Sunday, April 27, 2014










அவன்
சொல்லிக்கொண்டிருப்பது
ஏற்கனவே
எனக்குத்தெரிந்திருக்கிறது !
ஆனாலும் நான்
தெரியாதது போல்
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

தான்
சொல்லிக்கொண்டிருப்பது
ஏற்கனவே
எனக்குத்தெரிந்ததென்பது
அவனுக்கும் தெரிகிறது !
ஆனாலும் அவன்
சொல்லிக்கொண்டிருக்கிறான் !

இவ்வாறாக நாங்கள்
பேசிக்கொண்டிருக்கிறோம் !

No comments:

Post a Comment