தொண்டன்
அவன் பெயர்
குப்பன் !
அவன்
மூன்று பிள்ளைகளுக்கு
அப்பன் !
பிள்ளைகள்
மூன்றுமே
ஆண்கள் !
அவர்களே
அவன் நம்பிக்கையின்
தூண்கள் !
குப்பன்
குடியிருப்பது
கிண்டி !
இழுக்கிறான்
கை வண்டி !
வியர்வைக்குப் பிறகே
எடுக்கிறான் உண்டி !
யாரையுமில்லை
அவன் அண்டி !
அவனுக்கும்
இருக்கிறது
ஒரு கட்சி !
அக்கட்சியில்
அவன்
சிறகொடிந்த பட்சி !
ஒருநாள்,
குப்பன்
கட்ட ஆரம்பித்தான்
தோரணம் !
அதற்குக்
கிடைத்து விட்டது
அவனுக்குக் காரணம் !
அவன்,
தலைவன் வருகிறானாம் !
வாக்குக் கேட்டு
வாக்குறுதிகள் தருகிறானாம் !
குப்பன் ,
விடியும் வரை
சுவரொட்டி ஓட்டினான் !
முடியும் வரை
வியர்வையைக் கொட்டினான் !
தலைவனுக்குத்
தெரியாது
குப்பனின் முகம் !
குப்பனுக்குத்
தெரியாது
தலைவனின் அகம் !
அத்தலைவனின்
காரியதரிசி
ஒரு பெண் !
பெண்ணென்றால்
தலைவனுக்கு
உடம்பெல்லாம் கண் !
ஓ !
அதெல்லாம்
மேலிட விவகாரம் !
மேலும் பேசக்கூடாது !
ம்க்கும் !
குப்பன்
கூட்டத்தில்
காத்திருந்தான் !
தலைவன்
ஏறினான் மேடை !
பேச்சில் அவன்
நிற்காத ஓடை !
அவன்,
தொண்டை கிழியப்
பேசினான் !
எதிர்கட்சிகளை
ஏசினான் !
தன் தவறுகளை
மழுங்கடித்துப் பூசினான் !
உட்கட்சிப் பூசலுக்கு
போலியாய்க் கூசினான் !
பக்கத்திலேயே
வேட்பாளன் ,
கைகட்டி நின்றான் !
கனவு கண்டு
தேர்தலில் வென்றான் !
பேச்சு முடிந்ததும்
விநியோகிக்கப்பட்டது
மது !
முன்பே சொல்லப்பட்டு
லாரி லாரியாய்
வந்திறங்கியது
அது !
அப்புறம்
சுடச்சுட
பிரியாணி !
பக்கத்துத் தியேட்டர்
பலான படத்தில்
பிரியாமணி !
குடித்தே
நிரம்பியது
குப்பனின் வயிறு !
அவனுக்கு
இங்கிருந்தே தெரிந்தது
சொர்கத்திற்குக் கயிறு !
இரண்டாமாட்டம்
பார்த்து விட்டு
குப்பன் சாலையில்
நடந்து கொண்டிருந்தான் !
போதையில்
மிதந்து மிதந்து
பூமியைக்
கடந்து கொண்டிருந்தான் !
கண்ணை
மறைத்தது
போதை !
சுத்தமாய்த் தெரியவில்லை
பாதை !
சாலையை
மூடியிருந்தது
தார் !
அவ்வழியே
வந்து கொண்டிருந்தது
கார் !
கண்ணிமைக்கும் நேரம்,
குப்பன்
தூக்கி எறியப்பட்டான் !
மண்டையில்
அடிபட்டு
உயிரில்லாதவன் என்று
அறியப்பட்டான் !
பாதியிலேயே
முடிந்தது
குப்பனின் சரித்திரம் !
வாழ்நாளுக்கு
அவனுக்கு அப்படியென்ன
தரித்திரம் ?
அடுத்து
நடந்தது தேர்தல் !
வென்று விட்டான்
வேட்பாளன்
அந்தத் தொகுதியில் !
ஒட்டு வித்தியாசமோ
எண்ணிக்கை மிகுதியில் !
ஒரு
ஐந்து நட்சத்திர
ஹோட்டலில்
வெற்றியைக் கொண்டாடினான்
தலைவன்
கட்சியின்
முக்கியமானவர்களோடு !
அடித்தட்டு மக்களின் உண்மையான நிலையை எடுத்துக்காட்டுகிறது கவிதை எப்பத்தான் புரிந்து கொள்வார்களோ அரசியல்வாதிகளை .வாழ்த்துக்கள்
ReplyDeleteநீங்கள் எல்லாம் எந்தன் கவிதையை வாசிப்பதே பெரிய விஷயம். வாசித்து கருத்தும் சொல்வது அதைவிடப் பெரிய விஷயம். மிக்க மிக்க நன்றி நன்றி தோழி
Deleteவார்த்தைகளின்
ReplyDeleteதேர்வில் மோனைகளின் ராகம் இசைகிறது
சமூகத்தின் சாடலில் தெரிகிறது விம்மல்
//பாதியிலேயே
முடிந்தது
குப்பனின் சரித்திரம் !
வாழ்நாளுக்கு
அவனுக்கு அப்படியென்ன
தரித்திரம் ? //
என்ன ஒரு வார்த்தை விளையாட்டு ? உள்ளீடுகளின் குறியீடுகள் என்னை ஆச்சர்ய பட வைக்கிறது ..........அருமை நண்பா உங்கள் எழுத்து நடை
எங்கே சில பதிவுகளுக்குத் தோழி, பின்னூட்டம் இடவில்லையே என்று பார்த்தேன். கொஞ்சம் பயந்தும் விட்டேன். இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டு என்னை ஆசுவாசப் படுத்தி இருக்கிறீர்கள். நன்றியோ நன்றி !
Delete