வரச்சொல்கிறார்கள் !

விவாகரத்தானவளுக்கு
விண்ணப்பம்
தீர்ந்தே விட்டதாம் !

விபச்சாரியிடம்
போய்க் கேட்டால்
அவள்
இப்படிச்சொல்கிறாள்,

" வருடக்கணக்கில்
ஓசியாய் இருப்பதற்கு
வேசியாய் இருப்பதே
ஈசியாய் இருக்கிறது
ஏசி விடுவதற்குள்
எழுந்து ஓடு "

மண்ணுக்காக அல்ல
பெண்ணுக்காக
உருவாகப் போகிறது
இங்கு
இன்னொரு மகாபாரதம் !

பிறக்கப் போகிறார்கள்
பல கோடி
பாண்டவர்கள் !
பல்லாயிரம் கோடி
பீஷ்மர்கள் !

அப்போதும் ,
பாஞ்சாலிகளுக்குத்தான்
நிலவப் போகிறது
கடுமையான
பஞ்சமே !
இருநூறாவது
தவணையில் தான்
கிடைக்கப்போகிறது
இணை சேர்வதற்கான
மஞ்சமே !

காமச்சூட்டை
எத்தனை நாள்தான்
குப்புறப்படுத்தே
அப்புறப் படுத்துவது ?

அட !
அது கிடக்கட்டும் !

மனதைத் தழுவவும்
மங்கையில்லையே !
மொண்டு குடிக்கவும்
கங்கையில்லையே !

சட்டமாக்கப்பட்ட
ஆண் - ஆண் இணைவு
நாளை
கட்டாயமாவதற்குள்
செத்து விட வேண்டும் !!!


Comments

  1. விரக்தியில் எழுதிய கவிதையோ
    சொந்த அனுபவமா,இல்லை நிறைய பார்த்த அனுபவமா . இந்த அளவு பாதிப்பு இன்னும் ஒரு 15 வருடங்களில் ஏற்பட்டுவிடும் என எண்ணுகிறேன்.இப்போதே வந்துவிட்டதாகக் கவிதை சொல்கிறது. உண்மையா?

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி ! இக்கவிதையில் ( ? ) எழுபத்தி ஐந்து சதவிகிதம் சொந்த, நொந்த அனுபவம் தான். மீதி கண்டதையும் கேட்டதையும் வைத்து எழுதியது. இன்னும் பதினைந்து ஆண்டுகளில் இந்த நிலை வந்துவிடுமா ? அந்த மகாவிஷ்ணு பாற்கடலில் ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டு ஆண் குழந்தைகள் சகட்டு மேனிக்குப் பிறந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் போலும். இக்கவிதையில் சற்று மிகையாக சித்தரிக்கப்பட்ட அந்த " நிலை " அடுத்த பதினைந்து வருடங்களில் வருவது நம் சமூகத்துக்கு நிச்சயமாக, சத்தியமாக, உறுதியாக, ஆரோக்யமானதல்ல.

    கருத்துக்கு மீண்டும் நன்றி !

    ReplyDelete
  3. தேவா இந்த நிலை, மாறும் ஒருநாள், சங்கீதா போல் ஒரு பெண் வருவாள் ஒருநாள், அந்நாள் உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கெல்லாம் திருநாள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர