Skip to main content
தொண்டன் 





அவன் பெயர்
குப்பன் !
அவன்
மூன்று பிள்ளைகளுக்கு
அப்பன் !

பிள்ளைகள்
மூன்றுமே
ஆண்கள் !
அவர்களே
அவன் நம்பிக்கையின்
தூண்கள் !

குப்பன்
குடியிருப்பது
கிண்டி !
இழுக்கிறான்
கை வண்டி !
வியர்வைக்குப் பிறகே
எடுக்கிறான் உண்டி !
யாரையுமில்லை
அவன் அண்டி !

அவனுக்கும்
இருக்கிறது
ஒரு கட்சி !
அக்கட்சியில்
அவன்
சிறகொடிந்த பட்சி !

ஒருநாள்,

குப்பன்
கட்ட ஆரம்பித்தான்
தோரணம் !
அதற்குக்
கிடைத்து விட்டது
அவனுக்குக் காரணம் !

அவன்,
தலைவன் வருகிறானாம் !
வாக்குக் கேட்டு
வாக்குறுதிகள் தருகிறானாம் !

குப்பன் ,
விடியும் வரை
சுவரொட்டி ஓட்டினான் !
முடியும் வரை
வியர்வையைக் கொட்டினான் !

தலைவனுக்குத்
தெரியாது
குப்பனின் முகம் !
குப்பனுக்குத்
தெரியாது
தலைவனின் அகம் !

அத்தலைவனின்
காரியதரிசி
ஒரு பெண் !
பெண்ணென்றால்
தலைவனுக்கு
உடம்பெல்லாம் கண் !

ஓ !
அதெல்லாம்
மேலிட விவகாரம் !
மேலும் பேசக்கூடாது !

ம்க்கும் !

குப்பன்
கூட்டத்தில்
காத்திருந்தான் !

தலைவன்
ஏறினான் மேடை !
பேச்சில் அவன்
நிற்காத ஓடை !

அவன்,
தொண்டை கிழியப்
பேசினான் !
எதிர்கட்சிகளை
ஏசினான் !
தன் தவறுகளை
மழுங்கடித்துப் பூசினான் !
உட்கட்சிப்  பூசலுக்கு
போலியாய்க் கூசினான் !

பக்கத்திலேயே
வேட்பாளன் ,
கைகட்டி நின்றான் !
கனவு கண்டு
தேர்தலில் வென்றான் !

பேச்சு முடிந்ததும்
விநியோகிக்கப்பட்டது
மது !
முன்பே சொல்லப்பட்டு
லாரி லாரியாய்
வந்திறங்கியது
அது !

அப்புறம்
சுடச்சுட
பிரியாணி !
பக்கத்துத் தியேட்டர்
பலான படத்தில்
பிரியாமணி !

குடித்தே
நிரம்பியது
குப்பனின் வயிறு !
அவனுக்கு
இங்கிருந்தே தெரிந்தது
சொர்கத்திற்குக் கயிறு !

இரண்டாமாட்டம்
பார்த்து விட்டு
குப்பன் சாலையில்
நடந்து கொண்டிருந்தான் !
போதையில்
மிதந்து மிதந்து
பூமியைக்
கடந்து கொண்டிருந்தான் !

கண்ணை
மறைத்தது
போதை !
சுத்தமாய்த் தெரியவில்லை
பாதை !

சாலையை
மூடியிருந்தது
தார் !
அவ்வழியே
வந்து கொண்டிருந்தது
கார் !

கண்ணிமைக்கும் நேரம்,

குப்பன்
தூக்கி எறியப்பட்டான் !
மண்டையில்
அடிபட்டு
உயிரில்லாதவன் என்று
அறியப்பட்டான் !

பாதியிலேயே
முடிந்தது
குப்பனின் சரித்திரம் !
வாழ்நாளுக்கு
அவனுக்கு அப்படியென்ன
தரித்திரம் ? 

அடுத்து
நடந்தது தேர்தல் !

வென்று விட்டான்
வேட்பாளன்
அந்தத் தொகுதியில் !
ஒட்டு வித்தியாசமோ
எண்ணிக்கை மிகுதியில் !

ஒரு
ஐந்து நட்சத்திர
ஹோட்டலில்
வெற்றியைக் கொண்டாடினான்
தலைவன்
கட்சியின்
முக்கியமானவர்களோடு   !







Comments

  1. அடித்தட்டு மக்களின் உண்மையான நிலையை எடுத்துக்காட்டுகிறது கவிதை எப்பத்தான் புரிந்து கொள்வார்களோ அரசியல்வாதிகளை .வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எல்லாம் எந்தன் கவிதையை வாசிப்பதே பெரிய விஷயம். வாசித்து கருத்தும் சொல்வது அதைவிடப் பெரிய விஷயம். மிக்க மிக்க நன்றி நன்றி தோழி

      Delete
  2. வார்த்தைகளின்
    தேர்வில் மோனைகளின் ராகம் இசைகிறது
    சமூகத்தின் சாடலில் தெரிகிறது விம்மல்
    //பாதியிலேயே
    முடிந்தது
    குப்பனின் சரித்திரம் !
    வாழ்நாளுக்கு
    அவனுக்கு அப்படியென்ன
    தரித்திரம் ? //

    என்ன ஒரு வார்த்தை விளையாட்டு ? உள்ளீடுகளின் குறியீடுகள் என்னை ஆச்சர்ய பட வைக்கிறது ..........அருமை நண்பா உங்கள் எழுத்து நடை

    ReplyDelete
    Replies
    1. எங்கே சில பதிவுகளுக்குத் தோழி, பின்னூட்டம் இடவில்லையே என்று பார்த்தேன். கொஞ்சம் பயந்தும் விட்டேன். இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டு என்னை ஆசுவாசப் படுத்தி இருக்கிறீர்கள். நன்றியோ நன்றி !

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர